Bigg Boss Tamil 3 - Day 5: வழக்கம் போல பாடல் ஒலிக்க, பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் எழுந்து நடனமாடுகிறார்கள். பின்னர் அனைவருக்கும் ‘லாஃபிங் தெரபி’ சொல்லிக் கொடுக்கும்படி ஃபாத்திமா பாபுவுக்கு கட்டளையிடுகிறார் பிக்பாஸ்.
Biggboss tamil 3 promo : இவளோட போதைக்கு நான் ஊறுகாய் கிடையாது – வனிதாவின் வீ (வை)ர வசனம் – இன்றைய பிக்பாஸ் எபிசோடில்…
அதன்படி, அவரும் சொல்லிக் கொடுத்த, ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சிரித்து மகிழ்கிறார்கள். பின்னர் வனிதா அழைக்கப்பட்டு, மறக்க முடியாத நாள் குறித்து பேச வேண்டும் என்கிறார் பிக்பாஸ். அவரும் தனது மகன் பிறந்த தருணத்தை நினைவுக் கூர்ந்து கண்ணீர் விடுகிறார். மற்ற நேரத்தில் டெரர் போல இருந்தாலும், இந்த நேரத்தில் வனிதா உணர்ச்சி வசப்பட்டது, குழந்தையின் மீது அவர் கொண்டிருக்கும் பாசத்தைக் காட்டுகிறது.
பின்னர் கவின் அழைக்கப்பட்டு, தனக்கு துன்பத்தில் தோள் கொடுத்தவர் குறித்து பகிர்ந்துக் கொள்ள வேண்டும் எனும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. தாங்கள் கஷ்டத்தில் இருக்கும் போது, உறவினர்கள் யாரும் உதவாமல் தவிர்த்தது பற்றி கூறி வருத்தப்படுகிறார் கவின்.
Bigg Boss Tamil: லாஸ்லியாவின் ரசிகரான பிரபல நடிகர்!
பின்னர் பாத்திரம் கழுவும் விவகாரத்தில் தனக்கு வந்த கட்டளையை சாண்டிக்கு திருப்பி விடுகிறார் மீரா. இது பிரசனையாக மாறுகிறது. இந்த விவகாரம் மோகன் வைத்யா, வனிதா, பாத்திமா பாபு, ரேஷ்மா ஆகியோருடன் தொடர்கிறது. உச்ச கட்டமான மீராவுக்கும் வனிதாவுக்கும் சண்டை முற்றுகிறது. மீராவும் கோபப்பட்டு அழுகிறார். தன்னை எப்போதுமே இங்குள்ளவர்கள் அழ வைக்கிறார்கள் எனக் கூறி அழுகையை தொடர்கிறார் மீரா.
அவரைப் பலர் சமாதானம் செய்கிறார்கள். சிறிது நேரம் கழித்து வனிதாவை சமாதானம் செய்ய மதுமிதா முயல்கிறார். யாரும் எதுவும் பேசாதீர்கள் என சற்று கோபம் கலந்த குரலில் சேரன் கூறுகிறார்.
bigg boss tamil 3 memes : பிக் பாஸ் வீட்டில் அபிராமி, வனிதாவுக்கு மட்டும் பறக்கிறது மீம்ஸ்.
ஆக, சண்டையும் சமாதானமுமாக முயற்சி என நேற்றைய எபிசோட் முடிந்திருக்கிறது. இன்று கமல் பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸை அகம் டிவி வழியே சந்தித்துப் பேசுவார். இந்த வாரத்தில் நடந்த ஒரு பிரச்னையை கையில் எடுத்து அலசி ஆராய்வார். குறிப்பாக நேரடியாக வீட்டுக்குள் வந்த மீரா மிதுனிடம் சற்று விரிவாகப் பேசுவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.