பிக் பாஸ்: முதன்முறையாக கவினை பாராட்டிய சேரன்

Bigg Boss Tamil 3, Episode 86 Written Update: லைஃப்ல கவின் மாதிரி சில இரிடேஷன் வரும் அத கண்டுக்காதீங்க. நான் கமல் சார் கிட்ட சொல்லிட்டு வந்த மாதிரி, எந்த சூழ்நிலையிலும் என்னோட மனிதத்தன்மைய இழக்காம இருந்திருக்கேன்.

Bigg Boss Tamil 3 day 86, 17.09.19,
Bigg Boss Tamil 3 day 86, 17.09.19,

Bigg Boss Tamil 3 Episode 86: பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், 86-ம் நாள் ’வேலைக்காரன்’ பட பாடலுடன் தொடங்கியது. அதன் பின்னர் ”காஃபி இப்படி போட்டுருக்க என ஷெரினிடம் பேசிக் கொண்டிருந்த கவின், உன்னோட பேட் சைட கொண்டு வரணும் இல்ல, 80 நாள் கடந்தும் அது இன்னும் வெளியே  வரவே இல்ல” என்றார். அனைத்தும் கேட்டு விட்டு அங்கிருந்து ஷெரின் கடந்து போனார்.

லாஸ்லியா சாப்டர் ஓவர்: ஷெரினிடம் தன் வேலையை ஆரம்பித்த கவின்!

அடுத்ததாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பின் என்ன பேசுவீர்கள் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. முதலில் பேசிய முகென் இந்த வெற்றியை தன் நாட்டுக்கும், தான் ஜெயித்த நாட்டுக்கும்  அர்ப்பணிக்கிறேன் என்றார். அடுத்ததாக பேசிய கவின், உண்மையா வெற்றி பெற்றால் மட்டும் தான் அந்த பேச்சு உண்மையாக இருக்கும், இப்படி பேசச் சொன்னால் அது முன் கூட்டியே தயார் செய்து பேசுவதைப் போலத் தான் இருக்கும், அதனால் நான் உண்மையிலேயே ஜெயித்தேன் என்றால், அப்போது பேசுகிறேன் என்றார்.

பிக் பாஸ் டைட்டிலை வெல்லப் போவது யார்? டாஸ்க்கில் ஏற்பட்ட ட்விஸ்ட்!

‘Traffic’ ஷகுர் பானு : இரவில் மருத்துவமனை பனி… பகலில் போக்குவரத்தை சீர் செய்தல்.

”லைஃப்ல கவின் மாதிரி சில இரிடேஷன் வரும் அத கண்டுக்காதீங்க. நான் கமல் சார் கிட்ட சொல்லிட்டு வந்த மாதிரி, எந்த சூழ்நிலையிலும் என்னோட மனிதத்தன்மைய இழக்காம இருந்திருக்கேன்” என்றார் ஷெரின். ”நன்றிய தவற வேற எதுவும் இல்லன்னு” சாண்டி சொன்னார். யாருக்கும் தோன்றாதது சேரனுக்கு தோன்றியது. அதாவது நான் ஃபர்ஸ்ட் என்றால் என்னுடைய பேர் தானே முதலில் இருக்க வேண்டுமென தன் படத்தை எடுத்து முதல் இடத்தில் வைத்து விட்டு பேசத் தொடங்கினார்.

அடுத்ததாக கலர் கொட்டும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. குப்பியில் வைத்திருக்கும் கலரை எடுத்து, அதில் எழுதியிருக்கும் வாக்கியம் யாருக்கு பொருந்துமோ, அவர்கள் பக்கத்தில் வைத்திருக்கும் கண்ணாடி கலனில் அந்த கலரை கொட்ட வேண்டும்.  பின்னர் நடந்த டிக்கெட் ஃபினாலே டாஸ்க்கில் முகென் வெற்றி பெற்றார். கவின் நன்றாக விளையாடினார். தம்பி நீ நல்லா விளையாண்ட என கவினைப் பாராட்டிய சேரன், உன்னோட ஃபோகஸ் எனக்கு பிடிச்சிருந்தது என்றார். கவினின் காலை அழுத்தி விட்டார் முகென்.

பின்னர் போட்டியாளர்கள் பிக்பாஸைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்துக் கேட்டார் பிக் பாஸ். அனைவரும் ஜாலியாக பேசினர். இறுதியில் பரோட்டாவும் சிக்கனும் கேட்டு கேமரா முன்பு அடம் பிடித்தனர். திரும்பவும் ஷெரினிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார் கவின். தான் நாமினேஷனில் இருப்பதால் மட்டுமே இதை ஷெரின் பொறுத்துக் கொண்டிருக்கிறார் எனத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து லாஸ்லியாவிடம் பேசத் தொடங்கினார் கவின்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 3 written update episode 86 vijay tv kavin mugen rao tharshan sandy cheran

Next Story
தேவியின் ஆசையை நிறைவேற்ற களத்தில் மாயன்! இதுல்லாம் எங்க போய் முடிய போதோNaam Iruvar Namakku Iruvar
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express