Bigg Boss Tamil 3 Episode 67: கடந்த ஜூன் 23-ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி, 65 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இறுதியாக கடந்த வாரம் கஸ்தூரி, எலிமினேட் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது சேரன், கவின், தர்ஷன், முகென், சாண்டி, வனிதா, ஷெரின், லாஸ்லியா என்று மொத்தம் 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக உள்ளனர்.
இது ஓகே என்றால், அதுவும் ஓகே – மவுனமே பதிலாக லோஸ்லியா ; கும்மியால் கலகலப்பான பிக்பாஸ் வீடு
இந்த வாரம் பிக்பாஸ் வீடு இரண்டு கிராமங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சேரன், தர்ஷன், ஷெரின், கவின் ஆகியோர் ஒரு கிராமமாகவும், வனிதா, சாண்டி, முகென், லாஸ்லியா ஆகியோர் ஒரு கிராமமாகவும் பிரிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் பாரம்பரிய கலைகள் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. அதனை கற்றுக் கொண்ட பின் அதனை அரங்கேற்றி வருகிறார்கள் போட்டியாளர்கள்.
பொம்மலாட்டம் நிகழ்ச்சியும், தெருக்கூத்து நிகழ்ச்சியும் அரங்கேற்றப்பட்ட நிலையில், 67-ம் நாள் ’டியோ டியோ டோலு’ என்ற ‘அவன் இவன்’ பட பாடலுடன் தொடங்கியது. பின்னர் வழக்கம் போல கவின் - லாஸ்லியா தங்களது எதிர்காலம் குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.
தலைவரான வனிதா: சிக்கனுக்காக போராட்டம் நடத்திய பிக்பாஸ் போட்டியாளர்கள்!
நடந்து முடிந்தவைகளை ‘பாஸ்ட்’ என முடித்து விடலாம். எதிர்காலத்தைப் பற்றி வேண்டுமானால் இப்போது பேசலாம் என்றார். உடனே லாஸ்லியா ‘டாட்டா’ காட்ட, ”இப்போதே டாட்டா காட்டா ஆரம்பிச்சிட்ட, இந்த வாரம் நான் தான் வெளியில் போவேன். நான் வெளியில் சென்ற பிறகு நீ என்ன செய்கிறாய் என்று டிவியில் பார்ப்பேன்” என்றார் கவின்.
பின்னர் வில்லுப்பாட்டு கலை நிகழ்ச்சிகளை போட்டியாளர்கள் அரங்கேற்றினர். 3-ம் நாளாக பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு நாட்டுப்புற கலைஞர் காளீஸ்வரன் வில்லுப்பாட்டு கற்றுக்கொடுத்தார். இதையடுத்து, சேரன் தனது குழுவினருடன் இணைந்து முதலில் வில்லுப்பாட்டு பாடினார். அதே போன்று சாண்டியும் தனது மகளைப் பற்றி வில்லுப்பாட்டு பாடினார்.
பின்னர் வனிதா அணியினர், பெற்றோர்களின் பிரிவால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து வில்லுப்பாட்டு பாடினர். ”ஒன்னா இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்” என இறுதியில் கூறினர்.
நகர வாழ்க்கையில், வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்து கடன் பெற்றவர்கள் பற்றி சேரன் குழுவினர் வில்லுப்பாட்டு பாடினர். இந்த வில்லுப்பாட்டு போட்டியில் வனிதா அணியினர், வெற்றி பெற்றதால், அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு, டாஸ்க்கும் முடிந்தது.
தனது அப்பா விஜயகுமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கண்ணீர் விட்ட வனிதா, இப்போது அல்ல, எப்போதும் நான் வனிதா விஜயகுமார் தான் அப்பா என்று கேமரா முன்பு கதறி அழுதார். பின்னர் இந்த வாரம் நடந்த 3 கலை நிகழ்ச்சிகளையும் சிறப்பாக செய்த முகெனை பிக் பாஸ் பாராட்டினார்.
இந்த லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கை சிறப்பாக செய்யாதவர்கள் என்று கவின் மற்றும் தர்ஷன் ஆகியோர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இந்த வாரம் சிறை தண்டனை கிடையாது என்று பிக் பாஸ் அறிவித்தார். தவிர, இந்த வாரம் நல்ல விதமான ஐடியாக்கள் பலவற்றைக் கொடுத்த சேரனுக்கு மியூச்சுவல் ஃபண்ட் காயின் வழங்கப்பட்டது.