மம்மூட்டி, மோகன்லால், விஜய், அஜித்: முன்னணி நடிகர்களின் ’பாடிகார்ட்’ திடீர் மறைவு

மலையாள திரையுலகில் முதன் முதலில் செக்யூரிட்டி டீமை அறிமுகப்படுத்தியவரும் தாஸ் தான்.

By: June 15, 2020, 12:08:27 PM

நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி, விஜய், அஜித் சூர்யா உள்ளிட்ட பிரபல ஹீரோக்களுக்கு பாடிகார்டாக இருந்த மரநல்லூர் தாஸ் திடீரென திருவனந்தபுரத்தில் மரணமடைந்தார்.

’வாழ்க்கை யாருக்காகவும் சாவதற்கு அல்ல’ : ஐஸ்வர்யா ராஜேஷ் அட்வைஸ்

தனியார் பாதுகாப்பு குழுவை நடத்தி வந்த தாஸ், பல முன்னணி நடிகர்களை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகித்தார். மோகன்லால், மம்மூட்டி, விஜய், அஜித் சூர்யா உள்ளிட்ட நடிகர்களுக்கு படபிடிப்பு தளங்களிலும், வெவ்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் பாதுகாப்பை வழங்கி வந்தார். மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், பலனளிக்காமல் உயிரிழந்தார்.

மலையாள திரையுலகில் முதன் முதலில் செக்யூரிட்டி டீமை அறிமுகப்படுத்தியவரும் தாஸ் தான். பின்னர் மம்மூட்டி உள்ளிட்ட மலையாள முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் பணியாற்றிய அவர், பிறகு அவர்களுக்கான பாடிகார்டாகவும் பணியாற்றினார். இதற்கு வரவேற்பு கிடைக்கவே, தாஸை பெரும்பாலான நடிகர், நடிகைகள் தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர்.

இதையடுத்து நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் உட்பட பல்வேறு நடிகர்களுக்கு பாடிகார்டாக இருந்துள்ளார். இவர் தனது குழுவுடன் இந்த ஹீரோக்களின் படப்பிடிப்பு தளங்களுக்கும் பாதுகாப்பாளராக இருந்துள்ளார். பல ஹீரோக்களுடன் நேரடி தொடர்பு கொண்ட தாஸ் அருகில் இருந்தால் தான், நடிகர், நடிகைகள் தங்களுக்கு பாதுகாப்பு என்றே கருதுவார்கள்.

உயிரைக் காப்பாற்றும் தடுப்பு மருந்து: ரூ. 2.25 லட்சம் கொடுத்து உதவிய காவல் ஆணையர்

இந்நிலையில், பாடிகார்ட் தாஸ் மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். நடிகர்கள் பிருத்விராஜ், குஞ்சாக்கோ போபன், துல்கர் சல்மான், மம்மூட்டி உள்ளிட்டோரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 25 ஆண்டுகளாக பாடிகார்டாக இருந்த தாஸின் மறைவு மலையாள சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bodyguard maranallur das death tamil malayalam cinema

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X