Big boss 2019 tamil contestants: பிக் பாஸ் 3 தமிழில் இந்த முறை யார் எல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் எனும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரமாண்டமான நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். முதல் மற்றும் இரண்டாவது சீசனுக்கு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் பிக் பாஸ் மூன்றாவது சீசன் இன்று ( ஜூன் 23ம் தேதி) இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்குகிறார்.
மேலும் படிக்க - Bigg Boss Tamil Season 3 Live Updates : பிக்பாஸ் 3 சீசன் போட்டியாளர்கள் யார்? முழு லிஸ்ட் பார்க்கணுமா? லைவ் அப்டேட்ஸ் இதோ!
இந்த சீசனில் கலந்துகொள்ள வாய்ப்புள்ள நட்சத்திரங்கள் : நடிகை சாந்தினி, சாக்ஷி அகர்வால், சுதா சந்திரன், பிரியா ஆனந்த், கஸ்தூரி, சஞ்ஜனா சிங், ஆல்யா மானசா, ரஷிதா மகாலெட்சுமி, கோவை சரளா, நடிகர்கள் பிரேம்ஜி, டி.ராஜேந்தர். வீடியோ ஜாக்கி சித்து, ராதாரவி, பிரசன்னா, பவர்ஸ்டார் சீனிவாசன், யூடியூப் பிரபலம் ஹரி ஆர் பாஸ்கர், சேரன் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
big boss 2019 tamil : கமல்ஹாசன்
Bigg boss 3 contestant tamil: பிக் பாஸ் 3 தமிழ்
கடைசியாக கிடைத்த தகவலின்படி, வனிதா விஜயகுமார், காமெடி நடிகை மதுமிதா,ல நடிகர் மற்றும் இசைக்கலைஞர் மோகன் வைத்யா, நடிகைகள் பாத்திமா பாபு, அஜித் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ள அபிராமி வெங்கடாசலம், மலேசிய நடிகர் மற்றும் இசைக்கலைஞர் மியூஜென் ராவ், சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த கவின், பாடகர் மோகித் கவுர், இலங்கை மாடல் லோசில்யா, நடிகர் சரவணன், நடன இயக்குனர் சாண்டி, நடிகை ரேஸ்மா பசுபுலாட்டி , ஷெரீன் உள்ளிட்டோரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Bigg Boss 3 Tamil : பிக்பாஸ் தமிழ் சீசன் 3 : உங்களை 100 நாட்கள் மகிழ்விக்க போகும் பிரபலங்கள் இவர்கள்தான்...
Wild card entryன் மூலமும் சில பங்கேற்பாளர்கள் கடந்த 2 சீசன்களில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் முதல் சீசனில், 15 பங்கேற்பாளர்கள் நேரடியாகவும், 4 பேர் Wild card entryன் மூலமும் பங்கேற்றனர். இதில் நடிகர் ஆரவ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிக்பாஸ் இரண்டாவது சீசனில் 16 பங்கேற்பாளர்கள் நேரடியாகவும் ஒருவர் மட்டுமே Wild card entryன் மூலமும் பங்கேற்றார். அந்த சீசனில் நடிகை ரித்விகா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
தொடர்ந்து 100 நாட்கள் நடைபெற உள்ள பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களின் அறிமுகநிகழ்ச்சி, இன்று இரவு 8 மணி முதல் விஜய்டிவியில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.