Bigg Boss Tamil 3 Episode 102: வரும் 6 ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. கலந்துக் கொண்ட 16 போட்டியாளர்களில் சாண்டி, லாஸ்லியா, ஷெரின், முகென் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளனர்.
102-ம் நாள் நிகழ்ச்சியில் ”எங்கேயோ கேட்ட குரல்” என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆடியோ கிளிப்பில் வரும் நிகழ்வு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்பதுதான் அந்த டாஸ்க். இதனைத் தொடர்ந்து, ”இந்த வீட்டில் என்ன நடந்தாலும், யார் வந்தாலும் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும். என்ன நிகழ்ந்தாலும் கண்களுக்கு தெரியாதது மாதிரி, செவிகளுக்கு கேட்காது மாதிரி இருக்க வேண்டும்” என உத்தரவிட்டார் பிக் பாஸ்.
Advertisment
Advertisements
இதையடுத்து விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் பிரியங்கா, பாலாஜி, ரியோ, ரக்ஷன், மாகாபா ஆனந்த் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்தனர். இதில், மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா இருவரும் தொகுத்து வழங்க இருக்கும் 'தி வால்’ கேம் ஷோவின் ப்ரோமோ ஒளிபரப்பப்பட்டது. கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்கும் போட்டியாளர்கள் பந்தை உருட்டி தேவையான பணம் பெற்றுக்கொள்ளலாம். அதாவது, சரியாக பதிலளிக்கும் போது பந்து கிரீன் கலரில் மாறும். தவறாக பதிலளித்தா ரெட் கலரில் மாறும். கிரீன் என்றால் காசு ரெட் என்றால் லாஸ் என விளக்கமும் கொடுத்தனர்.
தொகுப்பாளர்கள் வெளியே சென்ற பிறகு, தங்களின் நினைவுகளை போட்டியாளர்கள் நினைவுக் கூர்ந்தனர். தனக்கு நண்பனாக இருந்த தர்ஷன் பற்றி தெரிவித்த முகென், தர்ஷன் வெளியேறும் போதுதான் தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றார். அடுத்ததாகப் பேசிய ஷெரின், நான் இந்த வீட்டுக்கு வந்த போது என்னை அதட்டுவது போன்று ஒரு குரல் கேட்டது. அது யாரென்று பார்த்தால் வனிதா. சாப்பிட்டியா? இல்லையா? வந்து சாப்பிடு, நாளைக்கு கிடைக்குமோ? கிடைக்காதோ? என்றார். அவரை புரிந்துகொள்ள எனக்கு 2 நாட்கள் ஆனது என்றார்.
லாஸ்லியா எனக்கு தோழி இல்லை, தங்கை என்றார் அபிராமி. ”முகெனைத் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று குறிப்பிட்ட லாஸ்லியா, முகென்னுடன் இருந்த நட்பும், மற்றவர்களுடன் இருந்த நட்பும் வேறு. சேரன், கவின், தர்ஷன் ஆகியோரை ரொம்ப பிடிக்கும்” என்றார்.
சாண்டி பேசுகையில், “எல்லோரையும் ஜாலியாக வைத்திருக்க வேண்டும் என்று தான் வீட்டிற்கு வந்தேன். டைட்டில் ஜெயிக்கணும் என்று நான் நினைக்கவில்லை. கவினும், நானும் நிறைய விஷயங்களை ஷேர் பண்ணியிருக்கிறோம். அவன் தான் ஜெயிக்கணும் என்று நான் நினைத்தேன். அவன் வேறெங்கும் இல்லை. எனது இதயத்தில் இருக்கிறான். ஷெரின், முகெனுக்கு உதவி செய்யும் குணம் இருக்கிறது. தர்ஷன் டைட்டில் வின் பண்ண வேண்டும் என நினைத்தேன். ஆனால் இப்போது முகென் ஜெயித்தாலும் சரி, யார் ஜெயித்தாலும் சரி மகிழ்ச்சி என்றார்!