Bigg Boss Tamil 3, (15.08.19) Written Update: ஆண்களா? பெண்களா? சபாஷ் சரியான போட்டி!

Bigg Boss Tamil 3, Episode 53 Written Update: கஸ்தூரியின் சமையலை (அவர் செய்த பொங்கலை) பலரும் கலாய்த்தனர். இதில் கஸ்தூரியும் சேர்ந்து சிரித்ததால், அங்கு கலகலப்பு நிலவியது. 

Bigg Boss Tamil 3 Episode 53, Bigg Boss Tamil 3 Day 53
பிக்பாஸ் தமிழ் 3

Bigg Boss Tamil 3 Episode 53: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் வனிதா விஜயக்குமார் எண்ட்ரியானதும் சலசலப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. நேற்றைய எபிசோட்டில் காலை எழுந்ததுமே தனது வேலையை சிறப்பாக தொடங்கியிருந்தார் வனிதா.

லாஸ்லியா மற்றும் அபிராமி குறித்து, சேரன் மற்றும் ஷெரினிடம் வழக்கம்போல் புரணி பேசினார். ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் அபிராமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், பிக்பாஸ் அறிவிப்பு வருவதற்கு முன்பே அவரை விடுவிக்க விரும்பினார், வீட்டின் தலைவர் சாண்டி. இதனால் கஸ்தூரிக்கும் சாண்டிக்கும் சின்ன வாக்குவாதம் நடந்தது. பின்னர் ஜெயில் தண்டனை முடிந்ததாக பிக்பாஸே அறிவித்தார்.

Bigg Boss Tamil 3, (16.08.19) Written Update: பேசச் சொல்வது அத்து மீறலா? கொதித்தெழுந்த கஸ்தூரி!

தர்ஷன், கவின், சாண்டி, முகென் ஆகியோரிடம் சகஜமாக பழகி வந்த சேரன், திடீரென அவர்களை வாங்க, போங்க, சார் என்று குறிப்பிட்டு அழைக்கத் தொடங்கினார். இதை கவனித்த நான்கு பேரும் வழக்கம் போல் தங்களுக்குள் பேசி கொண்டனர்.

பின்னர் பிக்பாஸ் குடும்பத்தினருக்கு, ‘சபாஷ் சரியான போட்டி’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டுக்குள் ஆண்கள் பெண்களும் பிரிந்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது. இதற்கு ஏற்றார் போல், இந்த விவாத டாஸ்க்கில் ஆண்கள், பெண்கள் தனித்தனி அணியாக பிரிந்தனர்.

இதில் சிறந்த தலைவர்களாக இருந்தவர்கள் யார்..? நன்றாக சமைக்கத் தெரிந்தவர்கள் யார்..? தொடர்பான விவாதங்களில் பெண்கள் அணியினர் வெற்றி பெற்றனர். இதற்கிடையே கஸ்தூரியின் சமையலை (அவர் செய்த பொங்கலை) பலரும் கலாய்த்தனர். இதில் கஸ்தூரியும் சேர்ந்து சிரித்ததால், அங்கு கலகலப்பு நிலவியது.

பின்னர் இந்த விவாதத்தின் போது, வனிதாவுக்கும், தர்ஷனுக்கும் சிறு சலசலப்பு ஏற்பட்டது. ஆண்கள், பெண்களில் சிறந்த தோழமை எண்ணம் கொண்டவர்கள் யார் என்ற கேள்விக்கு, ”எனக்கு ஒரு பிரச்னை ஏற்பட்ட போது முகென் எனக்கு ஆதரவாக நிற்கவில்லை” என்று தெரிவித்தார் அபிராமி. இது மேலும் பிரச்னையை ஏற்படுத்தியது.

ஒருவழியாக இந்த விவாதம் முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பினர் ஹவுஸ்மேட்ஸ்!

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 3 episode 53 task vanitha vijayakumar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com