Bigg Boss Tamil 4: விஜய் டிவி-யில் தினமும் 9.30 மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதன் ப்ரோமோக்கள் தினமும் வெளியாகி நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும். அந்த வகையில் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்குப்பதிவு
பிக் பாஸ் 4 ஷோ-வில் நேற்று 'நாடா இல்லை காடா' என்ற டாஸ்க் வழங்கப்பட்டு இருந்தது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு டீமாக பிரிந்து அரச குடும்பம் மற்றும் அரக்கர்களாக பங்கேற்றனர். அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் வெளியில் வரும் போது அரக்கர்கள் சேர்ந்து, அவரை ஆசைய வைத்து அடிமையாக்கலாம்.
நேற்று அரசர்களாக இருந்தவர்கள் அரக்கர்களாவும், அரக்கர்களாக இருந்தவர்கள் அரசர்களாகவும் மாறி செயல்படும் டாஸ்க் இன்று கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று செய்த விஷயங்களுக்கு தற்போது அரக்கர்கள் பழிவாங்கி கொள்ளலாம். அதன் படி அரச உடையில் இருக்கும் ஆரி வெளியில் வந்து அரக்கர்கள் முன் நின்ற போது, அவர்கள் ஆரஞ்சு பழ தோலை ஆரி முகத்தின் அருகில் வைத்தார்கள். அதை தாங்க முடியாமல் அவர் அசைந்துவிட்டார். அதனால் கோபமான ஆரி அவர்களுடன் சண்டை போட்டார்.
15 நிமிடத்தில் டேஸ்டி சாம்பார்: சிம்பிளான செய்முறை
”பிளான் பண்ணி நீங்க பிஸிக்கலி டிஸ்டர்ப் பண்றீங்க. முன்னாடி மோதிட்டு இல்லனு சொல்றான் பாலாஜி. கண்ணுல ஆரஞ்சு பழம் வச்சா, எப்படி டா நீ விளையாடுவ" என கோபமாகிறார்.
அடுத்த ப்ரோமோவில், வழக்கம் போல டாஸ்க் நடந்து கொண்டிருக்கும் போது சனம் ஷெட்டி கருப்பு துணியால் கதவை மறைத்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ் சக்ரவர்த்தி தன் கையில் இருந்த கொம்பால் சனம் தலையில் தட்டினார். அதனால் கோபமான சனம் ஷெட்டி ’வாடா போடா’ என கத்த துவங்கினார்.
'என் நெற்றியில் அடிக்கிற.. ஒரு இன்ச் கீழ வந்திருந்தா கண்ணு போயிருக்கும். அந்த ஆளு கொடுப்பானா. என்ன நினைச்சிட்டு இருக்கான் அந்த ஆளு' என கத்தினார். பாலாஜி முருகதாஸ் அங்கு வந்து 'மூளை கெட்டு போச்சா என்ன?' என சுரேஷ் சக்ரவர்த்தியை பார்த்து கேட்க, அதற்கு அவர் 'மூளையே இல்லை' என பதில் அளித்தார். ஆக இன்று பிக் பாஸ் வீட்டில் சண்டை கியாரண்டி!
மூன்றாவது ப்ரோமோவில், கன்பெக்ஷன் ரூமில் கதறி அழுகிறார் சுரேஷ் சக்ரவர்த்தி. 'இதை தெரிந்தே செய்தீர்களா?' என பிக் பாஸ் கேட்ட கேள்விக்கு 'சத்தியமாக இல்லை என பதில் சொல்கிறார். 'சத்தியமாக இல்லை பிக் பாஸ். எந்த காரணத்தை கொண்டும் செய்யவில்லை. செய்வது என்றால் நேராக..' என சொல்லி அழ துவங்கிவிட்டார் சுரேஷ் சக்ரவர்த்தி. 'என்னை வெச்சி கார்னர் பண்ணி, நிறைய விஷயங்கள் என் காதிலேயே விழுந்தது. அதை எல்லாம் மீறி நான் நானாக தான் இருக்க பார்த்தேன். கொஞ்சம் mature ஆக பின்னாடி இருந்தேன். ஆனால் இன்று செய்தது ரொம்ப இம்மெச்சூர்' என கதறி அழுகிறார் சுரேஷ் சக்ரவர்த்தி.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”