என்னுடைய ரிலேஷன்ஷிப்பை விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமையில்ல... - கோபத்தில் கொந்தளித்த ஷெரின்!

Bigg Boss Tamil 3, Episode 74 Written Update: உனக்கு பிடிக்குதா, இல்லையாங்குறதுல, எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.

Bigg Boss Tamil 3, Episode 74 Written Update: உனக்கு பிடிக்குதா, இல்லையாங்குறதுல, எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Tamil 3 day 74, 05.09.19, sherin, tharshan

Bigg Boss Tamil 3 day 74, 05.09.19

Bigg Boss Tamil 3 Episode 74: பிக் பாஸ் வீட்டில் 74-ம் நாளான நேற்று பட்டிமன்றம் டாஸ்க்கில் என்ன நடந்தது என்பதை கவின், லாஸ்லியா பேசிக் கொண்டிருந்தனர். கேப்டன் வனிதா பாத்திரம் கழுவதற்கு லாஸ்லியாவை அழைத்ததாக சாண்டி அவரிடம் தெரிவித்தார். ஷெரின், தர்ஷன் இருவரும் தங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

Advertisment

”நீ என்னுடைய ஃபிரெண்டு. எனக்கு உன்னிடம் இதைத் தாண்டி எதுவும் இல்லை. நீ இல்லை, நண்பனுக்காக என்றால், நான் என்ன வேண்டுமென்றாலும் செய்வேன்” என்ற ஷெரின், ”யாரிடம் நான் அதிக அன்பும், அக்கறையும் காட்டுகிறேனோ அவர்களுக்காக நான் எதையும் செய்வேன்” என்று தர்ஷனிடம் கூறினார். ”எப்போ பார்த்தாலும் நீ என் பின்னாடியே வர்றன்னு வனிதா சொல்லிட்டு இருக்காங்க, அதனால தான் நான் உன்கிட்ட இருந்து விலகுனேன், இதுல வேற எதுவும் இல்லை” என்று தர்ஷன் தெரிவித்தார்.

மதியம் ஷெரின் சமையல் செய்யவேண்டியது. ஆனால், அவர் செய்யவில்லை என கோபமான வனிதா, ”ஏன் செய்யவில்லை” என்று கேட்க, ”டாஸ்க் இருந்ததால் என்னால் பண்ணமுடியவில்லை” என்றார் ஷெரின். ”டாஸ்க் இருந்தாலும், இல்லாட்டியும் வேலையை சரியாக செய்யனும்” என்றார் வனிதா. இதனால் கோபமடைந்த ஷெரின், ”எப்போ பார்த்தாலும் நீ என்னை டார்க்கெட் பண்ணிக்கிட்டே இருக்க. நான் எந்த வேலையும் பார்க்கவில்லை. தர்ஷன் பக்கத்துல இருக்கனால, நான் எந்த வேலையும் செய்யலன்னு, எப்படி சொல்ல முடியும்? ஏன், எப்போ பார்த்தாலும் தர்ஷன் பத்தியே பேசிட்டு இருக்காங்க. என்னுடைய ரிலேஷன்ஷிப் யார் கூட வேணும்ன்னாலும் இருக்கும். ஆனா, அது பத்தி விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. உனக்கு பிடிக்குதா, இல்லையாங்குறதுல, எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. எனக்கும், தர்ஷனுக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் பத்தி உனக்கு புரியலன்னா, அதைப் பத்தி பேச வேணாம்” என்றார்.

Advertisment
Advertisements

எனக்கு பச்சோந்தியும் வேணாம், நாயும் வேணாம் – விருதை தூக்கி எறிந்த லாஸ்லியா

அதற்கு, "வெளில ஒரு பொண்ணு தர்ஷனுக்காக காத்துக்கொண்டிருக்கும் போது, நீ அவன் கூட அஃபைர் வச்சிருக்கது தப்பு. இது எனக்கு பிடிக்கல” என்றார் வனிதா. ”உனக்கு, அறிவு இருக்கா? ஏன், இப்படியெல்லாம் பேசிக்கிட்டே இருக்க? அவனுக்கும், எனக்கும் என்ன அஃபைர் இருக்கு? ஏன் எப்போ பார்த்தாலும் அதைப் பத்தியே பேசிட்டு இருக்க” என்று வனிதாவை திட்டி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் ஷெரின். ”ஏன், அப்படி பேசுறீங்க? எங்களுக்குள் என்ன அஃபைரும் இல்ல” என்று தர்ஷன் கூறினார்.

பின்னர் தர்ஷன் அருகில் வந்த ஷெரின், ”இனிமேல் உன்னுடைய ஃப்ரண்ட்ஷிப் எனக்கு தேவையில்லை. உன்னுடன் நேரம் செலவிடவும், பேசவும் வேண்டாம். உன்னிடம் பேசினால், அஃபைர்ன்னு எல்லோருமே பேசுறாங்க. உன்னுடைய காதலியை கஷ்டப்படுத்துறதாவும் பேசுறாங்க. இதெல்லாம் போதும். இனிமேல், அப்படி நடக்க வேண்டாம். எனக்கு வெளில யாரும் இல்லை. நான் தனியா இருக்கேன். ஆனா, உனக்கு வெளில, காதலி இருக்காங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். அவங்க என்னால, காயப்பட வேண்டாம்” என்று கூறினார்.

பின்னர் சேரன் வந்து சமாதானம் செய்கையில், ”எனக்கு வனிதாவும் வேணாம், தர்ஷனும் வேணாம், இங்க யார் கிட்டயும் பேச புடிக்கல சார். இதுக்கெல்லாம் காரணம் வனிதா தான்” என்று கதறி அழுதார் ஷெரின்.

Bigg Boss Tamil Bigg Boss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: