/tamil-ie/media/media_files/uploads/2020/10/Bigg-Boss-Tamil-4-Balaji-Murugadoss.jpg)
balaji murugadoss age bigg boss balaji
Bigg Boss Balaji Murugadoss: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வருடம் தர்ஷன் கலந்துக் கொண்டதைப் போல, இந்தாண்டு கலந்துக் கொண்டிருப்பவர் மாடல் பாலாஜி முருகதாஸ்.
பிரபல நடிகை மரணம்: கீட்டோ டயட் ஆபத்தானதா? இதை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?
சென்னையைச் சேர்ந்த பாலா டிசம்பர் 2 ஆம் தேதி பிறந்தவர். தற்போது அவருக்கு வயது 24. தனது ஆரம்பக் கல்வியை கார்த்திகேயன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த இவர், எஸ்.ஆர்.எம் கல்லூரியில் கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/10/Balaji-Murugadoss-2.jpg)
இருப்பினும், அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பொதுவில் எதுவும் விவாதித்ததில்லை. பல்வேறு மாடலிங் பட்டங்களை வைத்திருக்கும் இவர், அழகு போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதிப்படுத்திய இவர், இரண்டு ஸ்டார்ட்-அப்களின் இணை நிறுவனர். மேலும், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் டெட் பேச்சாளராகவும் இருந்து வருகிறார். அதோடு மணீஷ் மல்ஹோத்ரா போன்ற மிகச் சிறந்த பேஷன் டிசைனர்களுக்கும், ரேம்ப் வாக் செய்திருக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/10/Balaji-Murugadoss-1-835x1024.jpg)
பாலா பல்வேறு அழகு போட்டிகளில் கலந்துகொண்டு தனது தொழில்முறை பயணத்தைத் தொடங்கினார். 2017-ல் மிஸ்டர் இந்தியா, மிஸ்டர் பெர்பெக்ட் பாடி என்ற பட்டங்களை வென்ற பிறகு பாலா புகழ் பெற்றார். இந்த மாடல் 2018-ஆம் ஆண்டில் ருபாரு மிஸ்டர் இன்டர்நேஷனல் இந்தியாவை வென்றதோடு, மிஸ்டர் இன்டர்நேஷனல் 2019-ல் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். பின்னர், பாலா தமிழ் படமான டைசன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவர் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்தார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. தற்போது பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் உள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.