scorecardresearch

”எனக்கு ஃபைனல்ஸுக்கு போக ஆசை இல்ல, வீட்டுக்கு போகணும்” – அடம் பிடித்த லாஸ்லியா

Bigg Boss Tamil 3, Episode 96 Written Update: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நிறைய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்போது 5 படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன்.

Bigg Boss Tamil 3 day 96, 27.09.19,
Bigg Boss Tamil 3 day 96, 27.09.19,

Bigg Boss Tamil 3 Episode 96: கடந்த ஜூன் 23-ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 6-ம் தேதி முடிவடைகிறது. தற்போது சாண்டி, லாஸ்லியா, தர்ஷன், ஷெரின், முகென் ஆகிய 5 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

வீட்டை விட்டு வெளியேறிய கவின்: வெளியேறத் துடிக்கும் லாஸ்லியா!

ரூ.5 லட்சத்தோடு வெளியேறிய கவினை நினைத்து நினைத்து வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று லாஸ்லியா அழுதுக் கொண்டிருந்தார். மற்ற போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்தினர். என்னதான் இருந்தாலும் அவரால் சமாதானமாக முடியவில்லை.

பின்னர் பிக் பாஸ் வீட்டிற்கு கடந்த சீசனின் போட்டியாளர் ஐஸ்வர்யா தத்தா சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். இவரது நடிப்பில், உருவாகியுள்ள ’அலேகா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிக் பாஸ் வீட்டில் வெளியிடப்பட்டது. ”இது இன்றைய காலகட்டத்திற்கான ஒரு லவ் ஸ்டோரி. இந்த கால காதல் வாழ்க்கையில் என்ன மாதிரியான பிரச்சனைகள், சந்தோஷம் இருக்கிறது என்பதை இந்தப் படம் விளக்கும்” என்றார் ஐஸ்வர்யா.

அதோடு, “பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நிறைய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்போது 5 படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையே மாறிவிட்டது. எவ்வளவு நல்ல பெயர் இருந்தாலும், கெட்ட பெயர் இருந்தாலும் மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்துக் கொண்டேதான் இருப்பார்கள். மக்களின் அன்பு கண்டிப்பாக கிடைக்கும். உங்களுக்கும் நிறைய வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கும். எனக்கு இப்படியொரு வாய்ப்பு கொடுத்த, பிக் பாஸ்க்கு கோடான கோடி நன்றி” என அவருக்குக் கொடுக்கப்பட்ட டாஸ்க்கை சரியாக கூறி முடித்தார்.

இதைத் தொடர்ந்து, கன்பெஷன் ரூமுக்கு லாஸ்லியாவை அழைத்த பிக் பாஸ், இன்றைய டாஸ்க் என்ன என்பதைக் கொடுத்தார். ”என்னை உங்களுக்கு பிடிக்குமா” என்று பிக் பாஸிடம் லாஸ்லியா கேட்க, அதற்கு ’பிடிக்கும்’ என்று கூறினார் பிக் பாஸ்.

பின்னர், கண்ணாடி குவளையில், தெர்மாகோல் நிரப்பும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், தர்ஷன் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்களை, யாரையெல்லாம் மிஸ் பண்ணுகிறார்கள் என்பதை தெரிவித்தனர்.

”2-வது முறையாக சென்ற போதுதான் சேரனை நான் மிகவும் மிஸ் பண்ணுனேன்” என்றார் தர்ஷன். ”முதல் வாரத்திலேயே நானும், சாக்‌ஷியும் நெருங்கி பழகினோம். எங்களுக்குள் நல்ல ஒரு நட்பு உருவானது. அவரைப் போன்றுதான் அபிராமியும். சாக்‌ஷி, அபிராமி ஆகியோருடன் நான் நன்றாகவே பழகினேன்” என்றார் ஷெரின்.

”நான் மிஸ் பண்ணியது அபிராமியைத் தான் என்றார் முகென். எனக்கு எவ்வளவு உதவியாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவருக்கும், எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், அதையும் மீறி, எனக்கு உதவியாக அபிராமி இருந்தார்” என்றார்.

”நான் இறுதிப்போட்டிக்கு சென்றாலும், கவினையும் என்னுடனேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அவன் எதற்காக சென்றான், ஏன் சென்றான் என்ற காரணம் இதுவரைக்கும் எனக்கு தெரியாது. இறுதிப் போட்டிக்கு சென்றால், கவினின் மெடலை அணிந்துகொண்டுதான் செல்வேன். ஐ லவ் யூடா கவின்” என்றார் சாண்டி.

”ஆரம்பம் முதல் எனக்கும் அபிராமிக்கும் இடையில், நல்ல நட்புறவு இருந்தது. அடுத்து, சேரன் அப்பா. ஒரு கட்டத்தில், அவருக்கும் எனக்கும் இடையில் சின்ன மன வருத்தம் ஏற்பட்டது. அவரை நிறைய காயப்படுத்தியிருக்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.  எனக்கு ஆரம்பத்தில் பிடிக்காமல் பிடித்த ஒருவர் கவின் மட்டுமே. அவர் வெளியில் சென்றதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை” என்றார் லாஸ்லியா.

தொடர்ந்து, “என்னுடைய பெற்றோர் வந்த பிறகு அவன் நிறைய காயப்பட்டிருப்பதை நான் உணர்ந்தேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்கும், கவினுக்கும் உள்ள உறவு நட்பையும் மீறிய ஒன்று. நீ சென்றதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆதலால், தான் நான் அழுதேன். இனிமேல் அழமாட்டேன். ஏனென்றால், நீ வெளியில் ஜாலியாக இருக்கிறாய் என்பது தெரியும். அதனால், தான் நானும் இப்போது ஜாலியாக இருக்கிறேன். இந்த வாரத்தில் நானும் வந்துவிடுவேன். விரைவில் உங்களை சந்திக்கிறேன்” என்றார்.

கடைசியாக நடந்த கண்கட்டு வித்தை டாஸ்க்கில், போட்டியாளர்கள் தங்களுக்கு தேவையானவற்றை அவர்களே தேர்வு செய்யும் விதமாக சிறப்பு சலுகை கொண்ட பந்து வழங்கப்பட்டது. அதில், பரோட்டா கோழிக்கறி, கிரில் சிக்கன், ஹெட் மசாஜ் என்று புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss tamil 3 written update episode 96 vijay tv losliya