Bigg Boss Tamil 3 Episode 98: பிக் பாஸ் நிகழ்ச்சி 98 நாட்களைக் கடந்திருக்கிறது. பார்வையாளர்கள் எதிர்பார்ப்பதற்கு நேரெதிராக எதையாவது செய்ய வேண்டுமென விஜய் டிவி நினைத்து விட்டது போல. அனைவரும் தர்ஷன் தான் டைட்டில் வின் பண்ணுவார் என நினைக்கையில், அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
இறுதிக் கட்டத்தில் பிக் பாஸ் 3: யாருக்கு டைட்டில்?
நேற்றைய நிகழ்ச்சியில் ஒவ்வொருவருக்கும் கோல்ட் மெடல் கொடுக்கப்படுகிறது. தர்ஷன் சாண்டிக்கு மெடல் போட்டு விட்டார். அடுத்ததாக எழுந்த ஷெரின் தர்ஷனுக்கு கோல்ட் மெடல் போடுகிறேன எனும் போது இடையே புகுந்த கமல், லாஸ்லியாவுக்கு அதை போட சொல்கிறார். இது அங்கிருந்த அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. சாண்டியும், முகெனும் அதிர்ச்சியாகிறார்கள்.
ஷெரின் தர்ஷனுக்கு எழுதிய கடிதத்தைப் பற்றிக் கேட்ட கமல், அதற்கான பதில் என்னவென்று தர்ஷனிடம் கேட்டார். “ஸோ ஸ்வீட்” எனக் கூறினார் தர்ஷன். பிறகு சாண்டியின் சமையலைப் பற்றி வினவினார் கமல்.
பின்னர் எலிமினேஷனுக்கு வந்த கமல், அந்த கார்டில் தர்ஷன் பெயரைக் காட்டுகிறார். ஷெரின், லாஸ்லியா, சாண்டி, முகென் என அனைவரும் அழுகிறார்கள். தர்ஷனுடன் நெருக்கமாக இருந்த ஷெரினால் இதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. கவின், வெளியேறிய போது லாஸ்லியா என்ன நிலையில், இருந்தாரோ அதற்கு ஒருபடி மேல் சென்று தர்ஷன் வெளியேற்றத்தை தாங்க முடியாமல் அழுதுக்கொண்டிருந்தார்.
பிக் பாஸ் வீட்டிலேயே எல்லாவற்றிலும் ஃபோகஸிங்காக இருந்தவர் தர்ஷன் தான். மக்களும் தர்ஷன் தான் டைட்டில் வின் பண்ணுவார் என நினைத்தார்கள். மக்களின் மனநிலைக்கு எதிராக சுவாரஸ்யத்தை ஏற்படுத்த விஜய் டிவி இதை செய்ததா எனத் தெரியவில்லை. தர்ஷன் வெளியேற்றப்பட்டது அனைவருக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. தனக்கு இருக்கும் ஏமாற்றத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல், வெறுமனே சிரித்து வைத்தார் தர்ஷன்.
பின்னர் மேடையில் கமலை சந்தித்தார் தர்ஷன். நீங்கள் தான் டைட்டில் வின் பண்ணுவீங்கன்னு நாங்க எல்லாருமே நினைச்சோம். இது மக்களின் தீர்ப்பு என்றார் கமல். ஆனால் அங்கிருந்த பார்வையாளர்கள் தர்ஷனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதுவே தர்ஷனுக்கு மிகப் பெரிய வெற்றி. அங்கிருந்த தர்ஷனின் அம்மா அழுதுக் கொண்டே இருந்தார். பிக் பாஸ் டைட்டிலை வின் பண்ணாவிட்டாலும், மக்கள் மனதை வின் பண்ணி விட்டார் தர்ஷன்.