/tamil-ie/media/media_files/uploads/2018/06/Bigg-Boss-2-Tamil.jpg)
Bigg Boss 2 LIVE Updates: Kamal Haasan
Bigg Boss Tamil 2: பிக் பாஸ் 2... பிக் பாஸ் 2... பிக் பாஸ் 2... எங்குத் திரும்பினாலும், எங்கே பார்த்தாலும் தமிழகத்தில் பல இடங்களில் நம் முன்னே தோன்றுவது பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் போஸ்டர் தான். உலகெங்கிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு தமிழ் மொழியிலும் தொடங்கப்பட்டது.
Bigg Boss Tamil 2: Kamal Haasan - பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் ஹாசன்பிக் பாஸ் முதல் சீசனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். தமிழக மக்களுக்கு மிகவும் புதிதாக பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபலமடையுமா? மக்கள் இதனை ஏற்பார்களா? என்ற சந்தேகங்களுடனேயே இது தொடங்கப்பட்டது. பின் வரும் நாட்களில், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதற்கு அடிமையாகிப் போயிருந்தனர். இத்தகை புகழுக்கு விஜய் டிவி தவிர மற்றொரு சொந்தக்காரர் நடிகர் கமல் ஹாசன்.
(Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் சீசன் 2 வீடு எப்படி இருக்கும் தெரியுமா?)
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை பொதுமக்கள் பலரும் கமல் ஹாசன் என்ற ஒரே காரணத்திற்காக பார்த்து வந்தனர். குறிப்பாக ஒவ்வொரு வார இறுதியிலும் ஆண்டவர் தரிசனம் உறுதி. நமக்குத் தான் அது தரிசனமாக இருந்ததே தவிர போட்டியாளர்களுக்கு பேய் ஓட்டும் பூசாரி போல் இருந்தார் கமல். பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் பாகத்தில், காயத்ரி, ஸ்னேகன், சக்தி, ரைசா, ஓவியா, ஆரவ், ஜூலி, கனேஷ் வெங்கட்ராமன், நமீதா, வையாபுரி, பரணி எனப் பலரும் கலந்துகொண்டனர். இதில் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கி, வெற்றி பட்டத்தை தட்டிச் சென்றார் ஆரவ். இது போலவே இந்த ஆண்டின் மற்றொரு அத்தியாயம் இன்று முதல் தொடங்குகிறது.
(Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 வீட்டிற்குள் கமல் ஹாசன் : வைரலாகும் ஃபோட்டோஸ்)
பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியையும் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இதற்கான அனைத்து ஷூட்டிங் பணிகளும் ஆயத்தமாகி நேற்று நடைபெற்றது. பிரம்மாண்டமாகத் தயாராகி இருக்கும் பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று ஒளிபரப்பாகிறது. நாளை முதல் தொடர்ச்சியாக 100 நாட்களுக்கு உங்களை டிவி முன்னே கட்டிப்போட்டு வைக்க வருகிறது.
Bigg Boss 2 LIVE Updates: பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி குறித்த லைவ் அப்டேட்ஸ்
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி தொடக்க திருவிழாவின் பிரம்மாண்டத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் உங்களுக்குப் பிரத்தியேகமாக வழங்குகிறது.
Bigg Boss Tamil 2: Kamal Haasan - பிக் பாஸ் 2 தமிழ் வீட்டிற்குள் கமல் ஹாசன்காத்திருப்பு நிறைவேற்றம். இன்று முதல் தினமும்....
11.05pm : ‘ஓவியா’. அந்த ஒற்றைச் சொல்லுக்கு அதிரும் அரங்கம். பலரின் தாரக மந்திரமாக மாறிய நங்கையின் பெயர். பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி வீட்டிற்குள் அதிரடியாக இறங்கியுள்ளார் நடிகை ஓவியா.
Bigg Boss Tamil 2: Oviya - பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் ஓவியா11.00pm: பிக் பாஸ் 2 நிகழ்ச்சி போட்டியில் 16 போட்டியாளர்கள் கலந்துக்கொள்வார்கள் என விஜய் டிவி குழு அறிவித்திருந்தது. ஆனால் இவை அனைத்தையும் மிஞ்சும் வகையில் பெரிய சர்பிரைஸ் கொடுத்துள்ளனர் பிக் பாஸ் 2 குழு. 17வது நபராக ஓவியாவை இறக்க முடிவெடுத்துள்ளனர்.
#பிக்பாஸ் வீட்டிற்க்குள் மீண்டும் #ஓவியா! ???????? #VivoBiggBoss - இன்று இரவு 7 மணிக்கு உங்கள் விஜயில்.. @ikamalhaasan@OviyaaSweetz#BiggBossTamil@Vivo_India#TheGrandOpeningpic.twitter.com/tY9hqz0xQr
— Vijay Television (@vijaytelevision) 17 June 2018
10.50pm: கடைசி மற்றும் 16வது போட்டியாளராக பிக் பாஸ் 2 வீட்டிற்குள் நுழைந்தார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்தில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் அதிக புகழை சம்பாதிக்கும் நோக்கில் இவர் தற்போது கலந்துள்ளார்.
பதினாறாவது போட்டியாளராக #பிக்பாஸ் வீட்டிற்க்குள் வரும் #ஐஸ்வர்யா_தத்தா#AishwaryaDutta#BiggBossTamil#VivoBiggBoss@Vivo_India#BBTamilContestants#TuneInNowpic.twitter.com/5Vm6zEkdId
— Vijay Television (@vijaytelevision) 17 June 2018
10.34pm : ‘கேல் ஃப்ரெண்டு வேணும்’ என்று கேட்டுக்கொண்டே ஆட்டத்தை தொடங்கிய இவர், அப்படியே ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற பாடலில் முடித்தார். யார் இவர்? வில்லன் ரோலில் நடித்த ரியாஸ் கான் மற்றும் சின்னதிரை நடிகை உமா ரியாஸ் தம்பதியின் மகன் சாரிக் ஹாசன். ஒரு வேளை இந்த சீசனின் ஆரவ்-க கூட இவர் இருக்கலாம். பொருமையாக இருந்து பார்ப்போம்.
#பிக்பாஸ் வீட்டின் பதினைந்தாவது போட்டியாளர்! #சாரிக்_ஹாசன்#ShariqHassan#BiggBossTamil#VivoBiggBoss@Vivo_India#BBTamilContestants#TuneInNowpic.twitter.com/5cdnerY11D
— Vijay Television (@vijaytelevision) 17 June 2018
10.16pm : கணவன் பாலாஜி 12வது போட்டியாளராக கலந்துக்கொள்ள, மனைவி நித்யா 14வது போட்டியாளராக நுழைந்துள்ளார். சமீபத்தில் இவர் தனது கணவர் பாலாஜி மீது புகார் கொடுத்திருந்தார். இதற்கு பிறகு இருவரும் தனியாகவே வாழ்ந்து வந்தவர். இந்நிலையில் இவரும் கணவருடன் இணைந்து பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார். வீடு என்ன ஆகப் போகுதோ?
#பிக்பாஸ் வீட்டிற்க்குள் வரும் பதினான்காவது போட்டியாளர்! #நித்யா#Nithya#BiggBossTamil#VivoBiggBoss@Vivo_India#BBTamilContestants#TuneInNowpic.twitter.com/VuXrAOq13u
— Vijay Television (@vijaytelevision) 17 June 2018
10.06pm : நடிகை, ஆர்.ஜே மற்றும் வி.ஜே வாக இருந்த மமதா சாரி 13வது போட்டியாளராக பிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்குள் சென்றார்.
பதிமூன்றாவது போட்டியாளராக #பிக்பாஸ் வீட்டிற்க்குள் வரும் #மமதி_சாரி#MamathiChari#BiggBossTamil#VivoBiggBoss@Vivo_India#BBTamilContestants#TuneInNowpic.twitter.com/28dmhqOBga
— Vijay Television (@vijaytelevision) 17 June 2018
9.47pm: பிரபல சின்னதிரை மற்றும் ஒரு சில படங்களில் நடித்த நடிகர் தாடி பாலாஜி. இவர் 12ம் போட்டியாளராக அறிமுகமாகியுள்ளார். சமீபத்தில் இவரின் மனைவி இவர் மீது அளித்த புகாரினால் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இவர் மீது உள்ள அவப்பெயரை போக்குமா?
அடுத்ததாக #பிக்பாஸ் வீட்டிற்க்குள் வரும் போட்டியாளர்! #பாலாஜி#Bhalajie#BiggBossTamil#VivoBiggBoss@Vivo_India#BBTamilContestants#TuneInNowpic.twitter.com/aQV4Clzkrt
— Vijay Television (@vijaytelevision) 17 June 2018
9.35pm : பிரபலமான கவர்ச்சி ஹீரோயின் மும்தாஜ், பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியின் 11வது போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
#பிக்பாஸ் வீட்டிற்க்குள் நுழையும் பதினோறாவது போட்டியாளர்! #மும்தாஜ்#Mumtaz#BiggBossTamil#VivoBiggBoss@Vivo_India#BBTamilContestants#TuneInNowpic.twitter.com/H5zHs57ZGQ
— Vijay Television (@vijaytelevision) 17 June 2018
9.24pm: மெட்ராஸ் மற்றும் கபாலி ஆகிய படங்களின் மூலம் பலரின் கைத்தட்டல்களை வாங்கிய நடிகை ரித்விகா, பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியின் 10வது போட்டியாளராக அறிமுகம்.
#பிக்பாஸ் வீட்டின் பத்தாவது போட்டியாளர்! #ரித்விகா#Riythvika#BiggBossTamil#VivoBiggBoss@Vivo_India#BBTamilContestants#TuneInNowpic.twitter.com/UrxqWZuTd1
— Vijay Television (@vijaytelevision) 17 June 2018
9.13pm : பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில் பட்டையை கிளப்ப மண்மனம் மாறாமல் உள்ளே நுழைந்திருக்கிறார் நடிகர் சென்ராயன். 9வது போட்டியாளராக அறிமுகம்
#பிக்பாஸ் வீட்டின் அடுத்த போட்டியாளர்! #சென்ராயன்#Senrayan#BiggBossTamil#VivoBiggBoss@Vivo_India#BBTamilContestants#TuneInNowpic.twitter.com/lTSwL31zG2
— Vijay Television (@vijaytelevision) 17 June 2018
8.55pm : டுவிஸ்டு டுவிஸ்டு... டுவிஸ்டோ டுவிஸ்டு. பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில் 8வது போட்டியாளராக அறிமுகமானார் பாடகி ரம்யா. கலை உலகின் ஜாம்பவான்கள் இருவர் வாழ்ந்த குடும்பத்தில் இருந்து வந்தவர் இவர். பிக் பாஸ் பாட்டு கச்சேரி ஸ்டார்ட்.
எட்டாவதாக #பிக்பாஸ் வீட்டிற்க்குள் வரும் போட்டியாளர்! #ரம்யா#RamyaNSK#BiggBossTamil#VivoBiggBoss@Vivo_India#BBTamilContestants#TuneInNowpic.twitter.com/SibVk1kMCL
— Vijay Television (@vijaytelevision) 17 June 2018
8. 47pm : இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் 7வது போட்டியாளராக களத்தில் குத்தித்தார் அனந்த் வைத்தியநாதன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பாடகர்கள் பயிற்சியளிக்கும் ஆசிரியராக இருந்தவர் இவர். வாய்ஸ் எக்ஸ்பெர்டாக இருக்கும் இவர், பிக் பாஸ் எக்ஸ்பெர்டாக மாறுவாரா?
#பிக்பாஸ் வீட்டின் ஏழாவது போட்டியாளர்! #அனந்த்_வைத்தியநாதன்#AnanthVaidyanathan#BiggBossTamil#VivoBiggBoss@Vivo_India#BBTamilContestants#TuneInNowpic.twitter.com/TKIMGU4RsL
— Vijay Television (@vijaytelevision) 17 June 2018
8.28pm : பிக் பாஸ் 2 போட்டிக்களத்தில் 6வதாக இறங்கினார் கண்ணழகி ஜனனி. தமிழ் திரைப்படங்களில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த ஜனனி, தனது கண்ணழகாலும், நடிப்பாலும் தனக்கென்று ஒரு நீங்கா இடத்தை பிடித்தவர். ‘ஒரே ஒரு ஊரில், ஒரே ஒரு ராஜா’ என்ற பாகுபலி பாடல் ஆட்டத்துடன் முதல் நாளை துவக்கினார் ஜனனி.
ஆறாவது போட்டியாளராக #பிக்பாஸ் வீட்டிற்க்குள் நுழையும் #ஜனனி#Janani#BiggBossTamil#VivoBiggBoss@Vivo_India#BBTamilContestants#TuneInNowpic.twitter.com/TkJFDpaJZ1
— Vijay Television (@vijaytelevision) 17 June 2018
8.19pm : ஐந்தாவது போட்டியாளராக ரேடியோ ஜாக்கி வைஷ்ணவி அறிமுகம். 29 வயதான இவர் பிரபல ரேடியோ சேனலில் பணி புரிகிறார்.
#பிக்பாஸ் வீட்டின் ஐந்தாவது போட்டியாளர்! #வைஷ்ணவி#Vaishnavi#BiggBossTamil#VivoBiggBoss@Vivo_India#BBTamilContestants#TuneInNowpic.twitter.com/UqrWA0oB25
— Vijay Television (@vijaytelevision) 17 June 2018
8.16pm : நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே, வில்லன் நடிகர் பொன்னம்பலம் தனது குடும்பத்தை மிகவும் அதிகமாக மிஸ் செய்கிறார். “என் வீட்டில் என்னை ரொம்ப மிஸ் பன்னுவாங்க, பாவம். ஒரு குடும்ப தலைவன் இல்லாம மனைவியும், அப்பா வீட்டில் இல்லாம என் மகனும் என்னை ரொம்ப மிஸ் பன்னுவாங்க.’ என முதல் நாளே வருத்தப்பட்டார்.
8.00pm : பிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்கு 4வது போட்டியாளராக டேனியல் ஆனீ போப் அறிமுகம். மேடைக்கு வந்த உடனே, அந்த பிரபல டயலாக் பேசி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். இன்னும் புரியலையா? “ஃப்ரெண்டு...லவ் மேட்டரு..ஃபீல் ஆயிடாப்ல.. ஹாஃப் சாப்டா கூல் ஆயிடுவாப்ல" டயலாக் தான் அது.
#பிக்பாஸ் வீட்டிற்க்குள் நுழையும் நான்காவது போட்டியாளர்! #டேனியல்#DanielAnniePope#BiggBossTamil#VivoBiggBoss@Vivo_India#BBTamilContestants#TuneInNowpic.twitter.com/1YILD4m4qQ
— Vijay Television (@vijaytelevision) 17 June 2018
7.48pm: மாபெரும் நிகழ்ச்சியின் மூன்றாவது போட்டியாளராக மஹத் அறிமுகம். மங்காத்தா மற்றும் ஜில்லா போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் இவர். பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில் ஜில்லா படத்தின் ‘சிவனும் சக்தியும்’ பாடலுக்கு அசத்தலாக ஆடி மக்களிடையே கைத்தட்டுகளை பெற்றார்.
#பிக்பாஸ் வீட்டின் அடுத்த போட்டியாளர்! #மகத்#Mahat#BiggBossTamil#VivoBiggBoss@Vivo_India#BBTamilContestants#TuneInNowpic.twitter.com/6FHXZoSBN0
— Vijay Television (@vijaytelevision) 17 June 2018
7.36pm : பிக் பாஸ் 2 தமிழ் இரண்டாவது போட்டியாளராக பொன்னம்பலம் அறிமுகம். ‘அடி உதவுரா மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டாங்க’ என்று வில்லன் நடிகர் பொன்னம்பலத்தை அறிமுகப்படுத்தினார் கமல் ஹாசன்.
இரண்டாவதாக #பிக்பாஸ் வீட்டிற்க்குள் வரும் போட்டியாளர்! #பொன்னம்பலம்#Ponnambalam#BiggBossTamil#VivoBiggBoss@Vivo_India#BBTamilContestants#TuneInNowpic.twitter.com/iJg9FaNrD5
— Vijay Television (@vijaytelevision) 17 June 2018
7.18pm: முதல் போட்டியாளர் யாஷிகா ஆனந்த் அறிமுகம். சமீபத்தில் வந்த இருட்டு அறை முரட்டு குத்து படத்தில் நடித்தவர் இவர். கவர்ச்சி நடிகையாக திரையுலகில் வலம் வந்தவர். ‘நான் தான் சொப்பண சுந்தரி’ பாடலுக்கு கவர்ச்சி ஆட்டத்துடன் அறிமுகமானார்.
#பிக்பாஸ் வீட்டின் முதல் போட்டியாளர்! #யாசிகா_ஆனந்த்! #YashikaAnand#BiggBossTamil#VivoBiggBoss@Vivo_India#BBTamilContestants#TuneInNowpic.twitter.com/S5XF9GAjZi
— Vijay Television (@vijaytelevision) 17 June 2018
பிக் பாஸ் 2 தமிழ் வீட்டை சுற்றிப்பார்த்தார் முதல் போட்டியாளர் யாஷிகா ஆனந்த்.
Bigg Boss Tamil 2: யாஷிகா ஆனந்த்7.14pm : பிக் பாஸ் 2 தமிழ் வீட்டிற்குள் கமல் ஹாசன். மக்களுக்கு வீட்டை சுற்றிக் காட்டினார் கமல். பின்பு கன்ஃபெஷன் ரூமில் பிக் பாஸ்-டன் பேசினார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/06/Tamil-Bigg-Boss-Season-2.jpg)
7.07pm : பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி மேடைக்கு வந்தார் கமல் ஹாசன். ‘பிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறேன். இம்முறை மிகவும் பிரம்மாண்டமாய். என்னுடைய பலம் எல்லாம் நீங்கள் தான்’ : கமல்.
Bigg Boss Tamil 2: பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மேடைக்கு வந்தார் கமல்7.04pm : ‘தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது கிடைத்த ஆதரவு இப்போது கிடைப்பதில் மகிழ்ச்சி. செய்ய நல்ல காரியம் நிறைய உள்ளது. அதற்கு இந்த மேடையை பயன்படுத்திக்கொள்கிறேன். சுயநலம் என்று பலர் கூறுவார்கள். பொதுநலம் என்று நான் கூறுகிறேன்.’ என்ற அரசியல் பேச்சுடன் தொடங்கியது பிக் பாஸ் 2 தமிழ்.
Now watching #BiggBoss2@hotstartweets@vijaytelevisionpic.twitter.com/FSSMh4oHlz
— Rajasekar (@sekartweets) 17 June 2018
7.00pm : மிகவும் பிரம்மாண்டமாய், அனைவரின் காத்திருப்பையும் உடைத்தெறிய தொடங்கியது ‘பிக் பாஸ் 2 தமிழ்’.
இதோ ஆரம்பமாகிவிட்டது #பிக்பாஸ்! ???????? @ikamalhaasan#BiggBossTamil#VivoBiggBoss@VivoIndia#TuneInNowpic.twitter.com/tIuQ7UsuRd
— Vijay Television (@vijaytelevision) 17 June 2018
6.50pm : பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இதற்காக தொலைக்காட்சியில் கவுண்டவுன் தொடங்கியது.
Bigg Boss Tamil 2: Kamal Haasan - பிக் பாஸ் இன்னும் சற்று நேரத்தில்6.40pm : மிகப் பெரிய வரவேற்புடன், பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.
இம்முறை இன்னும் பிரம்மாண்டமாக! ???????? #பிக்பாஸ் இன்னும் சில நிமிடங்களில்.. @ikamalhaasan#BiggBossTamil#VivoBiggBoss@Vivo_India#TheGrandOpeningpic.twitter.com/EhHErpRw8c
— Vijay Television (@vijaytelevision) 17 June 2018
6.30pm : பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் 100 நாட்கள் இருக்கும் வீடு எப்படி இருக்கும் என்ற தகவலும் புகைப்படங்களும் முன்பே வெளியாகி இருந்தது. உங்கள் பார்வைக்காக...
All set for #BiggBossTamil2#BiggBossTamilpic.twitter.com/4wTwC9BOry
— BiggBossTamil Season 2 (@BiggBossTamil2) 14 June 2018
6.17pm : கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியின் பிரமோ ஒன்று இன்று டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதற்கு மக்கள் வெகுவாக வரவேற்பு அளித்துள்ளனர்.
"என்னுடைய பலமெல்லாம் இங்கிருந்து தான் வருகிறது! எனக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியது நீங்கள் தான்! - உலகநாயகன்" #பிக்பாஸ் - இன்று இரவு 7 மணிக்கு உங்கள் விஜயில்.. @ikamalhaasan#BiggBossTamil#VivoBiggBoss@Vivo_Indiapic.twitter.com/p7XxQt07aZ
— Vijay Television (@vijaytelevision) 17 June 2018
6.00pm : பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் நம் அனைவரையும் அன்பால் கட்டிப்போட்டவர் ஓவியா. இவரை பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சிக்கும் 17வது நபராக உள்ளே இறக்குகிறார்கள் விஜய் டிவி. இதனை உறுதி செய்யும் வகையில் பிரமோ வீடியோ வெளியாகியுள்ளது.
#பிக்பாஸ் வீட்டிற்க்குள் மீண்டும் #ஓவியா! ???????? #VivoBiggBoss - இன்று இரவு 7 மணிக்கு உங்கள் விஜயில்.. @ikamalhaasan@OviyaaSweetz#BiggBossTamil@Vivo_India#TheGrandOpeningpic.twitter.com/tY9hqz0xQr
— Vijay Television (@vijaytelevision) 17 June 2018
5.45pm: பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த ஆண்டு 16 போட்டியாளர்கள் பங்கேற்க போகிறார்கள். அவர்கள் யார் என்ற விவரம் இன்று அறிவிக்கப்படும். கமல் ஹாசன் பிரமோவில் கூறியது போல வில்லங்கள் பிடித்தவர்களும் நல்லவர்களும் வீட்டிற்குள் நுழையப்போவது உறுதி.
Big boss 2 tamil : பிக் பாஸ் 2 தமிழ் போட்டியாளர்கள் யார்?5.30 pm : பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி இன்று மாலை 7 மணிக்கு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு தொடங்குகிறது.
5.00pm : பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கும் பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது.
‘16 பிரபலங்கள், 64 கேமராக்கள், 100 நாட்கள், 1 வீட்டில்’. கணக்கில் வீக்காக இருப்பவர்கள் வாய்பாட்டைக் கூட மறக்கலாம். ஆனால் பிக் பாஸ் 2 ஆண்டவர் கணக்கை மறக்க முடியாது. அந்த அளவிற்கு பலமாக தொடங்குகிறது இரண்டாவது அத்யாயம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us