இறுதிக் கட்டத்தில் பிக் பாஸ் 3: யாருக்கு டைட்டில்?

Bigg Boss Tamil 3, Episode 99 Written Update: சாண்டியை பிக் பாஸ் சந்தியா என்ற பெயர் வைத்து அழைத்தார். பின்னர் ”மேகம் கருக்குது”, ”வசீகரா”, “ஒட்டகத்த கட்டிக்கோ” ஆகிய பாடல்களுக்கு நடனமாடினார் சந்தியா. 

Bigg Boss Tamil 3 day 99, 30.09.19,
Bigg Boss Tamil 3 day 99, 30.09.19,

Bigg Boss Tamil 3 Episode 99: பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வெற்றிகரமாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜூன் 23-ம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியின் ஃபைனல்ஸ் வரும் அக்டோபர் 6-ம் தேதி பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. தற்போது சாண்டி, ஷெரின், லாஸ்லியா, முகென் ஆகிய 4 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டில் இருக்கின்றனர்.

ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டிய பிக் பாஸின் 100-வது நாள்!

99-ம் நாள் நிகழ்ச்சியில், ’பேட்ட’ படத்தில் இடம் பெற்றுள்ள தட்லாட்டம் பாடலுக்கு யாரோ 3 பேர் டான்ஸ் ஆடிக்கொண்டே வீட்டிற்குள் வந்தனர். அந்தப் பாடல் முடிந்த பிறகு அவர்கள் வெளியே சென்றனர்.

இதைத் தொடர்ந்து சாண்டிக்கு தனது உடைகளை கொடுத்த ஷெரின், அவருக்கு பெண்ணைப் போன்று மேக்கப் போட்டு விட்டார். அப்போது, சாண்டியை பிக் பாஸ் சந்தியா என்ற பெயர் வைத்து அழைத்தார். பின்னர் ”மேகம் கருக்குது”, ”வசீகரா”, “ஒட்டகத்த கட்டிக்கோ” ஆகிய பாடல்களுக்கு நடனமாடினார் சந்தியா.

இதைத் தொடர்ந்து பேசிய லாஸ்லியா, இறுதிப் போட்டிக்கு வருவேன் என்று நான் நினைக்கவே இல்லை. மக்களால் மட்டுமே தான் நான் இங்கு நிற்கிறேன். வெளியில் சென்றுவிடலாம் என்ற மனநிலையில் தான், நான் இருந்தேன். இந்த வீட்டில் உள்ள அனைத்து உறவுகளிடம் நான் உண்மையாகவே இருக்க விரும்பினேன். ஆனால், அப்படி இருந்தேனா என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்.

பின்னர் பேசிய முகென், ”வாழ்க்கையில் பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்று இருந்தேன். கடவுளின் ஆசிர்வாதித்தால் தான் இங்கு வந்தேன். என்னிடம் ஏதோ ஒரு விஷயம் பிடித்து மக்கள் வாக்களித்துள்ளார்கள். அவர்களுக்காகவே நான் இப்போது விளையாடிக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

”அனுபவத்திற்காக நான் இங்கு வந்தேன். ஜெயிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. மக்கள் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். மக்களின் ஆதரவு இப்போதும் இருக்கிறது என்றால், என்னிடம் ஏதோ அவர்களுக்கு பிடித்திருக்கிறது. ஆகையால், அவர்களுக்கு நன்றி” என்றார் ஷெரின்.

இறுதியாக பேசிய சாண்டி, “தொடர்ந்து ஒவ்வொரு நாமினேஷனிலும் நான் தப்பித்து வந்திருக்கிறேன். என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்த அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என்று அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டார்.

டைட்டிலை வின் பண்ணாவிட்டாலும், மக்களின் மனதை வென்ற தர்ஷன்!

பின்னர் போட்டியாளர்களுக்கு ஸொமேட்டோ டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் ஒரு ஆப்ஸான ஸொமேட்டோ ஆப்பை பயன்படுத்தி உணவு ஆர்டர் செய்ய வேண்டும். அதன் பிறகு, அவர்கள் ஆர்டர் செய்த உணவை வோட் ஸொமேமேட்டோ பதாகையை ஏந்திக் கொண்டு அந்த உணவு குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டும். இதை போட்டியாளர்கள் செய்து முடித்தனர்.

இதையடுத்து, இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட மோகன் வைத்யா, ரேஷ்மா பசுபுலேட்டி, ஃபாத்திமா பாபு மற்றும் மீரா மிதுன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தனர். கூடவே லாஸ்லியா, ஷெரின், சாண்டி, முகென் ஆகியோருக்கு கிஃப்ட் வாங்கி வந்தனர். பின்னர் புகைப்படங்களைப் பார்த்து தங்களது உணர்வுக் குவியல்களை வெளிப்படுத்தினர்.

10 வருடங்களுக்குப் பிறகு அப்பாவை சந்திக்கும் ஒரு 25 வயது பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அந்த ஒரு புகைப்படம் எனக்கு உணர்ச்சிப்பூர்வமாக காட்டியது என்று லாஸ்லியா அவரது அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை சுட்டிக்காட்டி பேசினார்.

ஒருவருக்கொருவர் எப்படி துணையாக இருந்திருக்காங்கன்னு இந்த போட்டோக்களை பார்க்கும் போது தெரிகிறது. முகென் தான் எனக்கு துணையாக இருந்திருக்கான் என்று ரேஷ்மா குறிப்பிட்டார். இவரைத் தொடர்ந்து, சேரன் அழும் போது, அனைவரும் அவரை சமாதானப்படுத்திய அந்தப் புகைப்படம் என்னை மீண்டும் அந்த உணர்வுகளுடன் சேர வைத்தது என்று மீரா மிதுன் குறிப்பிட்டார்.

அனைத்து போட்டியாளர்களையும் நினைவுபடுத்தி பேசினார் முகென். கவினின் வெளியேற்றம், வனிதாவின் மகள்கள், தர்ஷன் வெளியேற்றம், சாண்டியின் லாலா என்று அனைவர் பற்றியும் பேசினார். குறிப்பாக அம்மாவை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சி என்றார்.  இறுதியில், போட்டியாளர்கள், சிறப்பு விருந்தினர்களோடு இணைந்து நடனம் ஆடினர்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 3 written update episode 99 vijay tv losliya sherin mugen rao sandy

Next Story
இப்படிக் கூட நடக்குமா என்ன? அரண்டு போன ஷாருக், சல்மான் கான் குடும்பத்தினர்!UK firm used names of Shah Rukh, Salman’s family for its records - இப்படிக் கூட நடக்குமா என்ன? அரண்டு போன ஷாருக், சல்மான் கான் குடும்பத்தினர்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express