scorecardresearch

54 வயதில் நடிகர் இர்பான் கான் மரணம்: அதிர்ச்சியில் பாலிவுட்

Irrfan Khan Latest News Today: இர்ஃபான் ஒரு வலிமையான ஆத்மாவாக இருந்தார். கடைசி வரை போராடிய ஒருவர். தன்னருகில் வந்த அனைவருக்கும் எப்போதும் உத்வேகமும், உற்சாகமும் அளித்தார்.

irrfan khan death, irrfan khan news, Bollywood Actor Irrfan Khan Passed Away
Bollywood Actor Irrfan Khan Passed Away

Irrfan Khan News Today: நடிகர் இர்பான் கான் மும்பையின் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் இன்று (புதன்கிழமை) காலமானார்.

டிடி-க்கு என்ன ஆச்சு? ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்த படம் உள்ளே

நடிகரின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில், “நான் சரணடைந்துவிட்டதாக நம்புகிறேன்” என புற்றுநோயுடனான தனது சண்டையைப் பற்றி, அவர் 2018-ல் இதயம் திறந்து எழுதிய குறிப்பில் முக்கியமானவை. சில சொற்களைக் கொண்ட மனிதனும், தனது ஆழ்ந்த கண்களால் அமைதியை வெளிப்படுத்தும் நடிகரும், திரையில் மறக்க முடியாத நடிப்பும்… இந்த நாள், அவர் காலமான செய்தியை நாம் வெளிப்படுத்த வேண்டும் என்பது வருத்தமளிக்கிறது.

இர்ஃபான் ஒரு வலிமையான ஆத்மாவாக இருந்தார். கடைசி வரை போராடிய ஒருவர். தன்னருகில் வந்த அனைவருக்கும் எப்போதும் உத்வேகமும், உற்சாகமும் அளித்தார். அரிய வகை புற்றுநோயின் பாதிப்பால் 2018 முதல் பாதிக்கப்பட்டிருக்கும் அவரது உயிர் இன்று பிரிந்தது. அவர் இறுதி வரை போராடினார். அவரது அன்பால் சூழப்பட்ட, அவர் மிகவும் அக்கறை காட்டிய அவரது குடும்பத்தினரை விட்டு விட்டு, அவர் சொர்க்கத்திற்கு சென்றுவிட்டார். அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். “நான் முதல்முறையாக வாழ்க்கையை ருசிப்பது போல, அதன் மந்திர பக்கமும்” என்று இறுதியாக அவர் கூறினார்.

திரைப்பட இயக்குநர் ஷூஜித் சிர்கார், ட்விட்டரில் இர்பானின் மறைவு செய்தியை பகிர்ந்து கொண்டார். “என் அன்பு நண்பர் இர்பான். நீங்கள் சண்டையிட்டு போராடி போராடி போராடினீர்கள். நான் எப்போதும் உங்களைப் பற்றி பெருமைப்படுவேன்.. நாம் மீண்டும் சந்திப்போம் .. சுதாபா மற்றும் பாபிலுக்கு இரங்கல்.. சுதாபா நீங்களும் போராடினீர்கள். அமைதி மற்றும் ஓம் சாந்தி. இர்பான் கானுக்கு வணக்கம்” என்று ட்வீட் செய்துள்ளார்.

பெருங்குடல் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏப்ரல்-28 அன்று இர்ஃபான் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், நடிகரின் உடல்நிலை மோசமடைந்தது, ஏப்ரல் 29 அன்று தனது இறுதி மூச்சை சுவாசித்தார்.


ஐ.இ. தமிழ் முகநூல் நேரலை : இன்று மாலை 05:00 மணிக்கு நம்முடன் பேசுகிறார் கவிஞர் சினேகன்

2018 ஆம் ஆண்டில் நியூரோஎண்டோகிரைன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதிலிருந்து இர்ஃபான் கானின் உடல்நிலை நலிந்தது. அவர் சிகிச்சைக்காக அடிக்கடி லண்டனுக்கு சென்று கொண்டிருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக இர்ஃபானால் தனது கடைசி படமான, ’ஆங்ரேஸி மீடியத்தை’ கூட ப்ரொமோட் செய்ய முடியவில்லை.

30 ஆண்டுகள் சினிமா வாழ்க்கையில், இர்ஃபான் கான் 50 க்கும் மேற்பட்ட இந்திய படங்களில் நடித்தார். ஒரு தேசிய விருதையும், நான்கு பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். 2011-ஆம் ஆண்டில், கலை மற்றும் சினிமாவில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்ததற்காக இர்ஃபானை இந்திய அரசு பத்மஸ்ரீ விருதளித்து கெளரவித்தது. விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களால் விரும்பப்பட்ட இந்த நடிகர், அவரது பல்துறை மற்றும் சிரமமிக்க நடிப்பால் பெரிதும் பாராட்டப்பட்டார்.

இர்ஃபானுக்கு மனைவி சுதாபா சிக்தர், மற்றும் அவரது இரண்டு குழந்தைகள், பாபில் மற்றும் அயன் ஆகியோர் உள்ளனர்.

இர்பான் கான் மறைவுக்கு சினிமா ரசிகர்களும், பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

நரேந்திர மோடி தனது ட்விட்டரில், “இர்பான் கானின் மறைவு சினிமா மற்றும் நாடக உலகிற்கு பெரும் இழப்பாகும். பல்துறை நடிப்பின் மூலம் வெவ்வேறு தளங்களில்  அவர் நினைவுகூரப்படுவார். எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுடன் உள்ளன. அவரது ஆன்மா அமைதியாக இருக்கட்டும் ”என்று  பதிவு செய்துள்ளார்.

 

 

 

 

நடிகர் கமல் ஹாசன் தனது ட்விட்டரில்,” மிக சீக்கிரமாக சென்றுவிட்டீர்கள் இர்ஃபான் ஜி. உங்களுடைய நடிப்பைக் கண்டு வியந்திருக்கிறேன். எனக்கு தெரிந்த தலை சிறந்த நடிகர்களில் நீங்களும் ஒருவர். நீண்ட காலம் நீங்கள் இருப்பீர்கள் என்று விரும்பினேன். நீங்கள் நீண்ட வாழ்வுக்கு தகுதியானவர். இழப்பை தாங்கும் பலம் உங்கள் குடும்பம் பலமாகட்டும்” என்று  பதிவிட்டுள்ளார்.

 

 

 

சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டரில், ” இர்பான் கான் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது . அவரது ஆன்மா அமைதியாக இருக்கட்டும்.  அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.

 


“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”    

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bollywood actor irrfan khan passed away due to rare cancer in mumbai

Best of Express