ஊரடங்கால் படபிடிப்பு இல்லை: பணத் தேவைக்காக பழம் விற்கும் பாலிவுட் நடிகர்

பட வாய்ப்பு இல்லாத காரணத்தால், தனது அன்றாட தேவைகளுக்காக தெருவில் பழம் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

By: Published: May 22, 2020, 10:01:42 AM

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் தற்போது நான்காவது ஊரடங்கு முறை அமல் படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஊரடங்கில் சில செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. தமிழகத்தில் சின்னத்திரை படபிடிப்புகளுக்கு அனுமதி அளித்து நேற்று அறிக்கை விடப்பட்டிருந்தது.

ஏர்டெல் ரூ2,498 புதிய பிரீபெய்ட் திட்டம்: இது ஜியோ ரூ2,399-ல் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

இதற்கிடையே வேலை இல்லாததால், தினசரி ஊதியம் பெறும் திரைப்படத் தொழிலாளர்களும், நடிகர்களும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அமைப்பினை சேர்ந்தவர்களும், பெரிய நடிகர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பட வாய்ப்பு இல்லாத நடிகர் ஒருவர் தெருவில் பழம் விற்கும் செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்துள்ள ‘ட்ரீம் கேர்ள்’ படத்தில் நடித்துள்ளவர் சோலங்கி திவாகர். இவர் கொரோனா வைரஸ் காரணமாக பட வாய்ப்பு இல்லாத காரணத்தால், தனது அன்றாட தேவைகளுக்காக தெருவில் பழம் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பாஜக.வில் வி.பி.துரைசாமி: அதிகாரபூர்வ அறிவிப்பு

இதுகுறித்து முன்னணி செய்தி தளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ”பட வாய்ப்பு இல்லாத காரணத்தால், குடும்பச் செலவு, வாடகை உள்ளிட்ட தேவைகளுக்காக பழம் விற்பதாக” தெரிவித்துள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Bollywood actor solanki divakar sells fruits for financial need

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X