Vanitha Vijayakumar: சினிமாவில் அறிமுகமாகி, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான வனிதா விஜயகுமார் விரைவில் 3-வது திருமணம் செய்யவிருக்கிறார்.
க்யூட் மஞ்சிமா, அழகு நித்யா மேனன்: முழு புகைப்படத் தொகுப்பு
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். 1995-ம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த 'சந்திரலேகா' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் பெரிதாக வரவேற்பு பெறாத காரணத்தினால், 2000-ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை 19 வயதில் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்குப் போட்டார். இவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் இருக்கிறார்கள். பின்னர் ஆகாஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2007-ல் விவாகரத்து பெற்றார். பின்னர், ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை 2007-ல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இதன் மூலம் ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார். ஆனால் இந்தத் திருமணமும் 2010-ல் முடிவுக்கு வந்தது.
,
தற்போது இரண்டு மகள்களுடன் வனிதா விஜயகுமார் வாழ்ந்து வருகிறார். அப்பா விஜயகுமாருடன் ஏற்பட்ட மோதல் உள்ளிட்டவற்றின் மூலம் ஊடகங்களில் இவருடைய செய்தி அவ்வப்போது வந்துகொண்டே இருக்கும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் வனிதா விஜயகுமார் பிரபலமானார். அங்கும் சில சர்ச்சைகளில் சிக்கினார். இறுதியாக 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் தன் மீதான அனைத்துச் சர்ச்சைகளையும் களைந்தார். தற்போது யூடியூப் பக்கம் ஒன்றைத் தொடங்கி, தனது சமையல் வீடியோக்களைப் பதிவேற்றி வருகிறார்.
சென்னைக்குள் விமானம் வழியாக நுழைய திட்டமா? இ-பாஸ், தனிமைப்படுத்தல் இனி கட்டாயம்
இதனிடையே வனிதா 3-வது திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகின. இது உண்மையா அல்லது வதந்தியா என ரசிகர்கள் குழம்பிப் போனார்கள். இந்நிலையில் தனது மறுமணத்தை முன்னணி ஊடகத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறார் வனிதா. ஜூன் 27-ம் தேதி மாலை 4 மணியளவில் பீட்டர் பால் என்பவருடன் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது. "நான் கல்யாணம் பண்ணப்போறவர் ஒரு ஃபிலிம்மேக்கர், டெக்னீஷயன். இப்ப பெரிய புராஜெக்ட்ல வொர்க் பண்ணிட்டு இருக்கார். அந்த புராஜெக்ட்ல நானும் இருக்கேன். அப்படித்தான் அவரைத் தெரியும். லாக்டெளன் நேரத்துல அவர்தான் சேனல் ஆரம்பிக்க நிறைய ஹெல்ப் பண்ணார். விஷுவல் எஃபெக்ட்ஸ் டைரக்டர் அவர். பாலிவுட், ஹாலிவுட்னு வொர்க் பண்ணியிருக்கார். இங்கேயும் வொர்க் பண்ணிட்டு இருக்கார்" என தனது வருங்கால கணவரைப் பற்றி தெரிவித்திருந்தார்.
கொரோனா அச்சுறுத்தலால் இந்தத் திருமணம் வீட்டிலேயே நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெறவுள்ளது. இந்தத் திருமணத்துக்கு வனிதாவின் மகள் ஜோவிகா தனது முழு சம்மதத்தையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”