இது ஓகே என்றால், அதுவும் ஓகே - மவுனமே பதிலாக லோஸ்லியா ; கும்மியால் கலகலப்பான பிக்பாஸ் வீடு

Biggboss update : இது ஓகே என்றால், அதுவும் ஓகே. மீதியை வெளியில் போய் பேசிக்கலாம் என்கிறார் லாஸ்லியா. எனக்கு இனிமேல் உள்ளே, வெளியே எதுவும் இல்லை

Biggboss update : இது ஓகே என்றால், அதுவும் ஓகே. மீதியை வெளியில் போய் பேசிக்கலாம் என்கிறார் லாஸ்லியா. எனக்கு இனிமேல் உள்ளே, வெளியே எதுவும் இல்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bigg boss tamil 3, bigg boss tamil 3 contestants, bigg boss tamil 3 eviction, bigg boss tamil 3 (28-08-19) written update

bigg boss tamil 3, bigg boss tamil 3 contestants, bigg boss tamil 3 eviction, bigg boss tamil 3 (28-08-19) written update, bigg boss tamil 3 episode (66.) written update, bigg boss tamil 3 day (28-08-19) written update, kamal haasan, bigg boss tamil, reality show, bigg boss tamil 3 written update, bigg boss tamil 3 preview, கமல்ஹாசன், லாஸ்லியா, கவின், சேரன்

Bigg Boss Tamil 3 Episode (66):பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தை நோக்கியுள்ளது. கமல்ஹாசன் தோன்று வார இறுதிநாட்களில் மட்டுமே நிகழ்ச்சி சற்று கலகலப்பாக செல்கிறது. 17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இறுதி நாட்களில் 3 போட்டியாளர்கள் மட்டுமே இருப்பார்கள். அதற்கு முன்பாகவே 5 போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில் கலக்கிய சேரன், முகென்!

இந்த நிலையில், நேற்றைய ( ஆகஸ்ட் 28ம் தேதி) பிக் பாஸ் 3 நிகழ்ச்சி சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை படத்தில் இடம்பெற்றுள்ள கட்டிக்கிட என்ற பாடலுடன் தொடங்கியது. இந்த பாடல் முடிந்ததும் போட்டியாளர்களின் கும்மியடி நடனம் அரங்கேறியது. இதில், சேரன், யானை போவதை பாருங்களேன், குதிரை போவதை பாருங்கேன் என்று பாடிக்கொண்டே கும்மியடித்தார். இவருக்கு இணையாக மற்ற போட்டியாளார்களும் பாடிக்கொண்டே நடனமாடினர். முதலில் சாண்டி பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து கும்மியடித்தார்.

இதற்கு அடுத்தபடியாக, வழக்கம் போல் கவின் – லோஸ்லியா உரையாடல் நடந்தது. இதில், கவின், கடந்த 3 வருடங்களுக்கு முன்னாடி நீயே எதிர்பார்த்திருக்கவே முடியாத ஒரு ரிலேஷன் ஷிப்பில் இருந்தேன். கிட்டத்தட்ட 4 முதல் 5 மாதம் வரை தான் ஒண்ணா இருந்தா நேரம். இதைத் தவிர மற்ற நாட்களில் சண்டை, சச்சரவு தான். அதன் பிறகு எல்லாமே வேண்டாம் என்று அவர்கள் சென்றுவிட்டார்கள். இந்த நிகழ்ச்சி, இதற்கு முன்னாடி நடந்த எல்லாவற்றையும் வைத்து வேண்டாம் என்று விட்டுவிட்டார்கள். அப்படி தான் நான் உள்ளே வந்தேன். அதன் பிறகு நீயே யோசிச்சுக்கோ என்று கூறினார். இதில், அதிர்ச்சியடைந்த லோஸ்லியா பதில் எதுவும் பேசவில்லை.

Advertisment
Advertisements

தொடர்ந்து, இது ஓகே என்றால், அதுவும் ஓகே. மீதியை வெளியில் போய் பேசிக்கலாம் என்கிறார் லோஸ்லியா. எனக்கு இனிமேல் உள்ளே, வெளியே எதுவும் இல்லை. உனக்கு புரிய வைக்க வேண்டும் என்பது தான். அவ்வளவு தான் என்றார்.

Bigg Boss Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: