Advertisment

Singappenney: ரசிகர்களும் பெண்களும் பிரபலங்களும் கொண்டாடும் ‘சிங்கப் பெண்ணே’ பாடல்!

Singappenney Single: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஷாஷா திருப்பதி குரலில் அமைந்திருக்கும் இப்பாடலை ரசிகர்களும் பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Singappenny single reactions, thalapathy vijay, atlee, bigil

சிங்கப் பெண்ணே சிங்கிள்

Bigil - Singappenney: நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கி வரும் திரைப்படம் ‘பிகில்’. ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

Advertisment

மெர்சல், சர்கார், படத்தைத் தொடர்ந்து விஜய்யின்  இந்தப் படத்திற்கும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் விவேக் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்புப் பெற்றது.

Singappenney Single: நீண்ட காத்திருப்பை பூர்த்தி செய்த ‘சிங்கப் பெண்ணே’ பாடல்!

இதைத் தொடர்ந்து, மீண்டும் எப்போது பிகில் படத்தின் அப்டேட் வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த வேளையில், கடந்த வாரம் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘சிங்கப் பெண்ணே’ என்ற பாடல் ’லீக்காகி’ ரசிகர்களையும், படக்குழுவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதைத் தொடர்ந்து 23-ம் தேதி பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘சிங்கப் பெண்ணே’ பாடல் வெளியாகும் என நேரம் குறிப்பிடாமல் அறிவிக்கப்பட்டது.

இதனால் நேற்று காலை முதலே ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தயாரிப்பு தரப்பிலிருந்து நேரம் சொல்லப்படாமல் இருந்தது. பின்னர் நேற்றிரவு 10 மணிக்கு பாடல் வெளியிடப்பட்டது. பெண்களின் பெருமைகளைப் போற்றும் வகையில், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஷாஷா திருப்பதி குரலில் அமைந்திருக்கும் இப்பாடலை ரசிகர்களும் பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள்.

கவிஞர் வைரமுத்துவின் இளைய மகன் கபிலன் வைரமுத்து பிகில் குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதிக இன்ஸ்பிரேஷன் நிறைந்த பாடல் என நடிகர் சாந்தனு பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தப் பாடலைக் கேட்கும் போது பெருமையாக இருப்பதாக நடிகை அதுல்யா ரவி தெரிவித்துள்ளார்.

மெர்சல் படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணியின் வாழ்த்து!

சமீப காலங்களில் பெண்களைக் கொண்டாடும் இப்படியான பாடல் எதையுமே கேட்கவில்லை என அனுஷா தயாநிதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பெண்களும், ரசிகர்களும், பிரபலங்களும் ‘சிங்கப்பெண்ணே’ பாடலை கொண்டாடி வருகின்றனர்.

Actor Vijay A R Rahman Atlee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment