ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டிய பிக் பாஸின் 100-வது நாள்!

Bigg Boss Tamil 3, Episode 100 Written Update: சாண்டி பேசியது பிக் பாஸ் முதல் சீசனின் போட்டியாளர் வையாபுரியை நினைவுப் படுத்தியது. 

By: Updated: October 3, 2019, 08:41:55 AM

Bigg Boss Tamil 3 Episode 100: ஜூன் மாதம் 23-ம் தேதி த்ஒடங்கிய பிக் பாஸ் 3 நிகழ்ச்சி 100-வது நாளை நிறைவு செய்திருக்கிறது. வரும் 6 ஆம் தேதி இந்நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. தற்போது சாண்டி, லோஸ்லியா, முகென், ஷெரின் ஆகிய 4 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். மீரா மிதுன், ஃபாத்திமா பாபு, ரேஷ்மா, மோகன் வைத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர்.

இறுதிக் கட்டத்தில் பிக் பாஸ் 3: யாருக்கு டைட்டில்?

100-வது நாள் நிகழ்ச்சியில் தியானம் செய்துக் கொண்டிருந்த மீரா மிதுனை கலாய்க்கும் விதமாக, அவர் முன்பாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் சாண்டி. இதில் கண் விழித்துப் பார்த்து மீரா மிதுன், தனது பாசிட்டிவ் வைப்ரேஷனை சாண்டி எடுத்துக்கொண்டதாக கூறினார்.

பின்னர் போட்டியாளர்களுக்கு கடிகாரம் டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஒரு மணி நேரத்தை சரியாக கணிப்பது தான் அது. இதில், போட்டியிட்ட சாண்டி, முகென் ஆகியோரில் முகென் வெற்றி பெற்றார். இதே போன்று 2-வது சுற்றில் லாஸ்லியா வெற்றி பெற்றார்.

வந்த வேலையை சரியாக செய்த வனிதா: மீண்டும் போர்க்களமாக மாறிய பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் நடந்த அழகான தருணங்களை புகைப்படங்களாக வெளிக்காட்டிய பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அதனை விமர்சிக்குமாறும், பகிர்ந்து கொள்ளுமாறும் உத்தரவிட்டார். இதில், ஷெரின், ஃபாத்திமா பாபு, முகென், மோகன் வைத்யா, லாஸ்லியா என்று அனைவரும் தங்களது மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொண்டனர்.

கடைசியாக பேசிய சாண்டி, ”அனைவரும் என்னைப் பற்றி பேசும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லோரிடமும் ஜாலியாக பேசி பழகிய நான் எனது மனைவியிடம் மட்டும் அப்படி செய்யவேயில்லை. அதன் வலி எனக்கு இப்போது தான் தெரிகிறது. ஜாலியாக இருந்துவிட்டு வீட்டிற்கு செல்லும் போது எனது மனைவி ஏதாவது சொல்ல வரும்போது இதுதானாக்கும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுவேன். அதனைப் பற்றி இப்போதுதான் நான் யோசிக்கிறேன். ஆதலால், வெளியில் சென்று அனைவரும் மகிழ்ச்சியுடன் என்ஜாய் பண்ணுவோம் என்று தெரிவித்தார். சாண்டி பேசியது பிக் பாஸ் முதல் சீசனின் போட்டியாளர் வையாபுரியை நினைவுப் படுத்தியது.

இறுதியில், 100-வது நாளை ஆட்டம் பாட்டத்துடன் சந்தோஷமாக கொண்டாடும் வகையில், ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீனியர்ஸை பிக் பாஸ் வரவழைத்து, நிகழ்ச்சியை கலகலக்கச் செய்தார். ஒருவருக்கொருவர் பாடல் பாடி, போட்டியாளர்களை குஷிப்படுத்தினார்கள்.

கொண்டாட்டத்தின் இறுதியாக, ’விஸ்வாசம்’ படத்தின் ’கண்ணான கண்ணே’ பாடலை பாடிய போது, சாண்டி அவரது மகள் லாலாவின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு டான்ஸ் ஆடினார். இதனைக் கண்ட மற்ற போட்டியாளர்கள் கண் கலங்கினர். பின்னர், போட்டியாளர்களைத் தவிர மற்றவர்களை வெளியேறும் படி, பிக் பாஸ் அறிவித்தார். அப்போது குருநாதா, கடைசி பாட்டு ப்ளீஸ் ப்ளீஸ் என்று அனைவரும் கதறினர். பின்னர் ஒரு வழியாக ஓகே சொன்னார் பிக் பாஸ்.

கடைசியாக ”டண்டனக்கா டண்டனக்கா” பாடலுக்கு குத்தாட்டம் போட்டு 100-வது நாள் நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss tamil 3 written update episode 100 vijay tv mugen rao sandy sherin losliya

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X