Bigg Boss Tamil 3: கடந்த வாரம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது தான் ஒவ்வொருவரின் சுயம் வெளிப்படத் தொடங்கியுள்ளது.
சரி கடந்த வாரத்தைக் கொஞ்சம் ரீ-வைண்ட் பண்ணலாம்.
ஜூன் 23-ம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களை கமல் அறிமுகப்படுத்தினார். மாடலும் நடிகையுமான மீரா மிதுன் 16-வது போட்டியாளராக செவ்வாய் கிழமை பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். முதல் வார தலைவராக வனிதா தேர்வு செய்யப்பட்டார். இவர் ஹவுஸ்மேட்ஸ்களிடம் அதிக வாக்கு வாதத்தில் ஈடுபடுவதை காண முடிந்தது.
Bigg Boss Tamil Promo: இருக்கு இன்னைக்கு பிக்பாஸ் வீட்ல சம்பவம் இருக்கு!
அபிராமி வெங்கடாச்சலம், சாக்ஷி அகர்வால், மீரா மிதுன் ஆகிய மூவருக்கும் ஒருவரையொருவர் வெளியில் தெரிந்திருப்பது நிகழ்ச்சியில் பிரதிபலித்தது. மீரா மீது இவர்கள் கடும் கோபத்தில் இருப்பதும் நன்கு புரிந்தது. லக்ஸுரி பட்ஜெட்டுக்காக ஒவ்வொருவரும் சீட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதை செய்ய வேண்டும் என பிக்பாஸ் டாஸ்க் கொடுத்திருந்தார். நிறைய பேர் தங்களது உணர்வு மிகுந்த / வலி மிகுந்த பக்கங்களை பகிர்ந்துக் கொண்டனர். எது எப்படியோ இவர்களின் வலி மிகு விஷயங்களை அறிந்த பார்வையாளர்களும் கலங்கித்தான் போனார்கள்.
Bigg Boss Tamil 3:’அவசரப்பட்டு சேரனை திட்டிவிட்டோமே..’ என வருந்தும் லாஸ்லியா ஆர்மி!
கடந்தவாரம் முழுக்க கண்ணீரில் தத்தளித்தது பிக்பாஸ் வீடு. இதற்கிடையே வார இறுதியில் கமல் ஹாஸன் அகம் டிவி-யில் தோன்றி ஹவுஸ் மேட்ஸ்களுடன் கலந்துரையாடினார். தெரிந்தோ தெரியாமலோ தமிழ் கலாச்சாரத்தை கையிலெடுத்த மதுமிதாவுக்கு எதிராக மற்றவர்கள் சண்டை செய்தனர். ஒரு பேச்சுக்காக அபிராமியின் குழந்தை என்று பாட்டிலை சொல்லப்போக, இப்படியெல்லாம் சொல்லலாமா, வீட்ல எல்லாரும் பாக்குறாங்க என குமுறினார் மதுமிதா. மற்றவர்கள் கேரக்டரை அசாசினேட் செய்கிறார் மதுமிதா என்ற குற்றச்சாட்டு எழுந்து, சோ கால்டு கண்ணீருடனும் ட்ராமாவுடனும் அந்தப் பிரச்னை சால்வ் ஆனது.
இதற்கிடையே பிக்பாஸ் வீட்டின் இந்தவார தலைவராக மோகன் வைத்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இனி நடப்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.