Bigg boss Tamil : இன்றைய தினம் பிக் பாஸ் வீடு பற்றி எரிய போவது உறுதியாகிவிட்டது. காரணம், இன்று வெளியாகியுள்ள ப்ரோம்மக்களில் லாஸ்லியா, கவின், மதுமிதா கூட்டு சேர்ந்து அடித்துக் கொள்ளாத குறை தான்.
மேலும் படிக்க - வனிதா கோடு போட, மதுமிதா ரோடே போட்டுவிட்டார்! - நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிக்பாஸ் ரணகளம்
Bigg boss today promo 1: பிக் பாஸ் சீசன் 3 துவங்கிய முதல் வாரத்திலேயே நான்கு பெண் போட்டியாளர்களை காதலிப்பதாக கூறி சர்ச்சையை கிளப்பினார் கவின். இதனால் சாக்ஷி எலிமினேட் ஆகும் அளவிற்கு பிரச்னை பெரிதானது. அதோடு வந்த முதல் இரண்டு வாரங்களில் மகிழ்ச்சியாக சுற்றித்திரிந்த லாஸ்லியாவின் குணமும் இந்த விவகாரத்தால் மாற்றத்தை சந்தித்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் உஷாராக சுற்றித் திரிந்து வந்த லாஸ்லியாவும் இன்று பஞ்சாயத்தை கூட்டி விட்டார். ஏற்கனவே, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவர்கள் அனைவரும் லாஸ்லியா நடிக்கிறார். அவரின் உண்மையான முகம் வேற என்று சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு விட்டனர். இந்நிலையில், இன்று தனது முகத்தை காட்டிவிட்டார் லாஸ்லியா.
மதுமிதாவுக்கு, கவினுக்கும் ஏதோ வாய்க்கால் தகராறு நடக்க, அதில் மது வழக்கம் போல் ஓவர் கோபம் ஆகி கவினுக்கு வார்னிங் கொடுக்க, கவினுக்கு பிரச்சனை என்றவுடன் களத்தில் இறங்குகிறார் லாஸ்லியா. ”வா மா வா”
Bigg boss today promo 2:
அடுத்த ப்ரோமிவில் ஆண்கள் ,பெண் போட்டியாளர்களை அடிமையாக்குவதாக புதிய பூகம்பத்தை கிளப்பியுள்ளார் மதுமிதா. இது குறித்த விவாதத்தின் போது கவினின் செயல்பாடுகளை விமர்சிக்கிறார் மது. இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்துக்கொண்டிருக்கும் போது ஒருபக்கம் ஓரமாக அமர்ந்துக் கொண்டு காய்கறி வெட்டுகிறார் சேரன். மறுபக்கம் சிறப்பு விருந்தினர் வனிதா சமையல் செய்துக் கொண்டிருக்கிறார்.
Bigg boss today promo 3 :
பெண்களால் அதிகம் வெறுக்கப்படும் கவின் அழுவது தான் இன்றைய தினத்தின் 3 ஆவது ப்ரோமோ. மதுமிதா பேசிய கருத்திற்கு கவின் அழ தொடங்குகிறார். உடனே அவரின் கூட்டத்தார் அவரை சமாதானம் செய்கின்றனர். இவை எல்லாவற்றையும் ஜெயிலில் இருந்து பார்க்கிறார் கஸ்தூரி.
ஆமாம் அவருக்கு எதுக்கு ஜெயிலுக்கு போனார். மதுவுக்கும் கவினுக்கும் என்ன பிரச்சனை. இதுபோன்ற ரசிகர்களிடம் ஆயிரம் கேள்விக்கு இன்று இரவு 9.30 மணிக்கு பதில் தெரிந்து விடும்.