Bigg Boss Tamil 3 Episode 93: பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 93 நாட்களைக் கடந்துள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் ”நாம ரெண்டு பேரும் என்ன தான் பண்றது’’ என கவினும் லாஸ்லியாவும் பெட்ரூமில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
பிக் பாஸ் வீட்டுக்கு விருந்தினர்களாக கடந்த சீசன் போட்டியாளர்கள் மகத்தும் யாஷிகாவும் வருகை தந்ததனர். வீட்டிற்கு வந்ததும் லாஸ்லியாவிடம், அவரது அப்பாவின் படத்தைக் கொடுத்தார் மகத். அதுவரை சிரித்து சந்தோஷமாக இருந்த லாஸ்லியாவுக்கு, அவரின் அப்பா படத்தைப் பார்த்ததும், முகம் மாறியது. அதோடு, ”இங்க டாஸ்க் மட்டும் நல்லா விளையாடுங்க, அதையும் தாண்டி ரிலேஷன்ஷிப் எல்லாம் இருக்கும், ஆனா அதையெல்லாம் ஒத்தி வச்சிட்டு, டாஸ்க் விளையாடுங்க” என மகத் சொன்னதும், பேயறைந்தது போல் நின்றார் லாஸ்லியா. வெளியில் இருந்து வந்தவர்களும் தங்களைத் தான் குற்றம் சொல்கிறார்கள் என சலித்துக் கொண்டார்.
கிடைச்ச வரைக்கும் லாபம்: நடையைக் கட்டிய கவின்!
பின்னர் உங்களுக்குப் பிடித்த போட்டியாளர் யாரேனும் ஒருவருக்கு நீங்கள் எதாவது எழுதுங்கள் என்று ஷெரினிடம் தெரிவித்தார் யாஷிகா. இதற்கு தர்ஷன் பற்றி எழுதினார் ஷெரின். இதனை அவர் யாருக்கும் காட்டாத நிலையில், கேமரா நன்றாக படம் பிடித்துள்ளது.
”மேகமூட்டமான நாளில் நீ என் சூரிய ஒளி, நான் சொல்ல விரும்புவது நிறைய இருக்கிறது. எனது இருண்ட பகுதிகளை நீ தான் ஒளிரச் செய்கிறாய்” என்று ஷெரின் எழுதியது இணையத்திலும் வலம் வருகிறது. எழுதியதை யாருக்கும் காட்டாத நிலையில், யாஷிகா மற்றும் மகத்திற்கு ஒரு உத்தரவு பிறப்பித்தார் பிக் பாஸ். அதன்படி, ஷெரின் யாருக்கு லெட்டர் எழுதினாரோ அதனை அவரிடம் கொடுக்க வைத்துவிட்டுச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டார். ஆனால், இது தன்னால் முடியாது என்று கூறி ஷெரின் அந்த லெட்டரை கிழித்து, குப்பைத் தொட்டியில் போடாமல் தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டார் ஷெரின்.
இதனை எதிர்பாராத தர்ஷன், தனக்குதான் ஷெரின் லெட்டர் எழுதிருப்பார் என்று எண்ணி, குப்பைத்தொட்டியில் தேடிப்பார்த்தார். ஆனால், கிடைக்கவில்லை. இதனால், தர்ஷன் கொஞ்சம் வருத்தப்பட்டுக் கொண்டார். அதன் பிறகு இரவு தூங்குவதற்கு முன்பாக மீண்டும் லெட்டர் எழுதி பாதுகாப்பாக வைத்துக்கொண்டார். வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது அதனை கொடுத்துவிட்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் பிக்பாஸ் வீட்டுக்கு மன்னராகி விட்டார் தர்ஷன். அதன் பிறகு அனைவருக்கும் வேலைகளை ஏவி அலப்பறை செய்தார். இதனால் பிக் பாஸ் குடும்பத்தினரும் மகிழ்ந்தனர்.