Bigg Boss Tamil: தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு மீண்டும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்த பிக் பாஸ் நிகழ்ச்சி, மீண்டும் தொடங்கியிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பதினாறு போட்டியாளர்களை அறிமுகப்படுத்தினார் கமல். சீரியல், சினிமா நடிகை நடிகர்கள், மாடல்கள், பாடகர் என பதினாறு பேர் இதில் அடங்குவர்.
’மாஸ்டர்’ டீசர் எப்போது? வைரலாகும் தயாரிப்பாளர் ட்வீட்!
இந்நிலையில் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது. அதில், ”ஃபைவ், சிக்ஸ், செவன்” என தான் வாங்கிய ஹார்ட் பிரேக்குகளை எண்ணுகிறார் ஷிவானி. அவருக்கு பாலாவும், சோம் சேகரும் ஆறுதல் சொல்கிறார்கள். ”இது நல்ல விஷயம், நீங்க நீங்களா இருங்க” என்கிறார் பாலா. ”உங்களுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள், ஜாலியா இருங்க ஷிவானி” என்கிறார் சோம்.
’நான் உயிரோட தான் இருக்கேன்’: ஒரே மாதிரி பெயரால் நடிகைக்கு வந்த பிரச்னை
”ஆக்சுவலி நான் எந்த கேம் ப்ளானோடவும் இங்க வரல. எனக்கு என்ன தோணுதோ அதைதான் செய்றேன்” என்கிறார் ஷிவானி. ”நீங்க டெய்லி 4 மணிக்கு இன்ஸ்டாகிராம்ல ஒரு வீடியோ போடுறீங்கள்ல? அத பாக்குறதுக்குன்னு ஒரு ஃபேன்ஸ் கூட்டம் இருக்காங்கள்ல? என்ன ஆகணும்ங்கறதுக்காக அத போடுறீங்க” என ஷிவானியிடம் கேட்கிறார் ஆரி.
அடுத்து வெளியான 2-வது ப்ரோமோவில், “இந்த ஹார்ட்ட நிஷா அக்காவுக்குக் கொடுக்க விரும்புறேன். ஏன்னா எங்க அம்மா, அக்கா மாதிரியே இருப்பாங்க. எங்க அம்மா பாக்குறதுக்கு ரொம்ப டார்க்கா இருப்பாங்க. நான் ஜுவல்ஸ் போட மாட்டேன். போட்டா என் கலர் இன்னும் டார்க்கா தெரியும்ன்னு சொல்வாங்க. ஸ்கூல், காலேஜ் பேரண்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங்ன்னு எதுனாலும் வர்றதுக்கு ரொம்ப யோசிப்பாங்க. ஸோ டார்க்குங்கறத இன்ஃபீரியரா இல்லாம, காமெடியா எல்லாருக்கும் மத்தியிலும் ஒரு ஸ்டாரா நிஷா அக்கா ஷைன் பண்றாங்க. எங்க அம்மாவும், நிஷா அக்காட்ட இருந்து கத்துக்கணும்ன்னு நினைக்கிறேன்” என அனிதா அழுகையை கட்டுப்படுத்தியவாறு கூறுகிறார். இதைக் கேட்கும் மற்றவர்களின் முகமும் வாடிப் போகிறது. அனிதாவை கட்டி தழுவிக் கொள்கிறார் நிஷா.
தற்போது வெளியாகியுள்ள 3-வது ப்ரோமோவில், அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோரிடையே கிச்சனில் சண்டை வெடித்திருக்கிறது. எச்சில் தெறிக்கிறது என்பது தான் அந்த சண்டையின் மூலப் பொருளாக தெரிகிறது. இது தொடர்பான வாக்குவாதம் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையே மிகவும் காரசாரமாக நடக்கிறது. அனிதா சம்பத் மிகவும் கோபமாக இது பற்றி பேசிக்கொண்டிருக்க நடிகை ரேகா இடையில் வந்து அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். ‘நான்லாம் நியூஸ் ரீடர் கிட்ட பேசவே மாட்டேன். ஏன்னா அவங்க பேசுனா எச்சில் தெறிக்கும்ன்னு நீங்க சொன்னது, ரொம்ப லோ கிரேடா இருந்தது” என்கிறார் அனிதா. அதற்கு சுரேஷ் சக்ரவர்த்தி தன் தரப்பு நியாயத்தைக் கூறுகிறார். குறும்படம் போட்டு காட்டுங்க என்ன அனிதா சம்பத் சொல்ல, அதற்கு சுரேஷ் சக்ரவர்த்தி 'குறும்படம் இல்லை நீளமான படம் கூட போட்டு காட்டுங்க என கோபமாக பேசிவிட்டு செல்கிறார்.
பிக் பாஸின் 2-வது நாளே போட்டியாளர்களுக்குள் சண்டை வெடித்து விட்டது. பிறகென்ன ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”