/tamil-ie/media/media_files/uploads/2019/06/Thalapathy-63-firstlook-bigil-hbd-thalapathy.jpg)
Bigil Full Movie Download Tamilrockers, Bigil Tamil Movie, Bigil Tamil Movie Online Watch, பிகில், பிகில் ஃபுல் மூவி, தமிழ் ராக்கர்ஸ்
Bigil Song Leaked: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் சர்கார் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது ‘பிகில்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தெறி, மெர்சல் ஆகியப் படங்களுக்குப் பிறகு இயக்குநர் அட்லீ இயக்கும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ். எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. பெண்கள் கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி இயக்கப்படும் இந்தப் படத்தில் விஜய், அப்பா – மகன் என இரு வேடங்களில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
Bigil Audio Launch: விஜய் ரசிகர்களே அடுத்த கொண்டாட்டத்துக்கு ரெடியாகுங்க!
பிகில் படத்தில் விஜய்யுடன் இணைந்து விவேக், கதிர், நயன்தாரா, இந்துஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். இந்நிலையில் தற்போது ரஹ்மான் குரலில் இடம்பெற்றிருக்கும் ‘சிங்க பெண்ணே’ என்ற பாடல் இணையத்தில் லீக்காகி வருகிறது. பெண்கள் கால்பந்தாட்டத்தை அடிப்படையாக கொண்டு பிகில் உருவாவதும், அதற்கு ரஹ்மான் இசை என்பதாலும், அனைவரும் இது பிகில் திரைப்பட பாடல் எனக்கூறி பகிர்ந்து வருகிறார்கள். மறுபுறம் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.
@arrahman@archanakalpathi@Lyricist_Vivek@Atlee_dir very beautiful music with beautiful lyrics with My Chella Kutty @LosliyaArmy_ My Own Edits.....on #Singapenne#Bigil#BigilDiwalipic.twitter.com/SbQ9GFEWYG
— Arunvijay (@Arunvi127) 16 July 2019
அதே வேளையில், ’சிவகார்த்திகேயனின் 14-வது படம், விக்ரம் 58 படம், தலைவன் இருக்கின்றான்’ ஆகியப் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.