’வனிதா இந்த வாரம் நல்ல குணமா இருந்தாங்க’: ஆனா எலிமினேட் ஆகிட்டாங்க!
Bigg Boss Tamil 3, Episode 84 Written Update: அடுத்தடுத்த 3 வாரங்களுக்கு 3 பேர் வெளியேற வேண்டும். அது யார் யாராக இருக்கும் என போட்டியாளர்களிடம் கேட்டார் கமல்.
Bigg Boss Tamil 3, Episode 84 Written Update: அடுத்தடுத்த 3 வாரங்களுக்கு 3 பேர் வெளியேற வேண்டும். அது யார் யாராக இருக்கும் என போட்டியாளர்களிடம் கேட்டார் கமல்.
Bigg Boss Tamil 3 Episode 84: பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டு, சில வாரங்களில் வெளியேற்றப்பட்டு, வைல்ட் கார்டு எண்ட்ரியில் மீண்டும் போட்டியாளராகக் கலந்துக் கொண்டார் வனிதா. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தைக் கிளப்பியது. காரணம், மக்கள் ஓட்டு போட்டு வெளியேற்றிய ஒருவரை எப்படி மீண்டும் போட்டியாளர் ஆக்கலாம் என்பது. இந்நிலையில் 83-ம் நாளில் மீண்டும் பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் வனிதா விஜயக்குமார்.
Advertisment
முன்னதாக, மேடையில் தோன்றிய கமல், “குழந்தை தொழிலாளர்கள் இல்லாமல் செய்ய வேண்டும். வரும் காலத்தில் அப்படியொன்று நடந்தால் அதை இல்லாமல் செய்ய வேண்டும். மேலை நாடுகளில் தேர்வுகளை குறைந்த்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் இங்கு தேவையில்லாத தேர்வுகளால் பலரின் படிப்பு தடைப்பட்டு விடும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது”என்றுக் கூறினார்.
அகம் டிவி வழியே அகம் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற கமல், முதல் வேலையாக காலர் ’ஆஃப் த வீக்’ காலரை கனெக்ட் பண்ணினார். முகெனிடம் பேசிய அந்த காலர், “நீங்க நல்லா கேம் விளையாடுறீங்க, ஆனா எதாச்சும் பிரச்னை வரும் போது தள்ளி இருக்கீங்களே” என்றார். “நம்மளும் போன அந்த சண்டை பெருசாக வாய்ப்பு இருக்கு. அதான் காரணம்” என பதிலளித்தார் முகென்.
அடுத்ததாக எவிக்ஷனுக்கு வந்தார் கமல். அடுத்தடுத்த 3 வாரங்களுக்கு 3 பேர் வெளியேற வேண்டும். அது யார் யாராக இருக்கும் என போட்டியாளர்களிடம் கேட்டார் கமல், எல்லோரும் அவர்களுக்குப் படும் 3 பேரை சொன்னார்கள். பெரும்பாலானவர்கள், வனிதாவின் பெயரைக் குறிப்பிட்டனர்.
பின்னர் முந்தைய நாள் நிகழ்ச்சியில் மச்சினிச்சியை மிஸ் பண்ணியதாக சாண்டி குறிப்பிட்டார். அதனால் சாண்டியின் மச்சினிச்சி சிந்தியாவை மேடையேற்றினார் கமல். சாண்டியைப் பார்த்த சிந்தியா கண்ணீர் சிந்தினார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர் வைத்த சிந்தியா, லாஸ்லியாவை தவளை என்றும், வனிதாவை பெஸ்ட் மாம் என்றும், ஷெரினை ஏஞ்சல் என்றும் குறிப்பிட்டார்.
பின்னர் மேடையேறிய சாண்டியின் மாமியார் ‘இதுவரை சாண்டியை மாப்பிள்ளை என்றே அழைத்ததில்லை என்றும், அவரும் தனக்கு ஒரு மகன் தான்' எனவும் நெகிழ்ச்சியாகக் கூறினார். கூடவே ‘ஜெயிச்சுட்டு வாங்க மாப்பிள்ள' என்றார் அவர். இதனை அகம் டிவி வழியே பார்த்த சாண்டி கண்ணீர் விட்டு அழுதார்.
அடுத்ததாக ஷெரினின் சித்தி மேடையேறினார். என் கணவர் இறந்துவிட்டார், குழந்தைகள் கிடையாது. ஷெரின் தான் எனக்கும் அம்மாவும், குழந்தையும் என்றார். பிறந்தநாள் கொண்டாடும் தர்ஷனுக்கு வீடியோ மூலம் குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். சேரனுக்கு அவரது அத்தை மகன் ஆஸ்திரேலியாவிலிருந்து வீடியோவில் பேசினார். முகெனுக்கு அவரது அப்பா மற்றும் குடும்பத்தினர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
பின்னர் வனிதா வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். ‘என்ன அன்னை வனிதான்னு சொல்லும் போதே கிளம்பிடனும். இல்லைன்னா திரும்ப என்ன பத்தின பிம்பம் மாறிடும்’ என்றார் வனிதா. இறுதியாக தர்ஷனுக்கு பிறந்தநாள் கேக் கட் செய்ததோடு 84-ம் நாள் நிகழ்ச்சி முடிந்தது.