அது ஜக்கம்மா தான? அக்கா வனிதா கா நீங்களா? ஜோவிகா மீம்ஸ்

சக போட்டியாளர்களை சில நேரங்களில் ஒருமையில் கூட பேசிவிடுகிறார். என்னைப் பற்றி வேண்டும் என்றால் பேசு, என் குடும்பத்தை பற்றி பேசாதே என அண்மையில் ஜோவிகா சீறியிருந்தார்.

சக போட்டியாளர்களை சில நேரங்களில் ஒருமையில் கூட பேசிவிடுகிறார். என்னைப் பற்றி வேண்டும் என்றால் பேசு, என் குடும்பத்தை பற்றி பேசாதே என அண்மையில் ஜோவிகா சீறியிருந்தார்.

author-image
WebDesk
New Update
Jovika Biggboss

நடிகை வனிதா விஜயக்குமார் மகள் ஜோவிகா

Bigg Boss Tamil season 7 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக் பாஸ் 7 வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீசனில் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா களம் கண்டுள்ளார்.
இவரின் நடிவடிக்கைகள் தாய் வனிதா விஜயக்குமார் போல் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். கடந்த சீசனில் போட்டியாளராக இருந்த வனிதா, சக போட்டியாளர்களை கம்பீரமாக பிரித்து எடுத்தார்.

Advertisment

இவரைப் போல் மகள் ஜோவிகாவும் போல்ட் ஆக பேசுகிறார். சக போட்டியாளர்களை சில நேரங்களில் ஒருமையில் கூட பேசிவிடுகிறார். என்னைப் பற்றி வேண்டும் என்றால் பேசு, என் குடும்பத்தை பற்றி பேசாதே என அண்மையில் இவர் சீறியிருந்தார்.
முன்னதாக வனிதா விஜயக்குமாரும் இவ்வாறு பேசும் இயல்பு கொண்டனர். இந்த நிலையில் இருவரையும் அருந்ததீ பட நாயகி அனுஷ்கா உடன் இணைத்து மீம்ஸ்கள், சிறு வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

“இவர்தான் ஜோவிகா தந்தை, எந்த சந்தேகமும் இல்லை”: வனிதா விஜயகுமார்

சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் அருந்ததீ படத்தில் அனுஷ்கா வரும் காட்சியில், இது ஜக்கம்மா தானே ஜக்கம்மா தானே ஜக்கம்மாவேதான் என மனோரமா சொல்லும் காட்சிகள் வரும்.
இந்தக் காட்சிகளை ஜோவிகா, வனிதா உடன் இணைத்து, அக்கா வனிதா கா நீங்களா என மீம்ஸ்கள், சிறு வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

Advertisment
Advertisements

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜோவிகாவின் தந்தை குறித்து பேச்சுகள் அடிபட்டது.
அப்போது தனது முன்னாள் கணவர் ஆகாஷ்தான் ஜோவிகாவின் தந்தை என வனிதா விஜயக்குமார் கூறியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Vanitha Vijayakumar Bigg Boss Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: