லாஸ்லியா சாப்டர் ஓவர்: ஷெரினிடம் தன் வேலையை ஆரம்பித்த கவின்!

Bigg Boss Tamil 3, Episode 85 Written Update: லாஸ்லியாவை வெறுப்பேத்துவதற்காக ஷெரினுடன் தான் நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டார் கவின்.

By: Updated: September 18, 2019, 08:29:18 AM

Bigg Boss Tamil 3 Episode 85: கடந்த ஜூன் 23-ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருவழியாக 85 நாட்களைக் கடந்திருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சி, நாமினேஷனோடு தான் தொடங்கியது. சாண்டி, கவின் இருவருமே சேரன் மற்றும் ஷெரினை நாமினேட் செய்தார்கள்.

முதன் முறையாக நன்றாக டாஸ்க் விளையாண்ட கவின்!

“இருக்குறதுலயே ரொம்ப ஸ்ட்ராங்கானவங்க இவங்க, எப்படியும் மக்கள் காப்பாத்திடுவாங்கன்னு தெரியும். அதான் நாமினேட் பண்றேன்” என சாண்டி கூற, கவின் கூறிய காரணம் படு மொக்கையாக இருந்தது. அதாவது “இங்க இருக்குறதுலயே, டைட்டிலுக்கு தகுதியில்லாதவங்க இவங்க தான்” என்றார். இன்னும் 15 நாட்களில் நிகழ்ச்சியே முடிந்துவிடும், ஆனால் கவின், இன்னும் வீட்டின் தலைவராகவில்லை, எந்த டாஸ்க்கிலும் ‘பெஸ்ட் பெர்ஃபார்மெர்’ வாங்கவில்லை. தன் மேல் பிரச்னைகளை வைத்துக் கொண்டு, அடுத்தவர் மேல் ஏதேனும் பழி போடுவதே, கவினுக்கு வாடிக்கையாகிவிட்டது.

’வனிதா இந்த வாரம் நல்ல குணமா இருந்தாங்க’: ஆனா எலிமினேட் ஆகிட்டாங்க!

பின்னர் சேரன், சாண்டி மற்றும் கவினை நாமினேட் செய்தார். ”கவின் மற்றும் சாண்டி, முகென், தர்ஷன் தான் வின் பண்ண வேண்டும் என்கிறார்கள். லாஸ்லியா, ஷெரினை என்னால் நாமினேட் செய்ய முடியாது. அப்போ மிச்சம் இருக்குறது சாண்டியும் கவினும் தான்” என முகெனிடம் கூறினார்.

பின்னர், குடும்பத்தினர் வந்த போது, போட்டியாளர்களிடம் தனியாக பேசிய சில விஷயங்கள் வீடியோவாக போடப்பட்டது. லாஸ்லியாவிடன் தள்ளி இருக்கும்படி சேரனின் மகள் கூறியது, கொஞ்சம் தான் போடப்பட்டது. ஆனால், லாஸ்லியாவின் அம்மா, லாஸ்லியாவுக்குக் கூறிய அட்வைஸ் முழுவதுமாக ஒலிபரப்பப் பட்டது.

இதைப் பார்த்ததும் கவினின் முகம் வாடியது. எப்போதும் போல முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு, ‘சிம்பத்தி’ கிரியேட் பண்ண எவ்வளவோ முயன்றார். ஆனால் லாஸ்லியா கொஞ்சமும் அசரவில்லை. அழுதால் லாஸ்லியா மனம் இறங்குவார் என நினைத்த கவின் அதையும் செய்தார், ஆனால் எதுவும் எடுபடவில்லை. கடைசியில் சிரித்து சமாதானம் ஆனார்.

அதைத் தொடர்ந்து பலூன் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் அனைத்து போட்டியாளர்களும் நன்றாக விளையாடினர். பின்னர் ஒவ்வொருத்தராக அதில் தோற்றுப்போக, கடைசியாக தர்ஷன் இதில் வெற்றிப்பெற்றார். பின்னர் 1 முதல் 7 வரை போட்டியாளர்களை வரிசைப்படுத்தும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் சேரன் மற்றும் ஷெரினை தவிர, மற்ற எல்லாருமே முதலிடத்திற்கு தர்ஷனை தேர்வு செய்தார்கள். கவின் சாண்டியை தேர்வு செய்தார். பெரும்பாலும் தர்ஷன், சாண்டி, முகென் ஆகியோர் முறையே, 1, 2, 3 இடங்களும், கடைசி இடத்தில் கவின், லாஸ்லியாவும் நிற்க வைக்கப்பட்டனர்.

லாஸ்லியாவை வெறுப்பேத்துவதற்காக ஷெரினுடன் தான் நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டார் கவின். லாஸ்லியா தன்னை விட்டு விலகுவது அவருக்கு புரிவதாகவே தெரிகிறது. குடும்பத்தினர் வந்து போன பிறகு லாஸ்லியாவிடம் ஒரு தெளிவு பிறந்திருப்பது கண்கூடாக தெரிகிறது. இருப்பினும், உணர்வுப்பூர்வமாக, பிளாக் மெயில் செய்துக் கொண்டிருக்கிறார் கவின்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss tamil 3 written update episode 85 vijay tv cheran tharshan losliya kavin sandy task

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X