/tamil-ie/media/media_files/uploads/2020/10/cats-10.jpg)
Bigg Boss Tamil Season 3 contestant Monhan Vaidhya Joined BJP : பிக்பாஸ் தமிழ் 3-வது சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்பட்டவர் மோகன் வைத்யா. கர்நாடக இசைக் கலைஞரான இவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு திரை பிரபலங்கள் பாஜகவில் இணைவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க : Tamil News Today Live: திருமாவளவனை கண்டித்து போராட்டம் – குஷ்பு கைது
நடிகையும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் பொறுப்பும் வகித்து வந்த குஷ்பு இந்த கட்சியில் இணைந்தார். ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நமீதா, நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் ஆகியோர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். தற்போது அந்த வரிசையில் ரமேஷ் வைத்யா பாஜகவில் இணைந்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்த அவர் வருகின்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக மகத்தான வெற்றியை பெறும் என்று கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பதையும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.