இனிமே தான பாக்க போறீங்க இந்த கவினோட ஆட்டத்த! கமல் கொடுத்த அட்வைஸ் ஒர்க் அவுட் ஆகுதோ…

Bigg Boss Tamil 3, Episode 64 Written Update: கவினும், லாஸ்லியாவும் பேசிக் கொண்டிருப்பதை சாண்டி, முகென், தர்ஷன் ஆகியோர் தொலைவில் இருந்து கவனித்து கொண்டிருக்கின்றனர்.  

Bigg Boss Tamil 3 day 64, 26.08.19
பிக்பாஸ் கவின்

Bigg Boss Tamil 3 Episode 64: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாள் ’ரஜினி முருகன்’ பட பாடலோடு தொடங்கியது. இதற்கு வழக்கம் போல  போட்டியாளர்கள் உற்சாகமாக நடனமாடினர். பின்னர் ஷெரீன், தர்ஷன் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். குளிப்பதன் முக்கியத்தும் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்று சாண்டிக்கு டாஸ்க் கொடுக்கிறார் பிக்பாஸ்.

பிக்பாஸில் இன்னொரு வாய்ப்பு கொடுத்தும் உதறிவிட்டு வெளியேறிய கஸ்தூரி!

அப்போது சாண்டியின் தியானத்தை கிண்டல் செய்கிறார் கவின். பின்னர் குறைவான நீரில் எப்படி குளிப்பது என்று போட்டியாளர்கள் அனைவருக்கும், சாண்டி பாடம் எடுக்கிறார். ஒரு டம்ளர் தண்ணீரில், கைக்குட்டையை நனைத்து அப்படியே உடலில் துடைக்க வேண்டும் என தண்ணீரின் சிக்கனம் குறித்தும் சொல்கிறார். இதையடுத்து, 25% தண்ணீர் மட்டும் இருக்கும் நிலையில், எல்லாவற்றையும் காலி செய்து விட்டு, சோப் நுரையுடன் மட்டும் நீங்கள் இருக்கிறீர்கள், என்றால் அப்போது என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார் கவின். இதற்கு சாண்டி, அதான் டவல் இருக்கிறதே. அதை வைத்து துடைத்து கொள்ளலாம் என்றார். பின்னர் கவினும், லாஸ்லியாவும் பேசிக் கொண்டிருப்பதை சாண்டி, முகென், தர்ஷன் ஆகியோர் தொலைவில் இருந்து கவனித்து கொண்டிருக்கின்றனர்.

பின்னர் இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்குகிறது. அதில் கவினுக்கு எதிரான மனநிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை கூடுகிறது. இறுதியாக கவின், முகின், வனிதா, ஷெரீன் ஆகியோர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளதாக பிக் பாஸ் அறிவிக்கிறார். ஆனால் இந்த வாரம் எவிக்‌ஷன் இல்லை என்பது அவர்களுக்கு தெரியாது என்பதால், அங்கே பதற்றம் நிலவுகிறது.

தண்ணீர் பிரச்னை, மது ஒழிப்பை பொம்மலாட்டத்தின் மூலம் பேசிய பிக் பாஸ் 3!

பின்னர் வழக்கம் போல லாஸ்லியா மற்றும் கவின் இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, நீ நாமினேட் ஆனதற்கு நான் தான் காரணம் என்கிறார் லாஸ்லியா. ”உன்னை காப்பாத்த நினைப்பவர்கள் என்னை உன்னிடமிருந்து பிரிக்க தான் நினைப்பார்கள்” என்றார் கவின்.

பின்னர் நினைவாற்றலை சோதிக்கும் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் ரெட் அணி, புளூ அணி என்று இரு அணிகளாக பிரிந்து விளையாடினர். இந்த டாஸ்க்கில் புளூ அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து, இந்த போட்டியில் வெற்றி பெற உங்களுக்கு தகுதி இருக்கிறதா? என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் தனக்கு முழு தகுதி உள்ளதாகவும், அதற்கான காரணத்தையும் தெரிவித்தார்.

நண்பர்கள் குறித்து கவின் பேசும் போது, இடையில் குறுக்கிட்ட வனிதா காதல் விவகாரத்தைப் பற்றிப் பேச தொடங்கினார். அதற்கு லாஸ்லியா, ”நண்பர்கள் பற்றி மட்டுமே பேசுங்கள். ஏன், என்னையும், அவரையும் பற்றி பேசுகிறீர்கள்” என்றார்.

ஒவ்வொரு டாஸ்க்கிற்கும் கடின உழைப்பைக் கொடுப்பதாகவும், பிரச்சனை என்றால், மற்றவர்களுக்காக நான் தான் முன்னாடி வருகிறேன் எனவும் தர்ஷன் தெரிவித்தார். ஷெரின் முதல் முறையாக நாமினேட் ஆகியிருக்கிறார். அதுபற்றி தெரிவித்த அவர், ”ஒரு சில இடங்களில் தான் நான் சண்டையிட்டிருக்கிறேன். கண்டிப்பாக நான் ஜெயிக்க வேண்டும் என்று நான் இங்கு வரவில்லை. ஆனால், 50 நாட்களுக்குப் பிறகு ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வருகிறது” என ஷெரின் தெரிவித்தார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 3 written update episode 64 vijay tv kamal hassan

Next Story
இது வெடிக்கிற திரியா ..? டிரைலர் எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com