Bigg boss tamil promo 3 today:பிக்பாஸ் நிகழ்ச்சியை விட தினமும் வெளியாகும் அந்நிகழ்ச்சியின் ப்ரோமோக்களுக்காக நிறைய ரசிகர்கள் உள்ளனர்.
Bigg Boss Tamil 3: கண்ணீரில் கரைந்து மகிழ்ச்சியில் துளிர்த்த பிக்பாஸ் வீடு!
இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ’வாயை மூடி பேசவும்’ என்ற டாஸ்கிற்கான அறிவிப்பு வந்திருக்கிறது. அதனை மதுமிதா படிக்கிறார். ”கவின் தனது கேர்ள் ஃபிரெண்டுகளிடமிருந்து ஒதுங்கி, ஒரு நாள் முழுவதும் பேசாமல் சைகையில் பேச வேண்டும்” எனக் கட்டளை பிறப்பித்திருக்கிறார் பிக்பாஸ்.
அதோடு யாரெல்லாம் கவினின் கேர்ள் ஃபிரெண்ட்ஸ் என்பதையும் அவரே குறிப்பிட்டிருக்கிறார். “ஷெரின், அபிராமி, சாக்ஷி, ரேஷ்மா, லாஸ்லியா, வனிதா” ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, இவர்களிடம் வாயை மூடி பேசவும் டாஸ்க் விளையாடும்படி கூறியிருக்கிறார் பிக்பாஸ்.
Bigg boss tamil 3 today promo: பிக்பாஸ் முதல்வாரமே கதறி அழும் வாரம் போலயே!!! யப்பா டேய் முடியல….
இதனைப் படித்து முடித்ததும், வீடே சிரித்து அதகளமாகிறது. வனிதா பெயரைப் படித்து முடித்ததும், சிரித்துக் கொண்டே அவரின் காலில் விழுகிறார் கவின்.
இந்த டாஸ்க் கவினுக்கு மட்டும் தானா இல்லை மற்றவர்களுக்கும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. எது எப்படியோ இப்போது வந்த ப்ரோமோவில் மொத்த பிக்பாஸ் குடும்பமும் ‘ஹேப்பி அண்ணாச்சி’ மோடில் இருக்கிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. 16-வது போட்டியாளராக மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றதிலிருந்தே, அவருக்கும் அபிராமிக்கும் சிறு சிறு மோதல் வந்து போகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ”எனக்கு வாழ்க்கையில் பிடிக்காத விஷயமே என்னைப் பார்த்து எல்லாரும் பொறாமைப் படுவது தான். மத்தவங்க என்னப் பத்தி என்ன நினைக்கிறாங்க, என்ன செய்வாங்கன்னு என்னால ஃபீல் பண்ண முடியும்” என அழுதுக் கொண்டே ஃபாத்திமா பாபுவிடம் சொல்கிறார் மீரா.
இப்படி விடாமல் மீரா அழுதுக் கொண்டிருப்பதைப் பார்த்த, அபிராமி அவருக்கு தண்ணீர் கொண்டு வந்துத் தருகிறார். அதை மீராவும் வாங்கிக் குடிக்கிறார். இதான் எதார்த்தம் என்கிறார் ஃபாத்திமா.
பிக் பாஸ் வீட்டில் அபிராமி, வனிதாவுக்கு மட்டும் பறக்கிறது மீம்ஸ்.
அப்படின்னா இன்னைக்கும் பிக்பாஸ்ல ஒரே அழுகையா என சந்தேகத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள் ரசிகர்கள்.