scorecardresearch

வந்த அத்தனை பந்துகளையும் சிக்ஸராக பறக்க விட்ட வனிதா!

Bigg Boss Tamil 3, Episode 71 Written Update: உங்களுக்கு ஜெயிக்க இஷ்டம் இல்லன்னா, வெளில போங்க, அதுக்காங்க மத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்குறேன்னு சொல்லாதீங்க

Bigg Boss Tamil 3 day 71, 03.09.19
Bigg Boss Tamil vanitha, tharshan- sanam shetty issues

Bigg Boss Tamil 3 Episode 71: இன்றைய நிகழ்ச்சியில் லாஸ்லியாவும், சேரனும் பேசிக் கொண்டிருந்தனர். ”எனக்கு அவன் மேல ஃபீலிங்ஸ் இருக்கு, அதான் உங்கக் கிட்ட பேசல சாரி” என லாஸ்லியா கூற, “சரிப்பா ஆனா என் கிட்டயும் பேசிடு. இந்த இடத்துல உங்க அப்பா இருந்தாருன்னா, அவர அவாய்ட் பண்ணிட்டு உன்னால கவின் கிட்ட பேச முடியுமா?” என லாஜிக்கான கேள்வியை கேட்டார் சேரன். சேரன் சொன்ன அட்வைஸைக் கேட்ட லாஸ்லியா, தான் ஏதோ தவறு செய்து கொண்டிருப்பதை உணர்ந்தார். ”இப்போது நீ கேமை விளையாடு மற்ற விஷயங்களை வெளியில் போய் பார்த்துக் கொள்ளலாம்” என்றார் சேரன்.

சேரனிடம் பேசிய விஷயங்களை சாண்டியிடமும் தர்ஷனிடமும் லாஸ்லியா கூறுகிறார். அப்போது சேரனிடம் பேசினால், கவின் என்னிடம் பேசுவதில்லை எனவும் தெரிவிக்கிறார். அதுக்காகத்தான் அவன் பேசாம இருக்கிறானா என சாண்டி கேட்கிறார். நண்பர்களுக்காக டைட்டிலை விட்டுக் கொடுக்க துணியும் அளவுக்கு தைரியமிருக்கும் கவினுக்கு, லாஸ்லியா சேரனிடம் பேசுவதை ஏற்றுக் கொள்ள தைரியம் இல்லை போல் தெரிகிறது. சேரன் தங்களது ரிலேஷன்ஷிப்பை பிரித்து விடுவாரோ என்ற இன்செக்யூரிட்டி ஃபீல் கவினுக்கு இருப்பது நன்றாக தெரிகிறது. அதனால் பேசாமல், லாஸ்லியாவை இமோஷனலாக பிளாக் மெயில் செய்கிறார்.

என்ன மாதிரி இந்த வாய்ப்ப இழந்துடாத… லாஸ்லியாவுக்கு அட்வைஸ் செய்த அபிராமி!

இந்த விஷயத்தை சாண்டி கேட்டதும், “நான் அவ கிட்ட பேசுனா, பேசுறேன் பேசுறேன்னு சொல்றீங்க. அதான் நான் யார் கிட்டயும் பேசுறது இல்ல” என்றார்.

பிக்பாஸ் வீட்டில் 71-ம் நாளில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைப்பெற்றது. டைரக்ட் நாமினேஷனாக நடந்த இந்த புராசஸில் போட்டியாளர்கள் அனைவரும், லாஸ்லியாவையும் கவினையும் மாறி மாறி நாமினேட் செய்தனர்.

கவினின் முறை வந்த போது, “நான் சேரனையும், ஷெரினையும் நாமினேட் பண்றேன். அவங்க நிறைய வெற்றிகளை பாத்துட்டாங்க. அதனால மத்தவங்களுக்கு வழி விடணும்ன்னு நினைக்கிறேன். அவங்க கதை எல்லாம் கேட்டதும் எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு” என்கிறார். குறுக்கிட்ட வனிதா, இதையெல்லாம் நீங்க காரணமா சொல்ல முடியாது. ”உண்மையான காரணத்தை சொல்லுங்க” என்றார். அப்போது ஒரு வாக்கு வாதம் ஏற்படுகிறது.

அப்போது, கவின் மற்றும் லாஸ்லியாவை நாமினேட் செய்த சாண்டி, உன் பேர் கெட்டு போகுது, போசாம வெளில போய்டு என அழுதார். சாண்டியின் அந்த அழுகையில் நிஜ அக்கறையும், நேர்மையும் வெளிப்பட்டது. அந்த இடத்தில் கூட லாஸ்லியாவை பலி ஆடாக்கும் முயற்சியில் ஈடுப்பட்ட கவின், “நா பேசாம விட்டா அவ ஓவரா ரியாக்ட் பண்றா, அதான் பேசி கொஞ்சம் கொஞ்சமா சரி பண்றேன்” என்கிறார். இதை வனிதா கவனித்துக் கொண்டிருந்தார்.

“இங்க என்ன எமோஷனல் ட்ராமா பண்றீங்களா? அடுத்தவங்கள ஜெயிக்க வைக்க நீங்க இங்க வரல. உங்களுக்கு ஜெயிக்க இஷ்டம் இல்லன்னா, வெளில போங்க, அதுக்காங்க மத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்குறேன்னு சொல்லாதீங்க” என்ற வனிதா, தன்னை எதிர்த்து மற்றவர்கள் வீசிய அத்தனை பந்துகளையும் சிக்ஸராக பறக்க விட்டார். காரணம், வனிதா கூறிய அத்தனை பாயிண்டுகளும், அத்தனை சரியாக இருந்தது.

”இங்க விட்டுக் கொடுக்க தான் வந்தியா கவின்?. அப்படினா மத்தவங்களுக்கு ஜெயிக்க திறன் இல்ல அதனால, நீ விட்டுக் கொடுக்குறியா? கவின் லாஸ்லியா ரெண்டு பேரும் இந்த நிகழ்ச்சியோட போக்கையே மாத்திட்டீங்க. அவங்க அவங்களுக்காக போராடனும். மத்தவங்க விட்டுக் கொடுத்தா, அதுக்கு பேர் வெற்றியா? எல்லாரும் போட்டி போடுவோம். கடைசில யார் வின் பண்ணுவோம்” என்ற வனிதாவிடம், “நான் நெனச்சா ஜெயிச்சிடுவேன். ஆனா அடுத்தவங்க நெஞ்சுல ஏறி மிதிக்க எனக்கு விருப்பம் இல்ல” என்றார் கவின். “அப்படின்னா ஏன் இங்க வந்த?” என சாட்டையடின் கேல்விகளைக் கேட்டார் வனிதா. எது எப்படியோ, இப்படியான கேள்விகள் மூலம், மக்கள் மனதில் இருந்ததை சரியாக வெளிக் கொண்டு வந்திருக்கிறார் வனிதா.

சென்ற முறை நடந்த போட்டிகளில் டாஸ்க் என்றாலே அத்தனை முனைப்புடன் இருப்பார்கள். ஆனால் இந்த முறை அப்படியில்லை. கவினும் லாஸ்லியாவும் தனியாக நேரம் செலவழிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். டாஸ்க்குகளிலும் ஆர்வம் காட்டுவதில்லை, ஆனால் எமோஷனலாக சில வேலைகளை செய்கிறார்.

 

 

 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss tamil 3 written update episode 71 vijay tv vanitha vijayakumar cheran sandy kavin losliya sherin tharshan