’அவனை நம்பவே கூடாது’ ஆரியை தாக்கிய பாலாஜி

‘ஆரி யாரையும் காலி பண்ணி விளையாட நினைக்கலையா?’

Bigg Boss Tamil 4 Promo aari, balaji murugadoss
Bigg Boss 4 Tamil Vijay Tv Aari Bala

Bigg Boss Tamil 4 Promo:  பிக் பாஸ் வீட்டில் ஆரி மற்றும் பாலாஜி இடையே தொடர்ந்து பிரச்சனைகள் வெடித்து வருகிறது. அப்படித்தான் இன்றைய முதல் ப்ரோமோவும் உள்ளது.

தமிழகம், அசாம் தலைவர்களுடன் ராகுல் காந்தி நடத்திய ஆலோசனை: நடந்தது என்ன?

கடந்த வாரம் முழுவதும் கால் சென்டர் டாஸ்க் நடந்தது. இந்த வாரம் வாடிக்கையாளர்கள், கால் சென்டர் ஊழியர்களாகவும், கால் சென்டர் ஊழியர்கள் வாடிக்கையாளர்களாகவும் மாறியிருக்கிறார்கள். இன்றைய ப்ரோமோவில், ஆரிக்கு கால் செய்யும் பாலாஜி, ‘நான் உங்களுக்கு பெரிய ஃபேன், ஆனால் பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே’ என ஆரம்பிக்கிறார்.

விஜய், சூர்யாவை தொடர்ந்து விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

‘நான் யாரையும் காலி பண்ணி விளையாடமாட்டேன்.. ஒண்ணா வாங்க சேர்ந்து விளையாடலாம்.. அது தான் என் மெண்டாலிட்டின்னு அடிக்கடி நீங்கள் சொல்றீங்க. ஆரி யாரையும் காலி பண்ணி விளையாட நினைக்கலையா?’ எனும் பாலாஜி, “நான் கெட்டவன்னு சொல்றவனை நம்பலாம், நான் நல்லவன்னு சொல்றான் பாரு அவனை கூட நம்பலாம். ஆனால் நான் மட்டும் தான் நல்லவன் தான்னு சொல்றவனை நம்பவே முடியாது” என ஆரியை வார்த்தைகளால் தாக்குகிறார்.

இரண்டாவது ப்ரோமோவில், “நான் பதில் சொல்லக் கூடாது. அவனோட கருத்து மட்டுமே இருக்கணும், அது எனக்கு எதிரா இருக்கணும்” என பாலாஜி நினைத்து அப்படி பேசியதாக ஆரி சனத்திடம் தெரிவித்தார். அர்ச்சனா, நிஷாவிடம் பேசிக் கொண்டிருக்கும் பாலா, ‘எதனால் கத்திக்கிட்டாங்கங்கறது பார்வையாளர்களுக்கு தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காக தான் இப்படி பேசினேன்’ என்றதோடு, ‘இனி நான் யாரிடமும் வாய்ஸ் ரெய்ஸ் பண்ணி கூட பேச விரும்பவில்லை’ என்றார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 4 promo aari balaji murugadoss

Next Story
விஜய், சூர்யாவை தொடர்ந்து விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்bomb threat to vikram house in chennai
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com