/tamil-ie/media/media_files/uploads/2020/08/a15-1.jpg)
Bigg Boss Season 4 Kamal Haasan
'பிக் பாஸ் 4' நிகழ்ச்சி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை விஜய் டிவி இன்று வெளியிட்டுள்ளது.
2017 முதல் ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலங்களில் தவறாமல் ஒலித்த பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் திட்டமிடப்படாமல் இருந்தது. எனினும், ஹிந்தி, தெலுங்கில் இந்த ஆண்டிற்கான பிக் பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு 'பிக் பாஸ் 4' தொடர்பான ப்ரமோவுக்கான படப்பிடிப்பை கமல் தொடங்கிவிட்டார் என்று தகவல் வெளியானது.
ஜி.வியின் சூப்பர்வுமென் அன்வி… வைரலாகும் ”ஸோ ஸ்வீட்” புகைப்படங்கள்!
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 27) இரவு 8 மணிக்கு முக்கிய அறிவிப்பு என்ற ஒரு விளம்பரத்தை விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. பலரும் இது பிக் பாஸ் தொடர்பான அறிவிப்பு தான் என காத்திருந்தனர்.
அதன்படி, தற்போது 'பிக் பாஸ் 4' நிகழ்ச்சிக்கான டீஸரை கமல் தனது ட்விட்டர் வீடியோவில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
#BiggBossTamil Season 4 | விரைவில்.. #BBTamilSeason4#KamalHassan#பிக்பாஸ்#VijayTelevisionpic.twitter.com/zEnGw1W5LP
— Vijay Television (@vijaytelevision) August 27, 2020
கமல் புதிய கெட்டப்பில் இந்த ப்ரமோவில் நடித்துக் கொடுத்துள்ளார். விரைவில் ட்ரெய்லர் ஒன்று வெளியிடப்படவுள்ளது. அதில்தான் நிகழ்ச்சி என்றிலிருந்து ஒளிபரப்பு குறித்த தகவல் இருக்கும் எனத் தெரிகிறது.
இந்த ஆண்டு பிக் பாஸ் போட்டியாளர்கள் யாரெல்லாம் இருப்பார்கள் என்பது குறித்து சமூக வலைதளத்தில் ஒரு பெரிய விவாதமே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.