Advertisment
Presenting Partner
Desktop GIF

Bigg Boss Tamil 3: வீட்டின் தலைவரான மதுமிதா! வாழ்த்து சொன்ன ஷெரின்!

“அய்யே வா வா வா வேலைக்கு ஆகாது” என சாண்டியை கையை பிடித்து இழுத்தவாறு தனது குழுவினருடன் கலைந்து செல்கிறார் கவின்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Tamil promo

Bigg Boss Tamil promo

Bigg Boss Tamil 3: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் 3 ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டு, பார்வையாளர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டும். அந்த வகையில் இன்றைய 3 ப்ரோமோக்களும் வெளியாகியுள்ளன.

Advertisment

முதல் ப்ரோமோவில் மதுமிதாவிற்கும் கவினுக்கும் சண்டை முற்றுகிறது. வீட்டிலிருக்கும் ஆண்கள் அனைவரும் பெண்களை யூஸ் பண்ணிக் கொள்கிறார்கள் என்ற மதுமிதாவின் புகாரை ஏற்றுக் கொள்ளாத கவின், அது குறித்து வாதம் செய்கிறார்.

Bigg Boss Tamil 3, (16.08.19) Written Update: பேசச் சொல்வது அத்து மீறலா? கொதித்தெழுந்த கஸ்தூரி!

”இத்தனை நாள் கம்முன்னு இருந்துட்டு, வனிதா அக்கா வந்ததுக்கு அப்புறம் தான் இப்படி வாய் திறக்குறீங்க. அடுத்தவங்க பிரச்னையை யூஸ் பண்ணிக்கிறது நீங்க தான். எல்லா ஆம்பளைங்களும் யூஸ் பண்ணிக்கிறாங்கன்னா, அந்தா அவன் யார யூஸ் பண்ணான், சேரன் அண்ணா யார யூஸ் பண்ணாரு?” என கோபமாக மதுமிதாவிடம் கேள்வி எழுப்புகிறார் கவின்.

இரண்டாவது ப்ரோமோவில், “அன்னிக்கு நீங்க பேசுனீங்க, இன்னிக்கு பேசலன்னு சொல்றது தவறு. நியாயத்தைப் பேசுங்க ஒத்துக்குறேன்” என சாண்டி - கவின் குழுவினரிடம் ஏதோ விளக்க முற்படுகிறார் கஸ்தூரி. அப்போது, “அய்யே வா வா வா வேலைக்கு ஆகாது” என சாண்டியை கையை பிடித்து இழுத்தவாறு தனது குழுவினருடன் கலைந்து செல்கிறார் கவின். ”அப்படி பாத்தா நீங்க 4 பேர் கிட்ட பேசியிருக்கக் கூடாது” என கஸ்தூரி சொல்ல, கோபத்தில் கத்துகிறார் கவின்.

மூன்றாவது ப்ரோமோவில் அடுத்தவார தலைவருக்கான டாஸ்க் நடக்கிறது. தலைவர் பதவிக்கு நாமினேட் செய்யப்பட்ட, ஷெரின், மதுமிதா, தர்ஷன் மூவரும் அந்த டாஸ்க்கில் பங்கெடுக்கிறார்கள். கண்களை கட்டிக் கொண்டு, கேப்டன் என்ற வார்த்தையை சரியான எழுத்துகளால் பொருத்துவது தான் டாஸ்க். இதில் மதுமிதா வெற்றி பெறுகிறார். அவருக்கு உடனடியாக ஷெரின் வாழ்த்து சொல்கிறார்.

Bigg Boss Tamil Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment