Bollywood News : பாகி 2 நடிகை திஷா பதானி பாலிவுட்டில் வளர்ந்துக் கொண்டிருக்கும், நம்பிக்கைக்குரிய முகங்களில் ஒருவர் என்றால் அது மிகையாகாது. இயக்குநர் மோஹித் சூரி இயக்கிய ’மலாங்’ படத்தில் ஆதித்யா ராய் கபூருக்கு ஜோடியாக கடைசியாக நடித்திருந்தார்.
Magarasi : இன்னுமா ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துக்காம இருக்காங்க?
அந்தப் படத்தில் ஸ்கிரீன் பிரெசன்ஸ் மற்றும் நகைச்சுவையான நடன அசைவுகளுக்காக வெகுவாக பாராட்டப்பட்டார் திஷா. திரைப்படத் துறையில் மிகவும் பிரபலமான சில நடிகர்கள் மற்றும் நடன இயக்குனர்களுடன் திஷா நடனமாடுவதை அவ்வப்போது காணலாம். எங்கு காண்பது என்கிறீர்களா ? திஷா பதானியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் நடனமாடும் நிறைய வீடியோக்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை நாங்களே இங்கு பதிவிடுகிறோம்.
டைகா ஷெராஃப் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடித்த பாகி 3 படத்தில், ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார் திஷா. இதைத் தொடர்ந்து, ‘ஏக் வில்லன் 2’ படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். 2014-ஆம் ஆண்டு ’ஏக் வில்லன்’ படம் வெளியானது. தற்போது அதன் 2-ம் பாகத்தில், ஆதித்யா ராய் கபூர் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். ’ஏக் வில்லன் 2’ படத்தினை மோஹித் சூரி இயக்குகிறார்.
Thenmozhi BA : ம்ஹூம்.. இந்த அப்பத்தா சரியில்லை.. செய்யற வேலையைப் பாருங்க!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"