Bigg Boss Tamil 3 Episode 73: கடந்த ஜூன் 23-ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதனை 3-வது முறையாக கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
73-ம் நாளில் அபிராமி, லாஸ்லியா, தர்ஷன், கவின் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து வனிதா, சாக்ஷி இருவரும் கவினின் காதல் பற்றி பேசினர். அதனுடன் ஷெரின், தர்ஷன் பற்றியும் பேச்சு அடிபட்டது. புதிதாக விருந்தினராக வந்த சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா
ஆகியோர் வெளியில் நடந்ததைப் பற்றியும், வனிதா, ஷெரின் ஆகியோர் உள்ளே நடந்துக் கொண்டிருப்பதைப் பற்றியும் அவர்களுக்குள்ளாக பேசிக்கொண்டனர்.
என்னுடைய ரிலேஷன்ஷிப்பை விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமையில்ல… – கோபத்தில் கொந்தளித்த ஷெரின்!
’நான் தர்ஷன்கிட்ட பேசினால், கோபப்படுகிறார் வனிதா’ என்று ஷெரின் சாக்ஷியிடம் தெரிவித்தார். ’நான் என்னுடைய போட்டியில் தான் அதிக ஈடுபாடு வைத்திருக்கிறேன்’ எனவும் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, மோகன் வைத்யாவும், சேரனிடம் சென்று லாஸ்லியாவிடம் பேசிதைப் பற்றி கூறினார்.
என்ன மாதிரி இந்த வாய்ப்ப இழந்துடாத… லாஸ்லியாவுக்கு அட்வைஸ் செய்த அபிராமி!
நேற்று நடந்த தலையணை தைக்கும் டாஸ்க் இன்றும் தொடர்ந்தது. இதில், வனிதா அணியினர் தைத்த 16 தலையணையில், 11 மட்டுமே தேர்வு செய்யப்பட்டு 18 மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. மீதமுள்ள 5 தலையணைகள் ரிஜெக்ட் செய்யப்பட்டது. இதே போன்று லாஸ்லியா அணியினர் தயாரித்த 11 தலையணைகளில் 6 மட்டுமே சரியானதாக தேர்வு செய்யப்பட்டது. இதில், அவர்களுக்கு 9 மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
பின்னர் போட்டியாளர்களுக்கு பட்டிமன்றம் நடத்தப்பட்டது. இதில், வனிதா, ஷெரின், சேரன், தர்ஷன் ஆகியோர் ஒரு அணியாகவும், சாண்டி, கவின், லாஸ்லியா, முகென் ஆகியோர் ஒரு அணியாகவும் பிரிக்கப்பட்டனர். அபிராமி, சாக்ஷி, மோகன் வைத்யா ஆகியோர் நடுவர்களாக இருந்து, போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு தலைப்பாக கொடுத்தனர். அவர்கள் கொடுக்கும் தலைப்பிற்கு வனிதா அணியினர் எதிராகவும், கவின் அணியினர் ஆதரவாகவும் பேசினர்.
3 விதமான தலைப்பு கொடுக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது. இறுதியில், 'மன்னிப்பு’ என்ற சொல்லிற்கு மதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்ற தலைப்பில், அதற்கு மதிப்பில்லை என வனிதா அணியினர் சிறப்பாகப் பேசினர். விவாதத்தின் முடிவில், வனிதா அணியினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.