Bigg Boss Tamil 3 Episode (55): பிக் பாஸ் 3 நிகழ்ச்சி , ஒரு வாரம் மகிழ்ச்சியாகவும், மற்றொரு வாரம் சண்டை சச்சரவுடனும் தான் சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் குதூகலமாக சென்ற பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தற்போது தற்கொலை முயற்சி வரை சென்றுள்ளது. ஆம், மதுமிதா தான் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறையை மீறி செயல்பட்டதாக கூறி இந்நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, வழக்கம்போல் கமல்ஹாசன் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் கலந்துரையடினார். வெளியேறிய பின்னர் வீட்டிற்கு வந்த வனிதாவின் வருகையை நீங்கள் எப்படி ஏற்றுக்கொண்டீர்கள் என்று ஒவ்வொருவரிடமும் கேட்டறிந்தார். ஏற்கனவே முடிந்த பிரச்சனையை மீண்டும் மீண்டும் கிளறி பிக் பாஸ் வீட்டுக்குள் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளார் வனிதா.
Bigg Boss Tamil 3, (18.08.19) Written Update: சிரித்துக் கொண்டே பிக்பாஸிலிருந்து வெளியேறிய அபிராமி! கதறி அழுத லாஸ்லியா!
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த பிரச்னையில், ஆங்கிலம் அதிகம் பேசுகிறார் என அபிராமியை ஜெயிலுக்கு அனுப்பியது மதுமிதாவுக்கு பிடிக்கவில்லை. இதுதொடர்பாக சேரனிடம் அதிருப்தியை தெரிவித்தார். ஆனால் சேரனோ தன்னால் இதுவரை பிக்பாஸ் வீட்டில் தலைவராக முடியவில்லை என்று ஆதங்கத்தை தெரிவித்தார். மேலும், முடிந்தவரையில் உங்களுடைய கருத்தை பதிவு செய்யுங்கள். முடியவில்லை என்றால் அவர்களிடமிருந்து அகன்றுவிடுங்கள் என்று மதுமிதாவிடம் கூறினார் சேரன்.
இதற்கிடையில், இதே விவகாரம் குறித்து கவினும் மதுமிதாவும் பேசி கொண்டிருந்தனர். ஆனால் மதுமிதாவை கவினால் சமாதானம் செய்ய முடியவில்லை. இதை கவனித்த தர்ஷன், உடனே கவினை உள்ளே கூட்டிச் சென்றார். தன்னை அவமதித்து கவினை தர்ஷன் உள்ளே கூட்டிச் சென்றார் என மீண்டும் பிரச்னையை இழுத்தார் மதுமிதா.
பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து ஆண் ஆதிக்கம் தலை தூக்குவதாகவும், பெண்கள் இங்கு அடிமைப்படுத்தப்படுகின்றனர் என்றும் சண்டையை இழுத்தார். அப்போது சாண்டி, தர்ஷன், கவின் ஆகியோருடன் அவருக்கு பிரச்னை உருவானது. வழக்கம் போல பிரச்னையை கொளுத்தி விட்ட வனிதா, ஓரமாக நின்று வேடிக்கை தான் பார்த்தார்.
மறுபடியும், இந்த விவகாரம் தொடர்பாக கேட்ட கமல்ஹாசன், அபிராமி – முகென் காதல் கதை குறித்தும் விவரித்தார். கொளுத்தி போட்ட வனிதாவிடம் இந்த பிரச்சனை எங்கு உருவானது என்றும் கேட்டார். சாண்டி, லாஸ்லியா என்று ஒவ்வொருவரிடம் வனிதா என்ன கூறினார் என்பதை கேட்டறிந்தார். இறுதியில் கஸ்தூரி பிரச்சனைக்கு வந்த டுவிட்டரைப் போன்று வீட்டில் என்ன கருத்து சொல்லியிருக்கிறீர்கள் என்று கேட்டார். குறிப்பாக மனித உரிமை மீறல் பிரச்சனை குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து எவிக்ஷன் குறித்து அடுத்த நாள் தெரிவிக்கப்படும் என்பதோடு நேற்றைய பிக் பாஸ் நிறைவடைந்தது..