Bigg Boss Tamil 3 Episode 57: 57-ம் நாளுக்கான பிக்பாஸ் ப்ரோமோ வெளியானதிலிருந்தே ஒருவித எதிர்பார்ப்பு இருந்தது. காரணம், அப்பா அப்பா என சேரனின் அன்பில் திளைத்த லாஸ்லியா, அவரையே நாமினேட் செய்தது தான்.
வாத்து பிரச்னையால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை!
அதன்படியே, நாமினேஷன் ப்ராசஸும் தொடங்கியது. அப்போது, வனிதா விஜயகுமார் வீட்டின் விருந்தாளி கிடையாது, வைல்டு கார்டில் மீண்டும் எண்ட்ரியாகியிருக்கும் போட்டியாளர் என்ற உண்மையை உடைத்தார் பிக்பாஸ். இது போட்டியாளர்களுக்கு சற்று அதிர்ச்சியளித்தது. பின்னர் இந்தவார எலிமினேஷனுக்காக சேரன், கஸ்தூரி ஆகியோருடன் முதன்முறையாக தர்ஷன் மற்றும் சாண்டியும் நாமினேட் செய்யப்பட்டனர்.
லாஸ்லியா கன்ஃபெஷன் அறைக்கு சென்ற போது வெளியே சேரனும், கஸ்தூரியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, லாஸ்லியா நிச்சயமாக உங்கள் பெயரை நாமினேட் செய்வார் என கஸ்தூரி சொன்னதற்கு, என் மகள் லாஸ்லியா அப்படி செய்யமாட்டாள், இதற்கு முன்பே எந்த நிலையிலும் உங்களை நாமினேட் செய்ய மாட்டேன் என சொல்லியிருக்கிறாள் என்றார். ஆனால் கன்ஃபெஷன் அறையில் சேரன் பெயரை பரிந்துரைத்தார் லாஸ்லியா.
போன வாரம் நடந்த விஷயங்களில் சேரன் தனக்கு சாதகமாக நடந்துக் கொள்ளவில்லைஅதனால் தான் அவர் பெயரை பரிந்துரைத்தேன் என கவினிடம் கூறி அழுதார் லாஸ்லியா. அப்போது அங்கே வந்த தர்ஷன் மற்றும் சாண்டி லாஸ்லியாவை சமாதானப்படுத்தினர்.
பின்னர் கன்ஃபெஷன் அறையில் பிக்பாஸுடன் போட்டியாளர்கள் அனைவரும் உரையாடினர். அதில் சாண்டி தன் குடும்பத்தினர் மற்றும் மகள் நினைவாகவே இருப்பதாக கூற, குடும்பத்தினரின் நினைவால் அழுதார் கவின். இந்த பகுதியில் தர்ஷன் பிக்பாஸிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பேசிய சேரன், பிக்பாஸ் நிகழ்ச்சியை பொழுதுப்போக்காக பார்க்காமல், அவரவர் வாழ்க்கையோடு தொடர்புப்படுத்தி பார்க்க வேண்டும். இதை சீரியல் போல பார்க்காமல், இதிலிருந்து ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை திருத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். டிப்ரஸனால் தான் பட்ட துன்பங்களைப் பற்றி தெரிவித்தார் ஷெரின். அவருக்கு பிறகு பேசிய லோஸ்லியா, சேரனை நாமினேட் செய்ததை நியாயப்படுத்தி பேசிக் கொண்டிருந்தார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போகும் போது யாருடன் கடைசியாக பேசி விரும்புகிறீர்கள், என்ன பேசுவீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த லாஸ்லியா, கவினிடம் தான் கடைசியாக பேசுவேன். அவர் இறுதி போட்டிக்கு தகுதி பெற வேண்டும், அதை நான் ஃபைனல்ஸுக்கு வந்து நான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பின்னர் லாஸ்லியாவிடம் பேசிக் கொண்டிருந்த கவின், சேரனுக்கு எதிரான தன்னுடைய கருத்துக்களை அவருக்குள் திணித்து கொண்டிருந்தார். சாண்டி, கவின், தர்ஷன், முகின், லாஸ்லியா கூட்டணியை உடைக்க வேண்டும் என வனிதா மற்றும் கஸ்தூரியிடம் பேசிக் கொண்டிருந்தார் சேரன். அதற்கு அவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.