Bigg Boss Tamil 4: பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது அக்டோபர் 4-ம் தேதி துவங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹத்ராஸ் சென்ற ராகுல், பிரியங்கா தடுத்து நிறுத்தம்; போலீஸ் கீழே தள்ளியதாக ராகுல் புகார்
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் இதனை தொடர்ந்து 4-வது முறையாக உலக நாயகன் கமல் தொகுத்து வழங்குகிறார். இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், ரியோ ராஜ், கிரண், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த யூகங்களுக்கு, வரும் 4-ம் தேதி தொடங்கும் பிக் பாஸ் கிராண்ட் ஓபனிங் நிகழ்ச்சி தான் பதிலளிக்கும்.
பார்வையாளர்களை கவரும் வகையில் நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில், ”நாம முகத்தில் மாஸ்க் போட்டுட்டு இருப்போம். ஆனால் மாஸ்க்கே முகமாக போட்டுட்டு இருக்கிறவங்க நெறைய பேர் இருக்கிறார்கள்" என்கிறார். பின்னர் ”இன்னும் மூன்று தினங்களில் பிக்பாஸ்” என்பதையும் தனது ஸ்டைலில் பதிவு செய்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ராம கோபாலன் சுதந்திரப் போராட்ட வீரரா? முதல்வர் அறிக்கைக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
அதோடு விஜய் டிவி வெளியிட்ட மற்றொரு ட்வீட்டில், "சில பல பிரம்மாண்ட Launchகள் இருக்கு. இந்த மாசம் நல்லபடியா போகணும் கடவுளே.." என ஒரு ட்விட் பதிவிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”