Bigg Boss Tamil 3 - day 26: நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு மாதத்தை நெருங்குகிறது. தினம் நிகழ்ச்சியில் நடக்கும் விஷயங்களை இங்கே சுருக்கமாகப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் 26-ம் நாளான நேற்றைய நிகழ்ச்சியில் நடந்ததைப் பார்ப்போம்.
எல்லோரும் தூங்கிய பிறகு, சிறையில் இருந்த சாக்ஷியை சந்திக்க தனியாக சென்றார் கவின். லாஸ்லியா உறங்காமல் அவரை பார்த்துக் கொண்டே இருந்தார். நேற்றைய நாளில் நடந்தது தனக்கு மிகவும் கவலை அளித்ததாக கூறி அழுதார் சாக்ஷி, அவரை தேற்ற முயற்சித்தார் கவின்.
Bigg Boss Tamil: ஜெயிலுக்கு போயும் சண்டை போடுறத நிறுத்தாத மீரா!
விடிந்ததும் மீரா மற்றும் சாக்ஷியின் தண்டைக் காலம் நிறைவுக்கு வந்ததாக அறிவித்தார் பிக்பாஸ். வாரயிறுதி நாட்களில் லாஸ்லியாவுக்கு கிடைத்த வரவேற்பை தன்பக்கம் திருப்புவதற்காக சாக்ஷி இதையெல்லாம் செய்வது போல தனக்கு தோன்றுவதாக கவினிடம் கூறினார் சேரன். அதோடு இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசுவது நல்லது எனவும் ஆலோசனை வழங்கினார்.
லாஸ்லியாவிடம் தனக்கு ஏற்பட்ட பிரச்னையை நினைத்து அழுதார் ஷெரீன். அப்போது டைனிங் ஹாலில் அனைவருடைய முன்னிலையிலும் பேசிய கவின், தன்னுடைய நடவடிக்கை யாருக்காவது வருத்தத்தை ஏற்படுத்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக் தெரிவித்தார். பின்னர் டாய்லெட்டுக்கு சென்ற அவர், மைக்கை கழட்டி வைத்து விட்டு தேம்பி தேம்பி அழுதார்.
அவருடைய அழுகுரல் கேட்டு சாண்டியும், ரேஷ்மாவும் அங்கு வந்தனர். சேரன் அப்படி பேசியதால் தான் கவின் அழுவதாக சொன்னார் சாண்டி. அதற்கு, தனக்கு சரி என்று பட்டதை கவினிடம் தெரிவித்ததாகவும், அதை அவரும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்தார் சேரன்.
பின்னர் லாஸ்லியாவிடம் பேசினார் கவின். ஒரே நேரத்தில் சாக்ஷி மற்றும் தன்னுடன் பழகியது தவறு என்றும், இருவருடைய உணர்வுகளுடனும் விளையாடுவது மிகவும் தவறு என்றும் கவினிடம் கூறினார் லாஸ்லியா. இதைத் தொடர்ந்து, தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதாக கவின் கூறினார். அவரை சமாதானம் செய்தார் ஷெரின்.
பின்னர் சேரனிடம் பேசிக்கொண்டிருந்த லோஸ்லியா, கவின் மிகவும் நடிக்கிறார் என்றும் அவரிடம் இனிமேல் பேசப்போவது இல்லை எனவும், அவரை தனக்கு பிடிக்கவில்லை எனவும் தெரிவித்தார். அதோடு நேற்றைய நிகழ்ச்சி முடிவு பெற்றது.