Bigg Boss Tamil 3 - Day 23: நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3-வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். முதல் வாரம் பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து இரண்டாவது வாரம் வனிதா வெளியேற்றப்பட்டார். தற்போது 14 போட்டியாளர்களின் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார்கள். சரி நேற்று நடந்த எபிசோட் பற்றி பார்ப்போம்.
பிக் பாஸ் வீட்டில் இருபத்தி மூன்றாம் நாளான நேற்று ’ஜிங்குனமணி’ பாடல் ஒளிபரப்பாகியது. வழக்கம் போல அனைவரும் எழுந்தனர். எழுந்தும் எழாமல் இருந்த மோகன் வைத்யா சுத்தப்படுத்தும் பணியில் தன்னால் ஒழுங்காக வேலை செய்ய முடியவில்லை, கழிவறையை சுத்தம் செய்யும் போது உடல் நலம் பாதிக்கப்படுகிறது அதனால் தன்னை வேறு அணிக்கு மாற்றும்படி வீட்டு தலைவர் சாக்ஷிடம் கேட்டுக் கொண்டார்.
Bigg Boss Tamil 3: முகின் ராவுக்கு ’ஐ லவ் யூ’ சொன்ன அபிராமி!
பிறகு சாக்ஷி அவரை வேறு அணிக்கு மாற்ற முயலும் போது, மாற்றி மாற்றிப் பேசி பிரச்சினையை கிளப்பினார். பின்னர் தான் அதை அணியில் இருந்து கொள்வதாக கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வைத்யா. லாஸ்லியா வைத்திருந்த சாக்லேட்டை தனக்கும் கொஞ்சம் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தார் சாண்டி. அதை கவனித்த சாக்ஷி உனக்கு எப்படி சாக்லேட் கிடைத்தது என லாஸ்லியாவிடம் கேட்க, கவின் தான் எனக்கு கொடுத்தார் என லாஸ்லியா கூறினார். இதனால் சாக்ஷி சற்று டென்ஷனாகி விட்டார்.
அதை உடனே சென்று கவினிடம் கேட்க, அதை அவரும் ஒப்புக் கொண்டார். இதனால் கோபமடைந்த சாக்ஷி இனிமேல் நமக்குள் எந்த உறவும் கிடையாது இனி நாம் பேசிக் கொள்ள வேண்டாம் என கவினிடம் கூறினார். இதனால் கவினிடமே அந்த சாக்லெட்டை திரும்பக் கொடுத்தார் லாஸ்லியா. பின்னர் இது சம்பந்தமாக சேரனிடம் சொல்லி அழுது கொண்டிருந்தார். இதைக் கேட்ட சேரன் சோகத்துக்கு உள்ளானார்.
Bigg Boss Promo: ‘நீ லூஸா இல்ல லூஸு மாதிரி நடிக்கிறியா’ – மீண்டும் பிரச்னையில் மாட்டிக் கொண்ட மீரா
பின்னர் போட்டியாளர்களுக்கு இந்த வாரத்திற்கான ’லக்ஸுரி டாஸ்க்’ வழங்கப்பட்டது. அதில் முதல் சுற்றில் சாண்டியும் மீராவும் இணைந்து 600 பாயிண்டுகளை வென்றனர். இந்த வெற்றி சாண்டியால் தான் கிடைத்தது என கவின் சொல்ல, உடனே அது மீராவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் டென்ஷனாகி விவாதத்தில் ஈடுபட்ட மீரா, பின்னர் துவண்டுபோய் படுக்கை அறையில் அழுது கொண்டிருந்தார்.