scorecardresearch

பிக்பாஸில் இன்னொரு வாய்ப்பு கொடுத்தும் உதறிவிட்டு வெளியேறிய கஸ்தூரி!

Bigg Boss Tamil 3, Episode 63 Written Update: ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தன்னுடைய வெற்றி வாய்ப்பை பல்வேறு காரணங்களுக்காக மற்றவருக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையில் இருப்பதாக கமல் கூறினார்.

Bigg Boss Tamil 3 day 63, 25.08.19
கஸ்தூரி

Bigg Boss Tamil 3 Episode 63: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 63-ம் நாளான நேற்று போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அறிவுரைகளை வழங்கினார் கமல். இது தனித்த நபருக்கான போட்டி. ஆனால் போட்டியாளர்களோ, அந்த மனநிலையில் இல்லாமல் இருக்கிறார்கள். பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ் இங்கே தங்களுடைய தனிப்பட்ட அடையாளத்தை வெளிக்கொண்டு வராமல், குழு மனப்பான்மையில் இருப்பதாக, போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து, தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் கமல். அதோடு ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தன்னுடைய வெற்றி வாய்ப்பை பல்வேறு காரணங்களுக்காக மற்றவருக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆரம்பத்திலிருந்தே தனித்துத் தெரிவது சேரன் மட்டும் தான் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

கமல் கமல்தான்யா…ஓருபக்கம் சேரனுக்கு வாழ்த்து – மறுபக்கம் சாண்டிக்கு அறிவுரை

“உங்களுடைய வெற்றிக்காக நீங்கள் பாடுபட வேண்டும். குறிப்பாக மற்ற நாட்டில் இருந்து வந்திருப்பவர்களுக்கு இந்த பொறுப்பு கூடுதலாக இருக்கிறது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்துவிட்டு, வெற்றியை குறிக்கோளாக கொண்டு விளையாட வேண்டும்” ஹவுஸ்மேட்ஸுக்கு நிறைய அறிவுரைகளை வழங்கினார் கமல்.

இனிமே தான பாக்க போறீங்க இந்த கவினோட ஆட்டத்த! கமல் கொடுத்த அட்வைஸ் ஒர்க் அவுட் ஆகுதோ…

ஒவ்வொருவருடன் தனித்தனியாக பேசி விட்டு, லிவிங் ஏரியாவில் அனைவரிடமும் எப்போதும் போல பேசுகையில், “தன்னுடைய வழக்கு வரும் போது வழக்கறிஞராகி விடும் வனிதா, மற்றவர் பிரச்னை என்றால் நீதிபதியாகிவிடுகிறார்” என்று கமல் தெரிவிக்க, இதைக் கேட்டதும் பார்வையாளர்கள் வெடித்து சிரித்தனர்.

பின்னர் 2 காலர்கள் தர்ஷன் மற்றும் கவினிடம் பேசினர். குறிப்பாக கவினிடம் பேசிய அந்த நபர், நீங்கள் ஏன் எப்போதும் சாண்டியையே சார்ந்திருக்கிறீர்கள் எனக் கேட்டார். அவரை எனக்கு வெளியிலும் தெரியும், என் மீது ரொம்ப அன்பு கொண்டவர் என சொல்லி மழுப்பினார் கவின். முன்னதாக போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்கள் குறித்துப் பேசியிருந்தனர். அந்த ஆசிரியர்கள் போட்டியாளர்களைப் பற்றி (தத்தம் மாணவர்களை) பேசிய குரல் பதிவு சர்ப்ரைஸாக ஒலிபரப்பு செய்யப்பட்டது. இது அங்கு ஒருவித நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கஸ்தூரியின் மகனும், மகளும் போனில் பேசியதை கேட்டவுடன், தன்னை வெளியே விட்டு விடும் படி  கஸ்தூரி அழுதது கண்ணீரை வரவழைத்தது. இறுதியாக பேசிய கே.எஸ். ரவிக்குமார், சேரனைப் பற்றி பல நல்ல விஷயங்களையும், மற்ற போட்டியாளர்களுக்கு தமது வாழ்த்துகளையும் தெரிவித்தார். அவருக்கு கமல் ஹாசன் தனது நன்றியை தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து நிகிழ்ச்சியில் எலிமினேஷன் நேரம் வந்தது. இதில் கஸ்தூரி வெளியேற்றப்படுவதாக அறிவித்தார் கமல். போட்டியாளர்களிடம் பிரியா விடை கொடுத்த போது கவினிடம் பேசிய அவர், கூடிய விரைவில் அவரை வெளியில் சந்திப்பதாகக் கூறி நக்கல் அடித்தார்.

வெளியில் வந்த கஸ்தூரி அகம் டிவி வழியே போட்டியாளர்களை சந்தித்துப் பேசினார். அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை கூறிக் கொண்ட அவர், தனிப்பட்ட முறையில் முகினின் வெற்றியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தார்.

பின்னர், கஸ்தூரிக்கு ‘சீக்ரெட் ரூம்’ வாய்ப்பை வழங்கினார் கமல். ஆனால் அதை ஏற்க மறுத்த கஸ்தூரி, தன்னுடைய குழந்தைகளின் குரலை கேட்ட பின்பு பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்க முடியாது என அந்த வாய்ப்பை திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இறுதியாக பேசிய கமல் ஹாசன், ”பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் எவிக்‌ஷன் நடைமுறை கிடையாது. ஆனால் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு இது தெரியாது” என்றார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss tamil 3 written update episode 63 vijay tv kamal hassan

Best of Express