என்ன மாதிரி இந்த வாய்ப்ப இழந்துடாத… லாஸ்லியாவுக்கு அட்வைஸ் செய்த அபிராமி!

Bigg Boss Tamil 3, Episode 72 Written Update: பிக்பாஸ் வீடு தர்ஷன், சாண்டி, லாஸ்லியா, முகென் என்று ஒரு அணியாகவும், ஷெரின், சேரன் மற்றும் வனிதா ஆகியோர் ஒரு அணியாகவும் மாறியுள்ளது. 

Bigg Boss Tamil 3 day 72, 03.09.19
Bigg Boss Tamil 3 day 72, 03.09.19

Bigg Boss Tamil 3 Episode 72: கவினை வனிதா வச்சு செய்த நாளில் இருந்து, அவர்கள் இருவருக்கும் எங்காவது முட்டிக் கொண்டே இருக்கிறது. 72-ம் நாள் நிகழ்ச்சியிலும் அவர்கள் தனித்தனியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இங்க அன்புக்கும், மன்னிப்புக்கும் மதிப்பே இல்ல… கலங்கிய ஷெரின்!

“அவார்டு வாங்கிய இயக்குநரை ஏன், பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வந்தீர்கள். எனக்கு விலை மதிக்கமுடியாத சொத்து வெளியில் இருக்கிறது. நீங்கள் கொடுகும் பணத்தைவிட அது பெரிது. ஒரு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள்” என்று வனிதா கோபத்தில், மைக்கை கழற்றி கேமரா மீது வைத்தார். ”வைல்டு கார்டு மூலம் உள்ளே வந்ததற்கு பிக் பாஸ் தானே காரணம். ஆதலால், அவர் சொல்லட்டும்” என்று சேரன், வனிதாவிற்கு ஆதரவாக பேசினார். இவர்களுடன் ஷெரினும் இணைந்துக் கொண்டார். கவின் பிரச்னையால் தற்போது பிக்பாஸ் வீடு தர்ஷன், சாண்டி, லாஸ்லியா, முகென் என்று ஒரு அணியாகவும், ஷெரின், சேரன் மற்றும் வனிதா ஆகியோர் ஒரு அணியாகவும் மாறியுள்ளது.

வந்த அத்தனை பந்துகளையும் சிக்ஸராக பறக்க விட்ட வனிதா!

தன்னை நாமினேட் செய்ததற்கான காரணத்தை கவினிடம் கேட்ட ஷெரின்,  ”என்னுடைய வாழ்க்கையில் என்ன நடந்தது, நான் எப்படி கஷ்டப்பட்டேன் என்று சொன்னால், எல்லோருமே அழ ஆரம்பித்துவிடுவீர்கள்” என்றார். மேலும், இங்கே வந்த இந்த 4 பேர் மட்டுமே ஜெயிக்க வேண்டும் என்று எப்படி சொல்ல முடியும் என்று ஷெரின் கேள்வி எழுப்பினார். அதில் முகென், தர்ஷன், லாஸ்லியா ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். பின்னர் வனிதாவை அழைத்து பேசிய பிக் பாஸ், அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

இதைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இதனை முறுக்கு செய்து கொண்டாட வேண்டும். ஒருவர் முறுக்கு பிழிய வேண்டும். மற்றவர்கள் அவருக்கு உதவ வேண்டும், என்றார் பிக் பாஸ்.  இதில், போட்டியாளர்கள் முறுக்கு செய்து, பாரம்பரிய உடை அணிந்து பிள்ளையாருக்கு பூஜை செய்தனர். இதையடுத்து, வனிதா உடனான உரையாடலின் போது ஷெரின், தனது ஆதங்கத்தை கூறி அழுதார். தொடர்ந்து, ராங்கு ரங்கம்மா என்ற பாடல் ஒலிக்கப்பட்டது. இந்தப் பாடலுக்கு சாண்டி, ஷெரின் இருவரும் நடனமாடினர்.

பின்னர் இந்த வாரத்திற்கான லக்‌ஸுரி பட்ஜெட்டுக்கான டாஸ்க்கில் தலையணை தொழிற்சாலையில், லாஸ்லியா, கவின், சாண்டி மற்றும் முகென் ஆகியோர் ஒரு அணியாகவும், சேரன், வனிதா, தர்ஷன், ஷெரின் ஆகியோர் ஒரு அணியாகவும் பிரிந்து தலையணை செய்ய வேண்டும். இதில் வனிதா மற்றும் லாஸ்லியா இருவரும் குவாலிட்டி செக்கிங் ஆபிஸராக பணியாற்ற வேண்டுமெனவும் பிக்பாஸ் உத்தரவிட்டார்.

இந்த டாஸ்கில், வனிதா அணியில் 7 தேர்வு செய்யப்பட்டதாகவும், 14 தேர்வு செய்யப்படாத ஒன்றாகவும் தெரிவிக்கப்பட்டது. கவின் அணியில் 3 தேர்வு செய்யப்பட்டதாகவும், 4 தேர்வு செய்யப்படாத ஒன்றாகவும் தெரிவிக்கப்பட்டது.

மோகன் வைத்யா, அபிராமி, சாக்‌ஷி விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர். பின்னர் வனிதா, ஷெரின், சாக்‌ஷி ஆகிய மூவரும் பேசிக்கொண்டனர். தலையணை டாஸ்க்கில் நடந்தவற்றை வனிதா, சாக்‌ஷியிடம் தெரிவித்தார். ”உனக்கு நான் தான் உதாரணம். இந்த ஒரு வாய்ப்பை இழந்துவிட்டு தற்போது இங்கு வந்திருக்கிறோம். உன்னைவிட எனக்கு சென்டிமெண்ட் அதிகம். ஆகையால், நீ போட்டியில் மட்டும் ஆர்வம் காட்டி, பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ஜெயிக்க வேண்டும்” என்று லாஸ்லியாவுக்கு அறிவுரை வழங்கினார் அபிராமி.

 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 3 written update episode 72 vijay tv vanitha vijayakumar cheran sandy kavin losliya sherin tharshan sakshi abhirami

Next Story
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷுடன் நடிக்கும் ஹாலிவுட் நடிகர்game of thrones, game of thrones actor, james cosmo, கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஜேம்ஸ் காஸ்மோ, கார்த்திக் சுப்பராஜ், தனுஷ், karthik subbaraj, dhanush, james cosmo tamil film, jeor mormont
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com