மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் வி.பி.துரைசாமி

காலை 9 மணிக்கு தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் மாநில தலைவர் முருகனை சந்தித்து, அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொள்கிறார் விபி துரைசாமி.

VP Duraisamy selected as BJP deputy leader
VP Duraisamy selected as BJP deputy leader

திமுக துணை பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி, நேற்று அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று அவர் பாஜக-வில் இணைகிறார்.

8.19 கோடி பேருக்கு தலா ரூ2000 பட்டுவாடா: நீங்கள் இன்னும் இந்தத் திட்டத்தில் சேரவில்லையா?

பாஜக தலைவர் முருகனைச் சந்தித்ததாலும், திமுக தலைமைக்கு எதிராகப் பேட்டி அளித்ததாலும் முன்னாள் துணை சபாநாயகரும், திமுக துணை பொதுச்செயலாளருமான வி.பி.துரைசாமியின் பதவி நேற்று பறிக்கப்பட்டது. அவருக்குப் பதில் அந்தியூர் செல்வராஜ் திமுக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தான் பாஜகவில் இன்று இணைய இருப்பதாக விபி துரைசாமி தெரிவித்துள்ளார். திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்குமாறு தலைமைக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். காலை 10 மணிக்கு தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் மாநில தலைவர் முருகனை சந்தித்து, அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் வி.பி.துரைசாமி. ”பாஜகவின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டால் தான் நாட்டை காப்பாற்ற முடியும். பாஜகவின் கொள்கைகளை ஏற்றே அதில் இணைகிறேன். தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை நேரில் சந்தித்து கட்சியில் இணைகிறேன்” என்றும் தெரிவித்தார். இந்நிகழ்வைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார், பாஜக மாநில தலைவர் எல்.முருகன்.

உம்பன் புயல் சேதம்: மேற்கு வங்கத்தில் இன்று மோடி ஆய்வு

திமுகவில் துணை சபாநாயகராகப் பொறுப்பு வகித்த வி.பி.துரைசாமி, மாநிலங்களவை உறுப்பினராவும், திமுகவின் முக்கியப் பொறுப்பான துணை பொதுச்செயலாளர் பொறுப்பிலும் இருந்தவர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Removed from dmk vp duraisamy joins bjp party today

Next Story
பத்தாம் வகுப்பு தேர்வை எப்படி நடத்துவீர்கள் – சென்னை உயர்நீதிமன்றம் கேள்விTamil News Today Live
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com