வந்த வேலையை சரியாக செய்த வனிதா: மீண்டும் போர்க்களமாக மாறிய பிக் பாஸ்

Bigg Boss Tamil 3, Episode 101 Written Update: வனிதாவுக்கும் கஸ்தூரிக்குமான போர் அங்கேயேயும் வந்து வந்து போனது.

Bigg Boss Tamil 3 day 101, 02.10.19,
Bigg Boss Tamil 3 day 101, 02.10.19,

Bigg Boss Tamil 3 Episode 101: பிக் பாஸ் 100 நாட்களைக் கடந்திருக்கிறது. 101-ம் நாளில் வனிதா, கஸ்தூரி, சேரன், சாக்‌ஷி, அபிராமி உள்ளிட்ட போட்டியாளர்கள் விருந்தினர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தனர். வாரா வாரம் ஃப்ரூட்டி காலர் ஆஃப் த வீக்கில் யாராவது ஃபோன் செய்து போட்டியாளர்களிடம் கேள்விகளைக் கேட்பார்கள் ஆனால் 101-ம் நாள் எபிசோடில் சாண்டி, முகென், லாஸ்லியா, ஷெரின் ஆகியோருக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகத்தின் பத்திரிக்கையாளர்கள் போட்டியாளர்களிடம் கேள்விகளைக் கேட்டனர்.

சாண்டியிடம் இதுவரை என்ன கற்றுக்கொண்டீர்கள், கற்றுக்கொடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, ”குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்பது தான். மேலும், நண்பர்கள், அண்ணன் தங்கை, அப்பா மகள், சித்தப்பா என்ற உறவு இந்த வீட்டில் இருந்தது. அவர்களை எல்லாம் பார்க்கும் போது நான் வெளியில், இருந்ததைப் போன்று வீட்டில் இருந்ததே இல்லை. அதனை தற்போது திருத்திக் கொண்டேன்” என்றார்.

மேலும், ”இந்த ரிலேஷன்ஷிப் வெளியில் சென்ற பிறகும் தொடரும். லோஸ்லியா, ஷெரின், முகென், தர்ஷன், கவின் ஆகியோர் எங்கு இருந்தாலும், வீடியோகால் மூலம் பேசிக்கொள்வோம். கவினும், நானும் 5 வருடங்களாக நண்பர்கள்” என்று குறிப்பிட்டார்.

பாட்டத்துடன் களைகட்டிய பிக் பாஸின் 100-வது நாள்!

அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், மக்கள் மனதில் உள்ள கேள்விகளைக் கேட்காமல் போனது, ஏமாற்றம் அளிப்பதாக நெட்டிசன்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். பிரஸ் மீட் முடிந்த பிறகு, வனிதா, கஸ்தூரி, சேரன், சாக்‌ஷி, அபிராமி உள்ளிட்டவர்கள் விருந்தினர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தனர். அவர்களைப் பார்த்ததும், வீட்டுக்குள் இருந்த போட்டியாளர்கள் சந்தோஷமடைந்தனர்.

”எனக்கு முகெனைத் தான் ரொம்ப புடிக்கும்” – லாஸ்லியாவின் புதிய யுக்தி

பின்னர் பிக் பாஸில் சண்டை நடந்த வீடியோக்கள் திரையிடப்பட்டது. லாஸ்லியா – சாக்‌ஷி சண்டை, தர்ஷன் – வனிதா அண்டை உள்ளிட்டவைகள் திரையிடும் போது, அவர்களின் முகம் மாறியது. இதைத் தொடர்ந்து ஃபோட்டோ பற்றிய தருணங்களை பகிர்ந்துக் கொண்டார்.

அடுத்து ஆரம்பித்த வனிதா, ‘நா அன்னிக்கு சொன்னப்போ யாரும் நம்பல. இன்னிக்கு தர்ஷன் வெளில போனதுக்குக் காரணம் ஷெரின்’ தான் என்றார். இதனால் மனம் உடைந்த ஷெரின் கதறி அழுதார். வனிதா சொல்வது தவறு என சேரன், லாஸ்லியா, சாண்டி எவ்வளவோ முயன்றனர், ஆனாலும் முடியவில்லை. வனிதாவுக்கும் கஸ்தூரிக்குமான போர் அங்கேயேயும் வந்து வந்து போனது. ஷெரினுக்கு ஆதரவாக, வனிதாவுடன் சண்டையிட்டார் சாக்‌ஷி.

சரி இதெல்லாம் வெளில போய் பாத்துக்கலாம் என ஒருவழியாக சண்டையை முடித்தார் வனிதா.

 

 

 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 3 written update episode 101 vijay tv sherin vanitha vijayakumar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com