Bigg Boss Tamil 4 Promo: பிக் பாஸ் நிகழ்ச்சி வார இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் என்ன என்கிறீர்களா? வார இறுதி என்றாலே யார் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை தொற்றிக் கொள்ளும். அந்த வகையில் இன்றைய ப்ரோமோக்களும் வெளியாகியுள்ளன.
பெரம்பலூரில் கிடைத்தது டைனோசர் முட்டைகளா? உண்மை இது தான்
போட்டியாளர்களுக்கு இன்று மிக வித்யாசமான டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் அவர்களாவே பேசி 1 முதல் 16 வரை தங்களை வரிசைப்படுத்திக்கொள்ள வேண்டும் என பிக் பாஸ் சொல்லியிருக்கிறார். அதில் முதல் இடத்தில் இருப்பவர் வெற்றியாளராக ஆக வாய்ப்பு இருபவராக இருக்க வேண்டும் எனவும், 16-ம் இடத்தில் இருப்பவர் இந்த வாரம் வெளியேற்றப்பட உள்ளவராக இருக்க வேண்டும், எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பப்ஜி விளையாட 7.5 லட்சம் திருடிய சென்னை சிறுவன்
இந்த டாஸ்கில் அனைவரும் சுரேஷ் சக்ரவர்த்தியை 16-வது இடத்துக்கும், ரம்யா பாண்டியனை முதல் இடத்துக்கும் தேர்வு செய்கிறார்கள். இதன் மூலம், இந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
இரண்டாவது ப்ரோமோவில் அனைவரும் நிறைய கோபப்படுவதாக பாலா பெயரை கூறுகிறார்கள். இதில் அறந்தாங்கி நிஷா முதலில் பாலா பெயரை குறிப்பிட, அதன் பின் வேல்முருகன், சோம் சேகர் உள்ளிட்டவர்களும் அதை வழிமொழிகிறார்கள்.'பாலா ரொம்ப கோபப்படுறான்' என அர்ச்சனா கூற, அப்போது எழுந்து நின்ற பாலாஜி 'கோபப்படாமல் இருக்க முடியாது. கோபப்படுவது மைனஸ் கிடையாது' என்கிறார்.
மூன்றாவது ப்ரோமோவில், போட்டியாளர்களை வரிசைப்படுத்துகிறார் பாலாஜி. “அவங்க ஒருதலைப்பட்சமா இருக்காங்கன்னு தோணுது. என் கிட்ட உன் கோபம் உன்ன தூக்கி சப்பிட்டுடும்ன்னு சொன்ன அர்ச்சனா தான், ரியோ கிட்ட உன் கோபத்துக்கு மாஸ்க் போட்டுக்கோடான்னு சொன்னாங்க. ஒருத்தருக்கு கோபம் சரி, இன்னொருத்தருக்கு அது தப்புன்னு எப்படி சொல்ல முடியும்” என காரணத்தையும் கூறுகிறார்.
என்ன நடந்தது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”