Advertisment

கமல் கமல்தான்யா...ஓருபக்கம் சேரனுக்கு வாழ்த்து - மறுபக்கம் சாண்டிக்கு அறிவுரை

Bigg Boss Tamil 3, Episode 62 Written Update: மாதா, பிதா, குரு, தெய்வம் இவைகளில் இவர்களுக்கு தான் முதலிடம். மற்றவர்களுடைய குழந்தையை தங்களது குழந்தையாக எண்ணி அவர்களுக்கு சமைத்து உணவு பரிமாறுவதோடு, கல்வியும் கற்றுக்கொடுக்கும் அவர்கள் வெறும் மாதா அல்ல. ஜகன்மாதா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Tamil 3 Episode (62), Bigg Boss Tamil 3 Day (24.08.2019)

bigg boss tamil 3, bigg boss tamil 3 contestants, bigg boss tamil 3 eviction, bigg boss tamil 3 (24-08-19) written update, bigg boss tamil 3 episode (62.) written update, bigg boss tamil 3 day (62) written update, kamal haasan, bigg boss tamil, reality show, bigg boss tamil 3 written update, bigg boss tamil 3 preview

Bigg Boss Tamil 3 Episode (62)வாரம் பூராம் மொக்கையா இருந்த பிக்பாஸை கமல் வந்து இன்னிக்கு கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்திட்டாரு. கவின் லாஸ் மைக் கழட்டி வச்சதை டிவி ஒளிபரப்பில் காட்டவே இல்லை. தப்பு பண்ற முக்கியமான விசயமெல்லாம் காட்டாம.. சும்மா வெக்கப்படறதையும் பல்லிளிக்கறதையும் காட்டிட்டு இருக்காங்க.

Advertisment

பிக்பாஸில் இன்னொரு வாய்ப்பு கொடுத்தும் உதறிவிட்டு வெளியேறிய கஸ்தூரி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 62வது நாளில், பைக் மாடல் டாஸ்க்நடந்தது. இதில், ஷெரின், கஸ்தூரி மற்றும் வனிதா ஆகியோர் போட்டோகிராபர்களாகவும், முகென், தர்ஷன், லோஸ்லியா மற்றும் சாண்டி ஆகியோர் மாடல்களாகவும் இருந்தனர். இதில், பைக்கைப் பற்றி அவர்கள் ஓரிரு வார்த்தைகள் பேச வேண்டும்.

சேரன் இந்த டாஸ்க்கிற்கு நடுவராக இருந்தார். இறுதியில், இந்த டாஸ்க்கில் தர்ஷன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார் . ஷெரின் நேர்மையாகவும், விவேகத்துடனும் செயல்பட்டு மனதில் நினைத்ததை அப்படியே தெரிவித்ததற்கு கமல் பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து புதிய கேப்டனாக தேர்வான சேரனுக்கு கமல் வாழ்த்து தெரிவித்தார். இறுதியில், வந்து வரம்பு மீறி செயல்பட்ட சாண்டிக்கு அறிவுரை வழங்கினார். சத்துணவு ஆயா மாதிரி ஆசிரியை இருப்பதாக கூறியது வரம்பி மீறிய செயல். வசதியில்லாத பல குழந்தைகள் பட்டதாரியாக உருவாக காரணம் இந்த சத்துணவு. அது மட்டுமில்லாமல், சத்துணவு பரிமாறும் தாயமார்களும் தான்.

மாதா, பிதா, குரு, தெய்வம் இவைகளில் இவர்களுக்கு தான் முதலிடம். மற்றவர்கள் குழ்ந்தையை தங்களது குழந்தையாக எண்ணி அவர்களுக்கு சமைத்து உணவு பரிமாறுவதோடு, கல்வியும் கற்றுக்கொடுக்கும் அவர்கள் வெறும் மாதா அல்ல. ஜகன்மாதா. அவர்களை கிண்டல், நகைச்சுவைக்கு பயன்படுத்தக் கூடாது. இது தான் வரம்பி மீறிய செயல். இனிமேல் இது போன்று செய்ய வேண்டாம் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment