/tamil-ie/media/media_files/uploads/2019/08/Bigg-Boss-Vanitha-Vijayakumar.jpg)
Bigg Boss Vijayakumar 3rd marriage with peter paul
Bigg Boss Tamil 3 Episode 68: இதற்கு முன்பு நடந்த இரு பிக் பாஸ் சீசன்களிலும் யார் ஜெயிப்பார்கள் என ஓரளவு எளிதாகக் கணிக்க முடிந்தது. ஆனால் தற்போது நடந்துக் கொண்டிருக்கும் பிக்பாஸ் தமிழின் 3-வது சீசனில், அப்படி யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.
பிக்பாஸ் வீட்டில் 68-ம் நாள் ‘லாலா கடை சாந்தி’ என்ற பாடலோடு தொடங்கியது. இதற்கு போட்டியாளர்கள் நடனமாடினர், பின்னர், அனைவருக்கும் வனிதா ஜும்பா நடனம் கற்றுத் தர வேண்டுமென பிக் பாஸ் கூறினார். ஆனால் வனிதாவோ ”எனக்கு ஜும்பா தெரியாது, ஆனா நான் வம்பா கலை கற்று வைத்திருக்கிறேன். அதனை கற்றுத்தருகிறேன்” என்று கூறி போட்டியாளர்களுக்கு வம்பா கலையை கற்றுக்கொடுத்தார்.
லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில் கலக்கிய சேரன், முகென்!
”எதையும் கண்டுக்காம இருக்குறீங்க. பார்த்தும் பாக்காத மாதிரி போறீங்க” என்று கவினிடம் கேட்டு அழுதார் லாஸ்லியா. ”நீங்கள் எப்போதும் போல் இருக்க வேண்டும். கேம் விளையாடுங்கள், சிரித்துக் கொண்டே இருங்கள்” என கவின் அறிவுரை வழங்கினார். அதற்கு, “நான் இனிமேல் உங்களிடம் பேச மாட்டேன்” என்றார் லாஸ்லியா.
”நான் மட்டும் தான் இந்த வீட்டில் ரூல்ஸ் எல்லாத்தையும் ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கிறேன். மைக்கை சரியா மாட்டுங்கன்னு இதுவரைக்கும் பிக் பாஸ் என்கிட்ட சொன்னது இல்ல. மத்தவங்கள ஜெயிலுக்கு அனுப்பி அதன் மூலம் சந்தோஷப்படும் ஆள் நான் இல்லை” என லாஸ்லியா கூறிக்கொண்டே இருக்கும் போது, ”லாஸ்லியா மைக்கை சரியாக மாட்டுங்கள்” என்று பிக் பாஸ் கூறியதைக் கேட்டு மற்ற போட்டியாளர்கள் சிரித்தனர்.
இந்த வாரத்திற்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில் போட்டியாளர்கள் 1600 மதிப்பெண்களை முழுமையாகப் பெற்றனர். பிக் பாஸ் வீட்டில் கற்றுக்கொடுக்கப்பட்ட கலைகளை சிறப்பாக கற்றுக்கொண்டு அரங்கேற்றியதால் முழுமையாக 1600 மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. கவின் எதையோ இழந்த மாதிரியே இருக்கிறான் என்று வனிதாவும், சேரனும் பேசிக்கொண்டிருந்தனர். மேலும், கவின் இல்லாத லாஸ்லியா எப்படி இருக்கிறாள் என்று பார்க்க வேண்டும் என்று வனிதா கூறினார்.
பின்னர் தலைவர் பதவிக்கான போட்டியில் இடம் பெற்றுள்ள போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக இருக்கும் நபர் யார் என்று வரிசையாக வரிசைபடுத்த வேண்டும் என பிக்பாஸ் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வனிதா, முகென் மற்றும் சேரன் ஆகிய மூவரும் ஒருவர் பின் ஒருவராக போட்டியாளர்களை வரிசைப்படுத்தினர்.
வனிதா: 1.வனிதா 2. சேரன் 3. லாஸ்லியா 4. சாண்டி 5. கவின் 6. தர்ஷன் 7. ஷெரின் 8. முகென்
முகென்: 1.முகென் 2. தர்ஷன் 3. சாண்டி 4. லாஸ்லியா 5.ஷெரின் 6. சேரன் 7.கவின் 8.வனிதா
சேரன்: 1.சேரன் 2. தர்ஷன் 3. வனிதா 4. சாண்டி 5. லாஸ்லியா 6. ஷெரின் 7.முகென் 8. கவின்
என்று போட்டியாளர்கள் வரிசைப்படுத்தினர். இதில் குறைவான நேரத்தில் வரிசைப் படுத்தி, இந்த தலைவர் பதவிக்கான போட்டியில் வனிதா வெற்றி பெற்றார்.
பின்னர் சிக்கனுக்காக போட்டியாளர்கள் அனைவரும் போராட்டம் நடத்தினர். இதில், 4 பக்கெட் சிக்கன், ப்ரைடு சிக்கன், லெக்பீஸ் என்று எல்லாமே வேண்டும் என்று சாண்டி கோஷம் எழுப்பினார். ஒரு கட்டத்தில் ஸ்டோர் ரூம் பக்கம் சென்று சாண்டி கோரிக்கை வைத்து கேட்டார்.
”கொண்டு வா கொண்டு வா வறுத்த கோழி கொண்டு வா” என்று சேரன் கோஷமிட்டார்.
”வேணும் வேணும் சிக்கன் வேணும்” என்று வனிதா கோஷமிட்டார்.
போட்டியாளர்களின் போராட்டத்தால் மனம் உருகிய பிக் பாஸ் அவர்களுக்கு வறுத்த சிக்கன் கொடுத்து மகிழ்வித்தார். அப்போது, ”சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் வறுத்த கோழி மிளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்” என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதைக் கேட்டு போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் துள்ளிக்குதித்து சிக்கன் சாப்பிட்டனர்.
இதைத் தொடர்ந்து, வனிதா சேரன் இருவரும் கவின் லாஸ்லியா காதல் பற்றி பேசிக்கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.