காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு உதவ, கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கவிருக்கும் தேர்தல் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
Tamil News Today Live : புரெவி புயல் இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும்
இந்த சந்திப்புப் குறித்த விஷயங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் காங்கிரஸ் தான் கூட்டணியில் இருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது தமிழகத்தில் வெல்லக்கூடிய இடங்களை அடையாளம் காண வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக, நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அசாமை பொருத்தவரை, ஒரு பெரிய சிறுபான்மை தளத்தைக் கொண்ட பத்ருதீன் அஜ்மலின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) உடனான கூட்டணி குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு அசாம் தலைவர்களை மத்திய தலைமை கேட்டுக்கொண்டது.
சிறப்புக் குழுவின் மற்ற உறுப்பினர்கள், கே. சி. வேணுகோபால், அம்பிகா சோனி, முகுல் வாஸ்னிக் மற்றும் ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட இரு மாநில தலைவர்களுடன் இரண்டு தனித்தனி காணொளி காட்சி சந்திப்புகளை நடத்தினர் ராகுல் காந்தி. யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், ஊடகங்களின் ஒழுக்கத்தை மீறி பேசுவது குறித்து கட்சித் தலைவர்களை எச்சரித்தார் வேணுகோபால். அவரது கருத்துக்கு ராகுல் காந்தி ஒப்புதல் அளித்தார்.
பீகாரில் 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களை மட்டுமே வென்றது. திமுக தலைமையிலான கூட்டணியின் ஒரு பகுதியாக காங்கிரஸ் வெல்லக்கூடிய இடங்களை அடையாளம் காண்பது குறித்து தமிழகத் தலைவர்கள் பேசினர். முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தரவுகளைப் பயன்படுத்தி இடங்களை அடையாளம் காண்பதுடன், வாக்குச்சாவடி அளவிலான குழுக்களை வலுப்படுத்துவதையும் வலியுறுத்தினார். மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உட்பட பல தலைவர்கள் ராகுல்காந்தியை தமிழகத்தில் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் அது "கட்சிக்கு கேம் சேஞ்சராக" இருக்கலாம்.
ஒரு சில மாநிலத் தலைவர்கள் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு உட்கட்சி மாற்றங்களைச் செய்யுமாறு கட்சி தலைமையைக் கேட்டுக் கொண்ட நேரத்தில், ஒரு தலைவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (ஈ.வி.எம்) குறித்து அச்சத்தை வெளிப்படுத்தியதாக தெரிகிறது. அசாம் தலைவர்களுடனான சந்திப்பில், “கூட்டணி மற்றும் நிதி ஒதுக்கீடு பற்றிய கேள்வியை கட்சியின் தலைமைக்கு விட்டு விடுங்கள்” என்ற ராகுல் காந்தி, முக்கியமான அரசியல் பிரச்சினைகள் குறித்து ஒரே குரலில் பேசும்படி கேட்டுக் கொண்டார்.
இப்படியெல்லாம் தர்றாங்களா? 11 ஜிபி இலவச டேட்டா பெறும் முறை இதுதான்..!
கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் பூபன் போரா, அசாம் காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா, உயர் மட்ட தலைமையால் இறுதி செய்யப்படாமல், கூட்டணி குறித்து பகிரங்க அறிக்கை வெளியிட்டதை சுட்டிக் காட்டினார். "பாஜக (பாரதிய ஜனதா) துருவமுனைப்புக்கு ஒவ்வொரு முயற்சியும் இருக்கும் என்றும் அதை புத்திசாலித்தனமாக நிர்வகிக்க முடியும் என்றும் ராகுல்-ஜி எங்களிடம் கூறினார்" என அசாம் தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”